உயிர்களே நிஜமாகுங்கள்...!


விண்ணில் தோன்றி 
மண்ணில் உதிர்ந்த 
மலர்களே 

உங்களில் எத்தனை 
வண்ணங்கள் 
அத்தனை வண்ணங்களும் 
மலர்வது 
குருதியென்னும் சுருதியின் 
விழியில் இருந்து

ஏன் இந்த வேற்றுமை 
மண்ணுக்கு உரமாகும் 
மானிட உடல் 
பொன்னும் பொருளும் 
சூட்டிப் போதை 

கொண்ட வாழ்க்கையில் 
அந்நியச் செலாவணிகளுக்கு 
ஆதிக்கம் தந்து 

பொன்னும் பொருளுக்கும் 
பொருத்தமில்லா ஏற்றம் தந்து 
எண்ணி எண்ணி 
வாழும் ஏழைகளுக்கு 
வறுமை தந்து கொடுமைதந்து 
வாழவைப்பது 
தமிழரின் பண்பாடா

மலர்களே யோசியுங்கள் 
நொடிப் பொழுதில் 
நூறும் போகலாம் ஏன்
கோடியும் போகலாம் எல்லாம் 
சேர்வது ஒரே மண்ணில் 

மண்ணுக்கு இறையாகும் உயிர்களே 
ஏன் ஜாதி மத வெறியால் 
சமத்துவம் இழந்து சாக்கடையாய் 
நாறுவதை நிறுத்துங்கள்

சந்தனமாய் 
நறுமணம் வீசுங்கள் 
காதல் கொழுந்தில் 
கருவறைக்குச் செல்லும் 
காதலர்களை வெறுக்காதீர்கள் 

சுற்றம் சூழ வாழ்த்தி 
வழியனுப்புங்கள் 
அப்போது உயிர்கள் ஜெனிக்கும்
சந்ததிகள் பெருகும் 

அதை விட்டு 
ஜாதி வெறியால் 
சமாதியின் தோட்டத்தில் 
கண்ணீர் துளிகளால் 
மலர்வளையம் சூடுவதால் 
என்ன பயன் 

பயன் கொண்ட உயிரை 
பால் படுத்தாமல் 
பண்புடன் வாழக்கத்துக் 
கொள்ளுங்கள் 

அப்போதாவது சுகமான 
இந்தியாவில் 
ஆண்பால் பெண்பால் 
ஒற்றுமையைத் தவிர 
வேறு எந்த வேற்றுமையின்றி 

அன்பு தோட்டத்தில் ஓளி வீசும் 
வண்ண மலர்களாய் 
வாசம் வீசுவோம் ...!No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு