நம் காதல் அகராதியில் ...!

 

அன்பே
உன் உயிர்
என்னிடம் உள்ளது
Hishalee

அதை
எமன் நினைத்தாலும்
முடியாது
எவன்
நினைத்தாலும்
முடியது என
புது இலக்கணம்
வகுத்து விட்டேன்
நம் காதல் அகராதியில் ...!

மருந்தாக வாழ்கிறேன் ...!

 Image

நீ
என்னை
மறந்து
வாழ்கிறாய்

நான்
நீயே
என்
மருந்தாக
வாழ்கிறேன் ...!

கதிரவனாக ..!

 ஹிஷாலி

நான்
நாளும் பொழுதும்
தேய்கிறேன்
நிலவாக

நீ
காணும்
பொழுதெல்லாம்
 சுட்டெரிக்கிறாய்
கதிரவனாக  ..!

உன் காதலின் கல்லறை ...!

 ஹிஷாலி

நீ
என்
காத்திருப்பின்
கட்டளை

நான்
உன் காதலின்
கல்லறை ...!

உயிர் பெரும் நம் காதல் ...!

 ஹிஷாலி

நான் உன்னிடம் உருப்படும் படி பேசுகிறேன் ... நீ என்னிடம் உருப்படியாக பேசியதில்லை .. பின் எப்படி உயிர் பெரும் நம் காதல் ...! 

சில மணித்துளிகள் ...!

 ஹிஷாலி

நீ விட்டு விட்டு கோக்கிறாய் நான் தொட்டுத் தொட்டு பார்க்கிறேன் நம்மை தொட்டு விட்டுப் போகிறது சில மணித்துளிகள் ...! 

நான் ஓடாய் தேய்கிறேன்...!

 Image

நான்
ஓடாய் தேய்கிறேன்
என்றும்
உன் நினைவில்

நீ காடாக
பூக்கிறாய்
என்றென்றும்
பலர் மனதில் ...!

நீயும் நானும் ...!

 ஹிஷாலி

உன்
வாழ்க்கை நூலகத்தில்
வழுக்கி விழுந்த
புத்தகம் நான்

புரட்டிப்
புரட்டி
படிக்கிறேன்
அத்தனை
 "PEN "குறிப்புகள்
அதில்
அட்டை படம் மட்டும்
நீயும் நானும் ...!

என் காதல் வெகுமதி

 Hishalee


என் காதல்
உனக்கு
வெகுமதி தருவது போல்

உன் காதல்
எனக்கு
நிம்மதியை தரவில்லை ஏன்..? 

ஆயுள் முழுவதும் மாறாது .!

 

Hishalee
ஒரு நொடியில்
மலரும்
பூவில் தான்
பல ஆண்டுகள்
பயன் தரும்
தேன் சுவை உள்ளது

அது போலவே
உண்மை காதல்
ஒரு நொடியில்
மலர்ந்தாலும்
அதன் சுவை
ஆயுள் முழுவதும் மாறாது .!

உயிராக எண்ணாதே ...!

 ஹிஷாலி

யாரை நீ
உயிராக எண்ணுகிறாயோ
அவர்கள் தான்
உன்னை
மயிராக தூசி வீசுவார்கள் என்பதை
மனதில் வைத்துக்கொண்டு
பழகினால் போதும்
அவமானமும் கண்ணீரும் மிச்சப்படும் ...!

உன் வாலிப பசியை ..!

 ஹிஷாலி

நான்
அன்னப் பறவையாக
மாறி
 உன் பசி தீர்க்க
விரும்புகிறேன்

நீ பல வண்ண
பறவைகளுடன் கொஞ்சி
தீர்க்கிறாய்
உன் வாலிப பசியை ..! 

காதலின் பேரின்பம் ...!

 ஹிஷாலி

பிடிக்காத ஒருவரிடம்
பிணமாக
வாழ்வதை விட
பிடித்த மனதோடு
மணமாக
வாழ்வதே
காதலின் பேரின்பம் ...!

அபசகுனம், நல்ல சகுனம் ...!

 No photo description available.

நீ என்னைக் காலையின் பூனையாகப் பார்க்கிறாய் நான் உன்னைக் காதலின் கழுதையாகப் பார்க்கிறேன் நமக்குத் தெரியும் அவை நான்கு கால் விலங்குகள் என்று ஆனால் அவற்றிற்கு அபசகுனம், நல்ல சகுனம் என இரண்டு கால்கள் பொருத்தி நடக்க விடுகிறோம் ...!

என் காதல் மூளை ...!

 Image

என்
சிறு மூளை
பெரு மூளை
எல்லாம்
துச்சமாக எண்ணுகிறேன்
நீ
என்
காதல் மூளை
ஆட்கொண்ட பின் ...!

காரண காரி ...!

 ஹிஷாலி

இருவரின்
சண்டைக்குப் பின்
இதழ் முத்தம் கேட்டு
நொச்சரிப்பாள்
என் அன்பின் ஆழத்தைப்
பதம் பார்க்கவே
நான் தரத் தொடங்கியதும்
என் முத்தத்தின் சத்தத்தையும்
நேரத்தின் மொத்தத்தையும்
கணக்கிட்டுப் பார்த்து
உள் வாங்கிக்கொள்ளும்
காரண காரி ...!   

நிலவை தாலாட்ட...!

 ஹிஷாலி

விடிந்ததும்
நகரும் கதிரவனைப் போல்
சுறுசுறுப்பாக இருந்தால் தான்
அடைந்ததும் மலரும்
நிலவை தாலாட்ட முடியும் ...!

பொருத்தமில்லாத அன்பு !

 ஹிஷாலி

வித்தியாசமான
இரவும் இல்லை
விசித்திரமான
பகலும் இல்லை
சரித்திரமாக இருக்கிறது
உன் மீதான
பொருத்தமில்லாத அன்பு !

என் கண்கள் ..!

 ஹிஷாலி

வெற்று காகிதத்தில்
கூட கையெழுத்திட்டது
இல்லை நான் ...

வெற்று
வேட்டு
உன்னை கை
பிடிக்கக்
கையெப்பம் இட்டேன் எப்படி ...

துட்டு இல்லாத
வெற்று காகிதத்தில் தான்
 கட்டுக்கடங்காத காதல்
கரை
புரண்டோடும் என உன்
கரம்
பற்றத் துடிக்கிறது என் கண்கள் ..!

விரும்பி விரும்பி ...!

 Image

எதை
விரும்பி விரும்பிப்
போகிறோமோ
அதுவே
விரோதமாக மாறும் போது
விரும்புவது அனைத்தும்
விஷமாகத் தோன்றும் ...! 

அன்பே தருவாயா ??

 ஹிஷாலி

சதா காலமும்
உன்னை நினைப்பதை விட
சர்வ காலமும்
உன்னையே சரணடைவது தான்
என் சாகா வரமாக
இருக்க வேண்டும்
அன்பே தருவாயா ??

மரணித்து விடுவதே மேல் ...!

 ஹிஷாலி

உறவுன்னு சொல்லிக்க
ஆயிரம் பேர் இருந்தாலும்
உயிருண்ணு சொல்லிக்க
 உன் ஒருவன் இருந்தால்
போதுமென்ற உணர்வை
மதிக்கத் தெரியாத உறவில்
இருப்பதை விட
மரணித்து விடுவதே மேல் ...!

கனமான இதயம் ...!

 ஹிஷாலி

கனமான ஒன்றை
இழந்து தவிக்கும்
இதயம் தான்
உன்னையும்
உன் காதலையும்
 லேசாக தூக்கி
வீசிவிட முடியும் ..! 

ஆத்மார்த்தமான பிரிவு ...!

 ஹிஷாலி

பாசமோ நேசமோ
இருவரிடம் இருந்து
வந்தால்
அது உறவு
இல்லை என்றால்
அது ஒரு
ஆத்மார்த்தமான பிரிவு ...!

நீ பறந்த போது ..!

 ஹிஷாலி

எனக்கான சிறகு
என்னிடம் உள்ளது
என்பதை
உணர்த்தியது
உனக்கான காதலை
நோக்கி
நீ பறந்த போது ..!

என் இதயம் ...!

 ஹிஷாலி

எனக்கான காதல்
உன்னிடம் சிக்கி
சின்னா பின்னமாக
துடிக்கும் போது
கவலைக்கிடமானது
என் இதயம் ...!

பேயாகத் திரிகிறேன் காற்றில் ...!

 ஹிஷாலி

காற்றை விடவும்
உயர்ந்த ஸ்தானம்
உன் இதயத் துடிப்பு
என்றவுடன்
இதயத்தை அடைத்துவிட்டு
காற்றைத் திறந்து விட்டாள்
இப்போது
பேயாகத் திரிகிறேன் காற்றில் ...! 

ரணங்கள் ...!

 ஹிஷாலி

உன் நினைவுகளை
வரிசைப் படுத்திப் பார்க்கும்
போதெல்லாம்
இடையிடையே வந்தது
நீ துண்டுதரிச்சிப்
பேசிய ரணங்கள் ...! 

கால் முளைத்த கவிதை ...!

 ஹிஷாலி

என் கவிதைக்குக்
 கண் இருந்தால்
கடலாய் இருக்கும்
கால் இருந்தால்
நிலவாய் இருக்கும்
வாய் இருந்தால்
புலம்பி இருக்கும்
மூக்கு இருந்தால்
சுவாசித்து இருக்கும்
ஆனால்
இதயம் மட்டும்
இல்லாது இருந்திருந்தால்
என்றோ
நெருப்பு குழம்பு வானத்தை
நோக்கிச் செல்வது போல்
உன்னுடன் வாழாது மடிந்திருக்கும் ..!

புது வழி பிறக்கும் ...!

 Image

வாழ்க்கை போன
திசையில் சென்றால்
வலி தான் மிஞ்சும்
வழுக்கி விழுந்த
 திசையை நோக்கிச் செல்லுங்கள்
 புது வழி பிறக்கும் ...! 

ரௌத்திர பெண்ணே ...!

 Image

அடி பெண்ணே
உன் ரௌத்திரத்தின்
பின்னால்
ராகு கேது எல்லாம்
பயிற்சி எடுக்க வேண்டுமோ ?

காலடியில் விழுந்த பூக்கள் ...!

 Image

கர்வத்துடன்
கடவுளின் காலடியில்
விழுந்த பூக்கள்
பக்தனின் கருணைப் பட்டு
பிரசாதமாய் எழுந்து நிற்கிறது
மோட்சம் கேட்டு ...!

ஓர் கவிதை ...!

 ஹிஷாலி

என் கவலையை
விலை கொடுத்து வாங்கும்
உரிமை
உன் தனிமைக்கு மட்டுமே
 என்ற எண்ணத்தை மாற்றி
இனிமையாக்கியது
ஓர் கவிதை ...!

பேசும் ஒலிபெருக்கி ..!

 ஹிஷாலி

பேசாமல் அழுகிறேன்
பேசி பேசி கொல்கிறது
பேசும் ஒலிபெருக்கி ..! 

ஆசையலை ...!

 ஹிஷாலி

பல பல கனவுகளோடு
உன்னையே சுற்றி வருகிறேன்
சில பல வலிகளோடு
என்னை திருப்பி அனுப்புகிறாய்
என்ன செய்வது
கரை
தொட்டு செல்லும்
அலையை போல
நுரை கொட்ட
உள்வாங்கி திரும்புகிறது
ஆசையலை ...!

காதல் வேடந்தாங்கல் ...!

 Hishalee

என்
அழைப்பு மணி
உனக்கு எரிச்சல் ஊட்டும்
என்றால்

நம் காதல்
வேடந்தாங்கல் இருந்து
வேறு நாட்டிற்குப்
பறந்துவிட்டது
என அறிந்து கொள்ளவா...? 

இரு மனதாய் ...!

 ஹிஷாலி

இரு மனதாய்
காதலிப்பவர்கள் தான்
ஒரு மனதாய் பிரிகிறார்கள் ...!

வழிநடத்துவேன் ...!

 Hishalee

உன் விழித்திரையில்
எனை
ஒளித்து வைத்துக் கொள்

நீ
பாதை மாறும் போதெல்லாம்
நான்
உன் பார்வையாக இருந்து
வழிநடத்துவேன் ...!

அன்பின் புனிதம் ...!

 

மூன்று முறை
உணவும்
நான்கு முறை
நீரும்
பருகும்
மிருகம் கூட
தன் அன்பை
புனிதமாக யாசிக்கிறது
ஆறறிவு படைத்த
உன் அன்பு மட்டும்
தெரு நாயைப் போல
 உலவுகிறது ஏன் ...?

முத்தம் ...!

 Image

அன்பே உன்னிடம்
அடிக்கடி கேட்பது
ஒன்றே ஒன்று தான்
முத்தம்

அதை மொத்தமாகக்
கொடுத்துவிட்டால்
மத்த நேரமெல்லாம்
என்ன செய்வேன்

ஆகையால்
சத்தமில்லாமல்
நித்தமும் கொடுத்துவிடு
தித்திக்கும் அம்முத்தத்தை
நான் திகட்டாமல்
பருகிக்கொள்கிறேன் ...!

என் பரமாவது குறையும் ...!

 Image

தலைக்கு மேல்
பாரமாக இருக்கும்
"கடவுளை"
நிகரான விலை கொடுத்து
வாங்கினால்
என் பரமாவது குறையும் ...!

உன் மடியில் தலைசாய்த்து ...!

 ஹிஷாலி

என் ஆவி
அடங்குவதற்குள்
ஒருமுறையேனும்
உன் மடியில்
தலைசாய்த்து
ஒரு பிடியில் தாலாட்டும்
அந்தி நிலவை
ரசிக்க வேண்டும் ..!

மழையின் தாகம் ...!

 Image

நீருடன் மோதி
சேற்றுடன் முடிவடைகிறது
மழையின் தாகம் ...! 

காதல் சேரவில்லை ...!

 Image

உன் குரல் கேட்க வேண்டும்
என்ற ஏமாற்றமே
என்னை கொஞ்சம்
கொஞ்சமாக்க கூட்டியது
உயிரின் ஆசையை
இன்று அயிலோடு
காத்திருக்கிறேன்
ஆனால் காதல் சேரவில்லை ...! 

எத்தனை சாதி ...!

 

ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி ஒளிந்திருக்கிறது
என்று யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை
வறட்டு பிடிவாதத்திற்கும்
 வக்கிர புத்திக்கும்
இடம் கொடுக்கும்
சாதி வெறியைத்
தணிக்க தமிழனால்
மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும்
மறந்துவிடாதே !

வல்லினம்


வல்லினம்
மெல்லினம்
இடையினம்
சேர்ந்தது தான்
தமிழினம்
என்ற மரபு போய்
ஜாதியினம்
என்ற பிரிவு வந்தது
ஏன் ?

மழலையின் சிணுங்கல் ...!

 ஹிஷாலி

உன் நினைவாக
நான் சுமக்கும்
உணர்வின் வலி
யாதெனில்
பால் மனம் மாறாத
மழலையின் சிணுங்கல் ...!

புதையலாகத் தோன்றும் ...!

 Hishalee

பழிச் சொல்லும்
இடத்திலிருந்தால்
அவர் வாழ்க்கை
குழிதோண்டிப் புதைக்கப்படும்

அதுவே
சற்று விலகி
இருந்து பார்
அப்பழிக்கு ஈடாக
 அங்கே வேறு
ஒருவர் முளைக்கும் போது
அவ்விடத்தில்
உன் பழி
புதையலாகத் தோன்றும் ...!

கல் தடுக்கி விழுந்தது இல்லை ...!

 Image

ஏனோ
இன்னும்
கல் தடுக்கி
விழுந்தது இல்லை

ஆனால்
பல முறை
உன் கண்ணீர்
தடுக்கி விழுந்து
இருக்கிறேன் ...!

கொல்லுகிறது ...!

 

எனக்கு தெரிந்தே
ஹிஷாலி

இங்கு இத்தனை பெண்களை
கடந்திருக்கிறாய் என்றால்

எனக்குத்
தெரியாமல்
எத்தனை பெண்களை
கடத்தியிருப்பாய்
என்ற சந்தேகமே
என்ன
அணுவணுவாக
கொல்லுகிறது ...!

ஆண்ணாதிக்க திமிரு ...!

 ஹிஷாலி

ஒரு பெண்ணை
மணந்த பின்பு
அவளிடமே
இன்னொரு பெண்ணை
மணப்பேன் என்பது
 உன் வளர்ப்பின் திமிரு

அதோடு கிடைக்கும்
பெண்ணை எல்லாம்
சுவைப்பேன் என்பது
ஆண்ணாதிக்க திமிரு ...!

வேர்க்கிறது எப்படி ...!

 ஹிஷாலி

வெயிலில் அலைந்தேன்
வேர்க்கவில்லை

மழையில் நடந்தேன்
நனையவில்லை

நீ
 அருகில் வந்ததும்
நனைந்தது போல்
வேர்க்கிறது எப்படி ...!

மரம் ...!

 

என்னை 
மரமாக நினைத்தால் கனி தருவேன் 
மழையாக நினைத்தால் நீர் தருவேன் 
நிலவாக நினைத்தால் நல்லுறக்கம் தருவேன் அதை விடுத்து வெட்டி வீழ்த்தினால் புயலாவேன் கட்டிப் போட்டால் வெள்ளமாவேன் கிட்ட வந்தால் சுட்டெரித்துவிடுவேன் கொஞ்சம் தள்ளியே நில் தலைவணங்குகிறேன் இப்படிக்கு இயற்கை

பெண் -Pen

 Image

பெண் பைத்தியமும்
pen பைத்தியமும் ஆண்"
"மை" உள்ளவரை
அடங்காது ..!

mhishavideo - 145