நாகரீக மோகம் ...!


இன்று ....
சட்டையெல்லாம்
குட்டையாய் மாறும்
பட்டிக் காட்டில் கூட
கட்டி போட்டு காயிகிறது
கன்னியரின் மானம் ...!

பட்டு கட்டி
எட்டு வைத்த பாதமும்
பொட்டு வைத்த நெற்றியும்
கட்டி வைத்த கூந்தலில்
கொட்டி வைத்த மல்லியும்
சற்றுமற்றும் போகிறது

முற்றுமில்லா வாழ்க்கையில்
நுழைந்த நாகரீக உலகம்
கற்று தந்தும் மாறவில்லை
கண்ணில் கெட்டும் கூட
திருந்தவில்லை

தில்லையாடி பொம்மையாய்
கண்ணை கட்டி காட்டில்
விட்டார் போல்
பொன்னை மாட்டி மயங்குகிறார்கள்
மண்ணைக் கட்டும் மனித
உடலுக்கு மரணத்தை மறந்து ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு