வெண்ணிற தேவதை ...!




டக் டக்

யாரது ..?

அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் 

' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா 

இருக்கட்டும் ராகவி 

என்ன விசேசம் அக்கா 

அதுவா என் மகளுக்கு வருகிற 13 ம் தேதி கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் பருசம் போடும் போது தான் நீ வரல இப்பையும் வரலேனா எனக்கு கெட்ட கோவம் வந்திடும் அப்புறம் நான் பேசவே மாட்டேன் 

இல்லை அக்கா இந்த முறை நான் கண்டிப்பாக வருகிறேன் என்றாள் ராகவி 

நாட்கள் கடந்தது திருமண நாள் வந்தது தனது பட்டுப் புடவையை அயன் செய்து கொண்டாள் மற்ற நகைகளையும் அழுக் கெடுத்துக் கொண்டாள் அப்படியே பின்னோக்கிப் பார்த்தாள் கணவனுடன் தான் வாழ்ந்த இன்ப நினைவுகளை, எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடத்தில் நான் தனியாகவே எந்த ஒரு விசேசத்திற்கும் போனதில்லை அவர் இறந்த பிறகு முதல் முறையாக இப்போது தான் ஒரு திருமணத்திற்கு போகிறேன் எப்படி போவது என்று கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள்

அதே சமயம் பக்கத்துத் திண்ணையில் ஒரு கிழவியிடம் ஒரு பெண் உரையாடிக் கொண்டிருந்தாள் 

ஆயா நீங்கள் நாளைக்கு  திருமணத்திற்கு போறேங்களா? என்று அதற்கு அந்த ஆயா அறுத்துக் கெட்டவளுக்கு அங்க என்ன வேள நமக்கே தெரியாத இது தெரிந்துமா போகணும் என்றதும் 

அந்த பெண் இதே உங்க பேத்திக்கோ பேரனுக்கோ நடந்தால் போவேங்களா ? மாட்டேங்களா என்றாள், 

அதற்கு அந்த ஆயா அதெப்படி போகாமல் இருப்பேன் கண்ணடிப்பா போவேன் என்றார் 

அத்தகு அந்த பெண் இப்போது நீங்கள் சுமங்கலியா ஆயா என்றதும் அந்தக் கிழவிக்கு முகம் சுருங்கிவிட்டது 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவிக்கு கண்ணீர் ஆறாக ஓடியது. தனது மனதை மாற்றிக் கொண்டாள் மேலும் அக்கம் பக்கத்தினரும் இவளே ஒரு விதவை இவள் அங்கு போகமாலாமா என்று சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டாள் மறுநாள் காலையில் முகூர்த்தம் ராகவி கிளம்பவில்லை 

கனகா வந்தாள் ராகவி இந்த இந்த நெக்லசை போட்டுக்கோ என்றதும் 

ராகவிக்கு துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுதாள் 

கண்ணீரோடு வந்த ராகவியைக்  கட்டி அனைத்து அழுகாதே அடுத்தவர் ஆயிரம் பேசுவார்கள் அதற்கு நாம் செவிமடுக்க கூடாது உண்மையைச் சொல்லப் போனால் உன்னோட ஆசிர்வாதம் தான் என் மகளுக்கு பலிக்கும். 

கடவுள் யாருக்கும் கேட்ட வரத்தைக் உடனே கொடுக்க மாட்டார் சற்று காலம் தாழ்த்துவார் ஆனால் உன்னை போன்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் அருளும் ஆசையை அப்போதே செயல்பட கட்டளையிடுவார்   காரணம் தன்னைப் போல் இனி யாரும் வாழக்கூடாது என்ற முழு மனதோடு வாழ்த்துவார்கள் என்ற கருனைக்கு இனங்க என்றதும் 

ராகவி திருமணத்திற்கு தயாரானாள் 

வேன் வந்தது ராகவியும் அதே வேனில் பொண்ணும் மற்ற உறவினரும் சென்று விட்டனர் அக்கம் பக்கத்தில் உள்ளவர் யாரும் அந்த வேனில் ஏற்றிக்கொண்டு போகவில்லை அடுத்த வேன் வரும் என்று காத்திருந்தனர் முகூர்த்தம் முடிந்த பின் தான்  அடுத்த வேன் அவர்களை அழைக்க வந்தது.

அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் அவளுக்கு கொடுத்த மரியாதையை நமக்கு கொடுக்க வில்லையே என்ற குற்ற உணர்வில் அனைவரும் வீடு திரும்பினர்.

இங்கு தான் பெண்ணியம் போற்றப்படுகிறது !

நன்றி !






6 comments:

  1. நேற்றைய கவிதையும் பெண்ணீயம்,இண்றைய சிறுகதையும் பெண்ணியம்.பெண்ணீயத்திற்கு உங்கள் தொண்டு தொடரட்டும்.

    ReplyDelete
  2. அருமை...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. காளிங்கராயர்

    தங்கள் வருகைக்கு வணக்கம் ஐயா

    மேலும் என் கவி குறித்து பாராட்டியமைக்கு அன்பு நன்றிகள் இத்துடன் முடிவுறாமல் தொடர்ந்து தங்கள் ஆதவரை தந்து உதவிட வேண்டுகிறான் நன்றிகள் பல

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் :

    பார்த்தேன் அண்ணா மிகவும் பயனுள்ளது என்று நம்புகிறேன்

    இப்படி ஒரு வாய்ப்புக்கு தந்தமைக்கு அன்பு நன்றிகள் பல

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தோழி இன்றைய வலைச்சரத்தில் தங்கள்
    தளத்தினையும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர் இன்று
    போல் என்றுமே உங்கள் தளம் சிறப்புடன் தொடரட்டும் .
    இன்றைய பெண்ணியம் பற்றிய ஆக்கமும் சிறப்பாக உள்ளது !
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசிபோல் இன்னும் சிறக்க வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் அம்மா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145