சென்ரியுவாய்த் திருக்குறள் -131-135

குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்கம் காக்க 
உயிர் விட்டாள் 
தாசியின் மகள் 

குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை.

பிச்சை எடுத்தாலும் 
எச்சில் ஆகா ஒழுக்கம் 
மறுமைக்கு துணை  

குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்.

உயர்ந்தவர் இழிந்தவர் 
எடுத்துரைத்தது 
ஒழுக்கம் 

குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

குலம் சிறக்க 
தொழில் மறந்து கல்
ஒழுக்கம் தவறாமல் நில் 


குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

உயர் குலத்தின் பெருமை 
நல்ல பொறாமை 
நல்லொழுக்கம் 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...