அங்கே ஒரே மாடி வீடுகள் கூரை வீடே இல்லை அதைக் கண்டு ஆச்சிரியத்தில் மகிழ்ந்தாலும் அங்குள்ள அழிவைக் கண்டு கண்ணீர் வடித்தாள் காரணம் .....
படிப்பறிவில்லா மக்கள் எல்லாம் நாகரீகத்தில் மாறினாலும் விவசாயத்தில் கோட்டை விட்டார்கள்
அதானால் மும்மாரிப் பேய வேண்டிய "மழை" பேயாமலே போனதால் விவசாய நிலங்கள் எல்லாம் தருசு நிலமாய் கிடந்தது. இந்த நிலை வரக் காரணம் எது என்றால் நம் பழக்க வழக்கங்கள் தான்
நாம் ஒரு நாயை வளர்த்தாலும் அதை எந்த முறையில் பழக்க படுத்துகிறோமோ அந்த முறைக்கே அதன் பண்பு மாறிவிடுகிறது. இன் னும் சொல்லப் போனால் ஆடு மாடு கழுதை குதிரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் குழந்தைகள் கூட இன்றைய இயற்கைக்கு மாறாகவே வளர்கிறார்கள் வாழ்கிறார்கள் இது தான் உண்மை.
இதே போல் தான் இன்றைய பூமியும் மாறிவிட்டது எப்படி தெரியுமா....?
நெற்பயிர் விளைய வேண்டிய இடத்தில் வீட்டு மனைகள் பெருகியதால் அந்த கிராம மக்கள் விவசாயத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் மழையும் அவர்களை மறந்து விடுகிறது.
அதே போல் ஒவ்வொரு காய் கரிகளுக்கு ஏற்ப காற்றின் மணத்தில் வானம் காதல் கொள்ளும் அப்போது அந்த "வாசத்தில் மயங்கி மழையாக பொழியும்" என்பது நம் முன்னோர்கள் சொன்ன வேதம். ஆனால் இந்த கிராம மக்கள் மற்றப் பயிர்கள் விளைய வேண்டிய காலத்தில் வெறும் தருசு நிலமாய் விட்டு விடுகிறார்கள்.
இப்படியே ஆண்டு தோறும் செய்வதால் காற்றின் வரப்பு குறைகிறது இயற்கை சுழல்கள் தன் பண்பை மாற்றிக்கொண்டு அவர்கள் சூழலுக்கேற்ப தன் பருவ மழையை மாற்றிவிட்டது மேலும் அவர்கள் எப்போது பயிர்கள் விளைவிக்கிறார்களோ அப்போதைக்கு மழை பொழியும் பண்பு அந்த மண்ணில் மாறிவிட்டது.
இதனால் தன் தேவைக்கு மேல் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் அங்கே கிரிக்கெட் கபடி, கொட்டங்குச்சி இப்படி பல ரக விளையாட்டுகள் விளையாடும் இடமாகவே பயன் படுத்த தொடங்கினார்கள். இதனால் மழை வரத்து குறைந்து அந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது இதைக் கண்ட ராணி அவர்கள் செய்யும் தவறுகளை அவர்களுக்கு விலக்கினாள் அவர்களும் தன் தவறை உணர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள்.
ஆனால் வீடுகளை அழித்து மீண்டும் விவசாயம் செய்தால் விவசாயம் வருமா....? இல்லை மழை தான் பொழியுமா...? என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளே வந்தது. உடனே தன் தவறுகளை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அப்போது தான் முன் போல் வான் மகள் மாறி மும்மாரி பருவ மழை பொழிவாள் என்று நம்பினார்கள்.
உடனே தங்கள் ஊர் போல் மற்ற ஊர்களும் மாறிவிட்டால் அடுத்து வரும் ஜென்மங்களில் சோறும்,தண்ணி இல் லாமல் உலகமே அழியும் தருவாய் வந்துவிடும் என்று உணர்ந்தார்கள். மற்றவர்களையும் தன் தவறை உணரும்படி ஊர் ஊராய் சென்று விழிப்புணர்வு செய்தார்கள்.
இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் நல்லவேளை இந்த ராணி விவசாயத்தை கற்று வந்ததாள் எங்கள் ஜென்மங்கள் இன்னும் பசி பட்டினி மழை என்ற பஞ்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது மேலும் எங்கள் பிள்ளைகளையும் விவசாய படிப்புக்கே அனுப்புவோம் என்று சபதம் செய்ததுடன் ராணிக்கு நன்றி கூறி னார்கள். அவளும் நான் என் கடமையை தான் செய்தேன் என்றும் தான் கற்ற கல்விக்கு நன்றி கூறினாள்.
Supper Kavithai eluthiya katurai arumai ?
ReplyDeletethanks da thambi
ReplyDelete