அவனுக்கு இருபது அவளுக்கு இருபத்தி நான்கு...!


ஹலோ நலமாடிப் பெண்ணே 
உன் திருமணம் எப்போ என்று 
கடல் தாண்டி அழைத்தவனிடம் 
காதில் சொன்னேன் 

மணமாகி மஞ்சம் கொண்டு 
குணமான பிள்ளைகள் இரண்டுடன் 
வளமான வாழ்வு வாழ ஆசை 
அதற்கேற்ற ராமன் எங்கே என்று 
காத்திருக்கிறேன்
நீ சொல் உன்  மணப்பெண் யார் என்று... 

பதில் சொன்னான்
உன்னூறு பெண் பார்த்து 
எண்ணூறு  ஆசையெல்லாம்  
கண்ணூற காதல் கொண்டு 
தொண்ணூறு வயதுவரை என் 
துணைவியுடன் வாழ ஆசை என்றான் 

உள்ளம்  ஒன்றானது காதல் ரெண்டானது
அவன் தான் நான் என்று 
நான் தான் அவள் என்று 
சொல்ல தடுத்தது வயது 
சொல்லாமலே படுத்துது மனது...! 

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...