ஜதி சொல்லும் கவிதை ...!


எழுதாத கவிதை அவள் விழிகள்
அழியாத ஓவியம் அவள் முகம்
படிக்காத மொழிகள் அவள் இதழ்கள்
அணைக்காத வரிகள் அவள் கைகள்
நடக்காத பாதங்கள் அவள் கால்தடம்

மொத்தத்தில் அவள் ஒரு நாட்டிய
தேவதை என் இதய சலங்கையில்
நடனமாடும் உருவமில்லா ஒளி
விளக்காய் ஜதி சொல்கிறாள்

தினம் தினம் கனவில் விடியும் போது
முடிவே இல்லா முற்று பெறுகிறாள்
என் முன் சென்று மறையும்
பெண் ஒருவளாய் என் ஜென்மம்
முடியும் வரை இந்த சலங்கை
ஜதி சொல்லிக் கொண்டே இருக்கும்....!

2 comments:

  1. ஜதி சொல்லும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்