ஹிஷாலீ ஹைக்கூ - 32
கண்ணீர் துளிகள் 
மறு மழை 
வியர்வை துளிகள் 

மணக்கோலத்தில் சிலை 
விதியின் பிழை 
முதிர் கன்னி 

கரு சிதைந்தாலும் 
மரணத்தை தின்று 
ஜனனத்தை வெல்கிறாள் 

இசைக்கு 
ஆராதனை 
பல்லவி 

கண் காது வாய் 
இருந்தும் இல்லாததுபோல்  வாழ்ந்தால் 
வாழ்க்கை இனிக்கும் 

ஒளிந்திருந்த  ஜாதிகள் 
உயிருட்டம் பெற்றது 
உதவி தொகையால் 

சிறப்புக் கட்டணத்தில் 
விலை போகும் பூசாரிகள்  
வேடிக்கை சாமிகள் No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)