சித்திரையே வாராயோ...!


சித்திரையே வாராயோ எங்கள்
சிந்தனையில் நிம்மதியை தாராயோ
நித்திரையில் கண்ட சொப்பனங்கள் - எல்லாம்
நிறைவேற அருள் புரிவாயோ

அற்புதங்கள் பல தாராயோ எங்கும்
அதிசயங்கள் சில காண்பாயோ
அன்றாடம் உழைக்கும் ஏழைக்கு நீ- நீண்ட
ஆயுள் தந்து காப்பாயோ

குற்றம் குறைகள் மன்னிப்பாயோ எங்கள்
குழந்தைகள் அறிவை வளர்பாயோ
சட்டமும் நீதியும் காப்பாயோ - எங்கும்
சமத்துவம் பெருகிட காண்பாயோ

காணி நிலங்கள் செழிப்பயோ எங்கள்
கண்ணீர் துளியை துடைப்பாயோ
வாழும் உயிர்கள் சிறக்கவே - எங்கும்
வாழ்த்தி வணங்கி காப்பாயோ

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...