அங்கம் பதித்த தங்கமே ...!


காற்றாக திரிந்து
கடலாக விரிந்து
மலையாக உயர்ந்து
ஒளியாய் வளர்ந்து
சிலையாய் நிக்கிறேன்
கண்ணே உன் முன்னால்

அதில் கொடியாய் கட்டிய
ஆடையில் என்னை
விலையாய் விற்று விடாதே
அன்பே

உன் விழியால்
பொழியும் ஒளியில்
காதல் திரியால் என்னில்
விளக்கேற்ற வருவாயா
சொல்

மனதால் மாலை சூடுகிறேன்
என் மஞ்சத்தில்
கொஞ்சி விளையாடும் மங்கையாய்
அங்கம் பதித்த தங்கமே உன்னை ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...