காதல் கண்ணீரையும் தரித்திவிடும்...!


சிரித்தபடி ஹலோ என்றேன்
என்னவன் சீக்கிரம் வருகிறேன் 
என்றான்....

சொல்லாமல் சென்றவனே 
இன்று சொல்லி வருவதேன்
என்றேன்....

அன்று சொல்லிச் சென்றால் 
அழுதுவிடுவாய் என்று சொல்லாமல் 
சென்றேன் உயிரே...
 
இன்று சொல்லி வந்து நின்றால் 
இடைவிடாது சிரிப்பாய் என்றான்

புன்னகையுடன் ஆனந்தக் கண்ணீரில் 
நனைந்தாள் இந்த மாது...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 42

நீ எனக்கில்லையென்ற போதும் எப்படி முடிச்சுப் போட்டது அந்த ஒருதலைக் காதல்