ஹிஷாலீ ஹைக்கூ - 29இளைய கவிஞர்களின்   
தமிழ் ஓவியம் 
மின்மினிகள் 

காரிருள் பூக்களுக்கு 
கலங்கரை விளக்கு 
மின்மினிகள் 

பசிக்கு மின்னியது 
மின்மினிகள் 
பரவசத்தில் விலங்கினங்கள் 

வான் நட்சத்திரங்கள் 
பூமிக்கு வருகை 
மின்மினிகள் 

முனிவர்களின் 
ஆலய மணி ஓசை
மின்மினிகள் 

தேவர்களுக்கு 
விடியலை உணர்த்தியது   
மின்மினிகள் 

மலைக் கள்ளன் திருட்டை 
வெளிச்சம் போட்டு காட்டியது 
மின்மினிகள் 

வன வாசிகளுக்கு  
இயற்கை  மின் விளக்கு 
மின்மினிகள் 

ராமன் சீதை வனவாசத்தின் 
அகல் விளக்கு 
மின்மினிகள் 

இந்திரன் சந்திரன்
போட்டியாய் 
உயிருள்ள மின்மினிகள் 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...