கவிதை துணுக்குகள்...!


இதயம் 
-----------
ஆறடி மனிதனின் 
ஆயுள் ரேகை..!
மரணம் 
-----------
தினமும் பிறக்கும் அதுவும் 
இறக்கும் ....!
முகம் 
---------
யுகம் யுகமாய் பேசும் 
மொழி ....!
உணர்வு 
--------------
தடுமாறும் வயதில் உறுமாறும்
காதல் இதயம் ....!
காதல் 
-----------
சுடும் இரத்தத்தில் 
படும் யுத்தகாயம் ...!
மழை 
----------
அனலாய் காயிந்த நிலத்திற்கு 
புலனாய் பிறந்த தாகம் ....!
மேகம் 
------------
பார்த்து மட்டுமே ரசிக்கும் 
பவளப் பனிமழை....!
சிற்பம் 
-------------
காலால் மிதிபடும் - பின்
காவியமாய் ஒளிவிடும் ....!
பேனா
-----------
எழுத்துக்கள் பிறக்கும் கற்பக 
விருச்சம் ....!
மௌனம் 
-----------------
அன்பின் ஆழத்தின் 
அடிமைச்சங்கிலி ....!4 comments:

 1. ஒவ்வொன்றையும் அழகாக பட்டியலிட்டு அருமையாக சொல்லி விட்டீர்கள்...

  மிகவும் பிடித்தது : இதயம்-மரணம்-மௌனம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. அருமையான கவித்துணுக்குகள்! தினமும் பிறக்கும் அதுவும் இறக்கும்! சிறப்பான வரிகள்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  காசியும் ராமேஸ்வரமும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
  உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்பு மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 22

உளிகள் சத்தமிட்டு போதும்  விழிகள் திறக்காது  சிலையாகவே நிற்கிறாள்  கலியுக கண்ணகி