சென்ரியுவாய்த் திருக்குறள் - 41 to 50



குறள் 41: 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.
ஹிஷாலீ சென்ரியு 
மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!
மூவழி சொந்தம் 
துணை நிற்பது
இல்லறம்...!
கடமையின் s
முதல் படி
மூவர் அறப்படி...!



குறள் 42: 
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம் 
இனிக்க 
ஈகை நன்று...!
துறந்தவர் வறியவர் 
உதவுபவன் 
நல்ல கணவன்...!
மறைந்த தாய் 
வறுமை வாழ்க்கை 
கணவனே கண்கண்ட தெய்வம்...!

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
ஹிஷாலீ சென்ரியு
மூத்த தலைவர்கள் 
வாழ்வின் முதுகெலும்பு 
அறநெறி தவறாமை...!
வான் வாழ் மக்கள் 
செய்யா உதவி
ஏழைக்கு உதவுவது சிறப்பு...!
மறைந்த தெய்வங்கள் 
நிறைந்த விருந்தோம்பல் 
சிறந்த இல்வாழ்க்கை...!

குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
ஹிஷாலீ சென்ரியு
கோடி பொருள் செல்வம் 
குறைவில்லா பண்பு 
வாழ்வின் ஒழுக்கம்...!
காக்கையின் குணம் 
பழியில்லா பண்பு 
அழியா ஒழுக்கம்...!
பாவமில்லா பொருள் 
அழியா புண்ணியம் 
பரம்பரைக்கே...!

குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.
ஹிஷாலீ சென்ரியு
இல்லறம் 
நல்லறம் பெற 
தூய அன்பு போதும்...!
பயன் அறியா 
பண்பு செய்தால் 
இல்வாழ்க்கை செழிக்கும்...!
ஈதல் குணம் 
சுற்றத்தின் அன்பு 
இனிய குடும்பம்...!


குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.
ஹிஷாலீ சென்ரியு
சிரம் தாழ்த்தி 
சினமறியா இல்வாழ்க்கை 
ஏழுஜென்ம பயன்
அறநெறி பயன்
இடையூறு இல்லா 
இல்வாழ்க்கை 
துரவரமற்ற முனிவர் 
தூய இல்லறம் 
மக்கள் பேர்


குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.
ஹிஷாலீ சென்ரியு
இல்வாழ்க்கையின் 
சிறந்த இலக்கண
நல்லோர் போற்றுவது 
அறம் அறிந்து 
இயல்போடு நடப்பவன் 
அதிசிய மனிதன்
கடவுள் மனைவி 
இரண்டும் 
அறநெறி கண்கள்

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.
ஹிஷாலீ சென்ரியு
துறவி நோன்பு 
பிறவி பயன் 
கிட்டா பேர் புகழ்
தன் அறம்
பிற அறமாகக்கடவுக 
வாழ்க்கை வளம்பெறும்
துறப் பெருமையைவிட 
அற இல்வாழ்க்கை 
ஆண்மையின் வலியது

குறள் 49:
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
ஹிஷாலீ சென்ரியு
கணவனின் தாரகமந்திரம் 
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி
குற்றமற்ற இல்வாழ்க்கை 
குறைவில்லா நன்மை 
பிறர் பழியா நன்று 
கோவலன் 
கண்ணகி 
பழிவாங்கியது மதுரை

குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
ஹிஷாலீ சென்ரியு
அறநெறி தவறா
கணவன் மனைவி 
வானின் தேவர்கள் 
அறத்திற்கு இணையானது 
தெய்வத்தின் அருங்குணங்கள் 
பொருந்திய இல்வாழ்க்கை 
பூமியின் ஒழுக்கம் 
வானில் மின்னுகிறது 
கடவுள் வடிவில் மனிதன்






No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145