ஹிஷாலீ ஹைக்கூ - 39

எம்மதமும் சம்மதம்
உணர்த்தியது 
முதியோர் இல்லம்...!

சமாதியில் கூட 
சமத்துவமில்லை 
சாதி மதம் பேதம்...!

தினமும் 
அன்னதானம் 
வேலைக்காரி கையில்...!

திட்டமிட்ட சலுகைகள் 
வசூல்
வரி விலை ஏற்றத்தில்...! 

தீயிக்கு இரையாகவில்லை 
இரவு 
திருப்தியில் நிலா...!

உணர்வை 
கனவுக்கு விற்றாள்  
முதிர்கன்னி...!


4 comments:

  1. உணர்வை
    கனவுக்கு விற்றாள்
    முதிர்கன்னி...!

    நச்சுன்னு ஒரு வரி.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. சிறப்பான படைப்புக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145