என் முதல் காதல் ...!




மண் வாசம் மாறா மன்னவனே உன்னை 
இந்தப் பெண் வாசம் சூடிக்கொள்ள ஏங்குகிறது -இனி 
நம் வாசம் காற்றில் கலந்து உலகில் 
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் காண்போம் வா 

கவிதையில் மறைத்தேன் என் காதலை 
கனவினில் சிரித்தேன் நம் மோதலை 
உணவினில் சுவைத்தேன் உன் பெயரையே 
உயிரினில் அரைத்தேன் உன் கண்களை 

நினைவிலும் நிஜத்திலும் நீயானாய் என்றும் 
நீங்கா இடத்தில் காதல் தேன்னானாய் உன்னை 
அருகினில் அழைத்திட தைரியமில்லை 
அதானால் வெறுத்திட என் உயிரில்லை - நீ 

மண நாள் ஒன்று தரும் வரை இந்த 
மானும் உருகுது முதல் முறை 
பிழை ஏதும் கூறாமல் வழி விடு என் 
பின்னால் உன் பெயர் வரைந்திடு அன்பே ...! 



2 comments:

  1. ஆஹா... வரிகள் உருக வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா.

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145