நாட்டை கெடும் குடி...!
அலுப்புக்கு குடிப்பவன்
அணுஅணுவா சாகிறான்
அந்தஸ்துக்கு குடிப்பவன் - பெண்
அடிமையாகி வாழ்கிறான்

எத்தனையோ குடிகாரன்
எண்ணத்திலே சிறக்கிறான்
எல்லாம் அறிந்தவனோ - உலகை
ஏமாற்றக் குடிக்கிறான்

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி

அஞ்சிக்கும் பத்துக்கும்
மாடாய் உழைக்கிறான்
அஞ்சியவர் முன்னே நின்று
அசிங்கமாய் பேசி நடிக்கிறான் 
அடுத்தவர் முகம் சுழிக்கும்
அளவிற்கு நடக்குறான்

படித்தவனும் குடிக்கிறான்
படிக்காதவனும் குடிக்கிறான்
பணக்காரனும் குடிக்கிறான்
பஞ்சப் பரதேசியும் குடிக்கிறான்

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி

கொடுத்து வாழும் பண்பை மறந்து
குடித்து வாழ்கிறான்
பாரில் விழுந்து சாகிறான்
பாலியில் கொடுமையில்
மனித மிருகமாகிறான் 

மங்கையும் தங்கையும்
தவறாக் காட்டும்
மதுவை அழிக்க மறக்குறான் 
மானம் காக்கும் மாந்தர் முன்னே
மருகி மருகி உருகிறான்
தன தவறை குறைக்க வக்கீல்
காலில் விழுந்து மடிகிறான் 

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி...!

2 comments:

 1. சரியாகச் சொன்னீர்கள்...

  இந்த நோய் வந்தால் தானாக தான் திருந்த வேண்டும்... இல்லையேல் விரைவில் சாகத்தான் வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா மிகவும் சரியாக சொன்னீ ர்கள் தங்கள் பின்னுட்டத்திருக்கு மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...