சென்ரியுவாய்த் திருக்குறள்-191-200


குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்.
வெறுப்பின் 
முதல் படி 
பயனற்ற சொல் 
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.
தீமையை விடக் கொடியது 
பலர் முன்  
பயனில்லா சொல் 
குறள் 193:
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.
பயனற்ற சொற்களை 
விளக்கி பேசுபவன் 
நீதியற்றவன் 
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பண்பற்ற பயனை 
பலரிடமும் சொன்னால்
மகிழ்ச்சி குலையும் 
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.
இனிய குணம்  
கசந்த சொற்கள் 
மதிப்பில்லா நிலை 
குறள் 196:
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் 
மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொல்லால் 
பயன் பெற நினைப்பவன் 
மக்களுள் பதர் 
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.
அநீதிக்கு முன் 
பயனனுற்ற சொல் 
நல் சான்றோர் 
குறள் 198:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.
அரிய பயன்களை
பேசும் பண்புள்ளவர் 
சிறந்த அறிஞர் 
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த 
மாசறு காட்சி யவர்.
மயக்கத்திலும் 
தெளிந்த சொல் 
மாசற்ற அறிவுடையவர் 
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.
நாவின் முப்பயன் 
பயனைற்றதை விடுத்து 
பயன் பெற பேசுதல்  

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...