ஈழ அழுகுரல்......!

மயானமாய் மாறிய 
மரணக்குழியில் 
அம்மனமாய் 
அழுகிய ஈழ உடல் 

சிங்களத்து முள்வேலியில் 
சிறைக்கெஞ்சிய உயிர் 
வேடந்தாங்களாய் 
வெளியேறிய சாபம் 

கோழி கூடாரத்தில் 
கொத்தி தின்னும் 
பருக்கையாய் 
பசியை மறந்த ஈழபாவிகள் 

தாய்பால் அருந்திய 
தமிழன் தலையில்லா 
குருதிப்பால் 
குடிக்கும் ஈழத்து மண் 

கழுகுக்கும் காக்கைக்கும் 
இரையாய் கருகிய உடல்கள் 
இரத்தக் கரைகளாய் 

உறவை பார்த்து அழுகும் 
பச்சிளம் குமரிகள் 
உடுத்த ஆடையில்லா 
வெக்கத்தில் 
முகத்தைமூடும் 
ரத்தவிரல்கள் 

சிங்கள வேலிகளுக்கு 
சரீர பின்னலாய் 
தன் மூச்சை நிறுத்த 
சுதந்திரமில்லை 
சுதந்திர தேசத்தில் 

ஒற்றை கால் 
மரத்தைப் போல் 
சட்டைக்கால் போட்ட 
சாம்பவான்கள் 
நாடோடியாக 

ஆறடி தோண்டவில்லை 
அழுவதற்கும் யாருமில்லை 
அடைக்கலம் பூண்ட 
ஈழனுயிர் 
அணையா விளக்காய் 

உறவே அறியா உருவத்தில் 
உதிர்ந்து தொங்கிய 
மொட்டை சரீரங்கள் 

விடியும் நாளை நோக்கி 
விழித்திருக்கும் 
ஊமை விழிகள் 

4 comments:

 1. Supper En makal padum Thuyaram kandan unkalin kaviyai kanda pothu ?

  ReplyDelete
 2. appadiya thambi anpu nanrikal

  ReplyDelete
 3. உணர்ச்சி பூர்வமான வரிகள்... இல்லை இது வலிகள்...

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றிகள் அகல்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...