கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே ...!



பொழுது விடியும் முன்னெழுக  
    புழுதிப் பறக்க ஓடிடுக 
குளிர்ந்த நீரில் குளித்திடுக 
    குல தெய்வத்தை வணங்கிடுக 
காலை உணவு புசித்திடுக 
    கடமை யாற்றப் புறப்படுக 
அறிவு சிறக்கப் படித்திடுக 
    ஆசிரியரை என்றும் மதித்திடுக 
கண்ணீர் துடைக்கப் பழகிடுக 
    கனிதரும் மரமாய் வளர்ந்திடுக 
காந்தி வழி நடந்திடுக 
    கர்ணன் புகழ் பாடிடுக  
காலம் தவறாது உழைத்திடுக 
    கருப்புப் பணத்தை ஒழித்திடுக 
பாவங்கள் செய்வதை நிருத்திடுக 
   பாரதி தமிழை போற்றிடுக  
ஆபத்து காலத்தில் உதவிடுக 
    அப்துல்கலாம் கனவை நிஜமாக்கிடுக 
அகிலம் செழிக்க மரம்நடுக  
    அத்திமரம் போல் இனித்திடுக 
ஏளனம் செய்வதை மறந்திடுக 
    ஏழைக்கு உதவ நினைத்திடுக 
சாலை விதியின் துணையோடு 
    சமூக நலன் காத்திடுக !

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய
கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய
 போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த
எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன்
எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

16 comments:

  1. அருமையான நற் கருத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன் அம்மா பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் பல
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
      என்றும் அன்புடன் உங்கள் ஹிஷாலீ

      Delete

  2. எனக்கு முதல் முறையாக மரபு கவிதை எழுதவாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா

      Delete
  4. நல்ல வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றிகள் நண்பரே

      Delete
  5. நல்ல கருத்துகளை நயமாய்த் தந்துள்ளமைக்கு பாராட்டு. வெற்றிபெற் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் சிறந்த பாராட்டுக்கும் எனது நன்றியை அன்பு கூர்ந்து செலுத்துகிறேன் ஐயா

      Delete
  6. இளைய சமூகத்திற்கு ஏற்ற கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றிகள் நண்பரே

      Delete
  7. இன்றைய உலகில் தேவையுள
    எழிலார் கருத்து விருத்தத்தில்
    குன்றில் மேலாம் விளக்காகக்
    கொடுத்தீர் வாழி நுந்தமிழும்
    வென்று வருக விரைந்தினிதே
    விரும்பும் மரபுத் தமிழாலே
    என்றும் கவிதைப் பணிசெய்க
    என்றன் மனத்தால் வாழ்த்துரைத்தேன்!

    தங்கள் பணி தொடர்க.

    போட்டிகளில் வெல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அழகிய நயத்துடன் பா வரிகளில் பாராட்டிய இந்த அன்பு உள்ளத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகள் உரித்தாக்குகிறேன்

      Delete
  8. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  9. எளிமையே அழகு என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு எனது நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145