சென்ரியுவாய்த் திருக்குறள்-206-210

குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான்.


சுழா துன்பமரிந்தவன் 
பிறர்க்குத் தீமை 
செய்யமாட்டான் 

குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

கொடியபகையில் தப்பித்தவர் 
தீமை பகையால்  
அழிந்தார் 

குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அஇஉறைந் தற்று.

நிழல் போல் 
பின்வருவது   
தீமையின் அணிகலன் 

குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

மண்ணாக்கும் தீமை 
பொன்னாக்கும் 
தன்னை காதலிப்பவன் 

குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்.

வழி தவறிய 
தீவினை 
கேடில்லை No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...