நாமும் வாழலாம் ...!


அடிப் பெண்ணே ...!
பெயர் சொல்லாய்
நுழைந்த இதயத்தில்

காதல் வினையை மூட்டி
கவிதை வலியை பூட்டி
இதயத்தை திறந்து காட்டினேன்

என்னில் உன்னுயிர் கலந்ததால்
நீயும் உன்னில் என்னை
கலப்பாய் என்று

ஆனால்
மண்ணில் தூவும் உரமாய்
என் கண்ணில் தூவி
காற்றோடு கலந்து பின்
என் இதய ஊற்றில்
பொங்கி எழும் காதல்
வெள்ளத்தில்

தங்கிச் செல்லும் தலைவியாய்
அலை அலையாய் வந்து
கொலை கொலையாய் நின்று

சிலையாய் மாறிய
என் கருவிழியில்
ஒரு விழியாய் நின்றவளே

உன்னை என் மறு விழியாய்
மாற வரம் கேட்கிறேன்
தருவாயா ...? சொல்

மூவிழிப் பாதையில்
நான்விழி சொந்தமாய்
நாமும் வாழலாம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு