புதையல் - 2


ஹாய் பாட்டி ஹௌ ஆர் யு  ...

நான் நல்லா இருக்கேன் தங்கம் நீ எப்படி இருக்க படிப்பெல்லாம் முடிஞ்சதா 

ம்ம்ம் முடிஞ்சது பாட்டி நான் தான் மாநிலத்திலே முதல வருவேன் ....

என் ராசாத்தி இனிமேல் உனக்கு கல்யாண யோகம் தான் 

போ பாட்டி எப்ப பாத்தாலும் கல்யாணம் கல்யாணம் சொல்லியே என்ன வெறுப்பேத்துற 

இல்லடிமா எனக்கும் வயசாகிடுச்சி உனக்கும் ஒரு துணை வேணுமில்லா அதான் 

ஒகே ஒகே அப்படினா நான் சொல்லுற மாதிரி தான் நீ மாப்பிளை பாக்கணும் சரியா 

ம்ம்ம் சொல்லடி தங்கம் ...

ஆல்ஹஹால் கலக்காத ஆணழகனா 

பெண் வாசமே காணாத பேரரசனா 

மண் வாசம் குறையாத மன்மதனா 

புகை பிடிக்காத பேரழகனா 

மொத்தத்துல 
புராண ராமனா இல்லாம
புதிய ராமனா
வன வாசம் தராத 
வாழ்க்கை துணைவனா வேண்டும் 

உன்னால முடியுமா ? முடியாது பாட்டி இருந்தாலும் அப்படி ஒருத்தன நீ தேடிக் கொண்டிரு 

நான் தோண்டிக் கொண்டிருக்கிறேன் சரியா என்று அங்கிருந்து நகர்ந்தாள் 

இறைவா என் பேத்தியையும் ஆனாதையாக ஆக்கிவிடாதே என்று புலம்பினாள் பாட்டி 

அனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் தாத்தாவின் இறுதி கட்டளைப்படி அந்த புதையலை தேடிச் சென்றாள் அங்கே வெறும் ஸ்ரீ விவேகனந்த சுவாமி  என்று தான் இருந்தது அந்த ஓலைச் சுவடியில் மனதில் ஒரு குழப்பம் அப்படி இப்படி என்று ஒரு வழியாக முயற்சித்தாள் 

ஸ்ரீ வி வே  க  ன  ந்  த  சு  வா  மி  
1     2     3      4   5    6   7   8     9     0

ஸ்ரீ + மி = 10
வி +வா = 11
வே +சு = 11
க +த = 11
ன + ந்  =11

சோ 11 ன  1+1 போட்டா = 2 அப்படினா முதலிடம் வருவது 10 

பாட்டி ...

என்னடா தங்கம் தாத்தாவோட பட்டப் பேரு என்ன?

ராவணன் 

அவரோட சொந்த ஊர் ? இலங்கை தானே 

ஆமாம் டா இப்ப ஏன் இதெல்லாம் கேட்குற 

சும்மா தான் பாட்டி ஒகே நன்றி பாட்டி தாத்த சொன்ன மாத்திரி "தலையறுத்து தங்கை மண் புதைத்த மன்னா உன்பின்னால் தான் என் புன்னகை" என்ற வரி ஞபகம் வந்தது 

உடனே பூஜை அறைக்கு சென்றாள் அங்கிருந்து எதிர் நோக்கினாள் எதிரே இராவணன் புகைப்படம் தொங்கியது 

குழப்பத்துடனே பூஜை அறையில் இருந்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தாள் பத்தடியில் இராவணன் போட்டோ வந்தது 

சற்று சிந்தித்தாள் புன்னகை என்றால் பெண்கள் எத்தனை நகைகள் அணிந்தாலும் புன்னகைக்கு ஈடே கிடையாது சோ புன்னகையுடன் போட்டோவை விலக்கிவிட்டு தட்டிப் பார்த்தாள் சத்தம் வித்தியாசமாக இருந்தது அங்கே தோண்டினாள் நவரத்தினங்களும் மின்னியது பாட்டியை அழைத்தாள் பாட்டியும் தன் பேத்தியின் அதித புத்தியைக் கண்டு பாராட்டினாள் 

சரிடா தங்கம் இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் 

அதுவா பாட்டி என்னைப் போல் இந்த மண்ணில் எத்தனையோ பேர் அனாதையாகவும் ஆதரவு இல்லாமலும் தவிப்பவருக்கு நானே கூட இருந்து உதவப் போறேன்  

உன் கல்யாணம் 

இறவன் விட்ட விதி பாட்டி ....

சுபம் !


டி.எம்.எஸ் அஞ்சலி !பிரசவத்தில் நீங்கள்  
அழுதது கூட 
முதல் ராகமாய் 
இருந்திருக்கும் ...

அதனால் தான் 
என்னவோ இன்று 
நாங்கள் அழுகிறோம்
இறுதி ராகமாய் !

இறைவா ...
இசைக்கு மரணமில்லை அவர் 
இமைக்கு மரணம் தழுவியதால் 
இளமையோடு சாந்தியடையட்டும் 
இவ்வுலகம் சுழலும் வரை ...!மழை எங்கே ?

எவளோ ஒருவள் கருவில்
எழுந்து நிற்கிறேன் மரமாய் 
மணம் ஆகவில்லை 
மக்கள் செல்வம் கண்டேன் 
மரணமும் ஜெனனமும் 
வனத்தை வாட்டியதால் 
வானம் கேற்கிறது 
மழை எங்கே ?
மனித உயிர் என்ன மலிவா ?
அதற்குள் ...
கரு களைப்பாய் 
இலையுதிர் காலம் 
காலனே கரை சேருகிறேன் 
என்றது எறும்பு 
புன்னகையில் 
நீ தான் அந்தப் 
புண்ணிய ஆத்மாவோ ?

காற்றைப் போல் ...!நேற்று கண்ணீர் 
இன்று சிரிப்பு 
நாளை கோபவம் 
இவைகளை தாண்டி வரும்
காற்றைப் போல் 
பணத்தாசையை அழிப்போம் 
பாரை ஒழிப்போம் ...!

எங்கே விழுந்தாயோ ...!

காதல் உணர்வே 
கவிதையின் நிழலே 
எங்கே விழுந்தாயோ 
சொல் ...

மண்ணில் மறைய 
மரணிக்கிறேன் 
மலராய் !

உன்னில் வாழ 
உயிர்த்தெழுகிறேன் 
உயிராய் !

எழுந்து நடமாடும் 
என் சுவாசக் 
காற்றே... 

எங்கும் வருகிறேன் 
கண்ணில் கரையும் 
காலத்தைத் தேடியபடி  

அதிகம் நேசிக்கிறேன் ...!நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை 
அதிகம் நேசிக்கிறேன் 
அப்போது
நீயும் நானும் 
உரையாடிக் கொண்டிருப்போம் 
நட்புடன் ...!


காதலின் ஆழம் ...!

en espera de llamada telefónica
 Foto de archivo - 2318841


உமிழ் நீரை உண்டு 
உயிர் நீரை தடம் மாற்றும் 
அலைப் பேசிக்கு 
தெரிந்திருக்கும் நம்
ஆத்மாத்தமான 
காதலின் ஆழம் ...!

இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!புன்னகைக்கு 
அரசியாய் மட்டுமல்லா 

இதயத்தை
புண்ணாக்கும் ராட்சசியும் நீ 

கண்ணைக் குருடாக்கும் 
கைகாரியும் நீ 

காதை செவிடாக்கும் 
ஊமை உளவாளியும் நீ 

இருந்தும் ...

உள்ளத்தை மட்டும் 
உலவ விட்டு 
உயிரே எடுத்துக் கொண்டு 
எங்கே செல்கிறாய் என்
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!


கண்கள் இனிக்கும் ...!
காதலித்தால் 
கண்கள் இனிக்கும் 
என்றாள் ...

சுவைத்துப் பார்த்து 
ஆம் என்றேன் ...

அப்போது புரியவில்லை 
காதலுக்கு கண்ணில்லை 
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!

நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
அன்று 
எண்ணிலடங்கா எலும்புக்கூடுகள் 
என்னில் புதையுண்ட போது 
ஏளனிக்க வில்லை இதழ்கள் 

இன்று...
என்னவென்றே தெரியாத 
என்னருமைப் பதுமைகள் 
பாலியல் வன்முறையில் 
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!


தீராத தீவிரவாதம்...!


மூன்று பேதத் தீயில்

மூழ்கும் மானிடா

"தீரா" வியாதி போல்

தீவிரவாதத் தீயில்

குளிப்பது ஏனோ ?


துப்பாகிகளும் 

அணுகுண்டுகளும் 

தூவி விளையாட

நாடென்ன நாடக மேடையா ? 

சொல் ...


வெறிப்பிடித்த எறும்பு போல்

விரட்டி விரட்டி

கடிச்சி கொதற 

மனித உயிர்கள் என்ன

கோழியா ஆடா ? 

பன்னியா ?நில் ...


பிணத்தின் பெயரில் 

போராட்டம் நடத்துவது 

இன்னொரு பிணத்திற்காக 

தேடும் ஒத்திகை கோசமா ?

யோசி ....


அணு உலை அழிக்கும் 

காலம் அறிந்தும் 

எதிர்மறைச் சண்டையில் 

எதிரியா நானாவெனப் 

பிரித்தெடுக்க 

குருதியென ஆராய்ச்சி கூடமா ?


சைவம் கூட அசைவமானது 

சைனஸ் நோய் போல்

மாற்று மருந்தாக ..

மார் தட்டி மோகம் தணிப்பது 

மிகையாகுமா ? சிந்தித்துப் பார் 


பழிக்கு பழி என்று

பாடுபடும் மனித விலங்கே  

நீ பதுங்கிக்கிடக்கும்

காட்டை விட்டு 

வெளியே வா 


வந்து 

அகிம்சை வழி நீருற்றி 

அமைதிப் பூ பறிக்க 

யாவரும் ஒன்றென

உரமிடுங்கள் ...!

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு ...!


விதையைப் பெருக்கி 

மழையால் வகுத்தால் 

கடன் தான் ஈவானது ...!


களையைக் கழித்து 

செலவைக் கூட்டினால் 

வியர்வை தான் ஈவானது ...!


அறுவைக்கு கடன்வாங்கி 

அதிக வட்டி குட்டி போட்டால் 

நட்டம் தான் ஈவானது ...!


மின்சாராம் இலவசம் 

சம்சாரம் தாலி அடகில் 

மீட்ப்புத் தொகை தான் ஈவானது ...!


ஆஹா என்ன விளைச்சல் 

அதற்குள் அழித்தது புயல் 

நிவாரணம் தான் ஈவானது ...!


மீந்த ஈவில் மனப்பதோ 

செய்முறை அதில்  

உழவையும் கலவையும்  

தான் தள்ளுபடியானது...!


பாலாய் போன மண்ணில் 

விதைத்து விதைத்து 

எலும்பானான்   

வியர்வை நிலத்தில் 

கருப்பானான்


உயிரை மட்டும் பயிராக்க 

உழுத நிலத்தைப்   

பணமாக்கிவிட்டான்...! அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!இரத்தத்தில்

ஜெனித்தேன் !


வனவாசக் காலம் 

முடிந்து 


வண்ணத்துப் பூச்சாக

வட்டமிட்டேன் 

கல்லூரி சோலையில் !


என் 

கள்ளங் கபடமில்லா 

கன்னி அழகைக் கண்டு 

காதல் வசப்பட்ட 


கள்வனின் பார்வையில் 

கனவை இழந்து 

கதறுகிறேன் 


அவன் தூவிய அமிலத்தில் 

ஆகாயத்தைத் தொடும் 

அனிச்சம் மலராய் ...!புதையல் - 1

அம்மா பூங்கோதை எங்கேமா ராஜா மந்திரி இருவரும் 

இதோ அழைக்கிறேன் அப்பா என்றாள் .... 

இருவரும் வந்தார்கள் தனது தாத்தாவின் அருகில் அமர்ந்தார்கள் 

என்ன தாத்தா அழைத்தீர்கள் என்றார்கள் 

அதற்கு அந்தத் தாத்தா எனக்குப் பூலோகம் செல்ல அழைப்பு வந்துவிட்டது அதானால் இதுவரை நான் சொல்லாத ஒன்றைச் சொல்லப்போகிறேன் கவனமாகக் கேளுங்கள் என்றார் 

அப்படியா? தாத்தா சொல்லுங்கள் என்றனர் 

முன்னொரு காலத்தில் நானும் உங்க பாட்டியும் குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக ஏறி இறங்கினோம் அப்போது தான் கடவுள் கொடுத்த வரமாய் உங்கள் அம்மா பூங்கோதை எங்களுக்குப் பிறந்தாள் நாங்களும் மிகவும் சந்தோசப்பட்டோம்அதே சந்தோசத்தில் உங்க அம்மாவுக்குப் பத்து வயது வந்த பிறகு அவள் எடைக்கு எடைத் தங்கம் தருவதாக இறைவன் சன்னதியில் வாக்குறுதிக் கொடுத்தோம் 

அதே போல் அவளும் பத்து வயதை அடைந்தாள் அவள் எடைக்கு ஏற்றவாறுத் தங்கத்தை அந்தக் கோயில் உண்டியலில் போட்டு விட்டு வந்துவிட்டோம் 

வீட்டிற்கு வந்ததும் உங்க பாட்டிக்குச் சந்தேகம் வந்துவிட்டது அந்த நகையைப் பூசாரி எடுத்துவிட்டால் என்ன செய்வது தன் தர்மத்தின் பயன் தடைபட்டுவிடுமே என்று புலம்பினாள் 

உடனே நான் கோயிலுக்குச் சென்று பார்த்தேன் உங்கள் பாட்டி சொன்னது போல் நடந்தது அந்த நகையை எடுத்துக்கொண்டு பூசாரி ஓடினான்நான் பார்த்துவிட்டேன் பின்னாடியே விரட்டி ஓடினேன் என்னால் முடியவில்லை திரும்பி வந்துவிட்டேன். 

மறு நாள் காலையில் அந்தப் பூசாரி நமது தோட்டத்தில் இறந்து கிடந்தார் ஆனால் நகைகள் எங்கோ மறைந்துவிட்டது உடனே நானும்உங்கள் பாட்டியும் கோயிலுக்குச் சென்று முறையிட்டோம் அப்போது அங்கே ஓர் குரல் கேட்டது மகனே தயக்கம் வேண்டாம் உனது தர்மம் பத்திரமாக உள்ளது நீ எப்படி நீதி நேர்மைத் தவறாது ஏழை எளியோருக்குத் தொண்டு செய்தாயோ அதே போல் உன் அடுத்தத் தலைமுறையும் இருந்தால் அந்தப் புதையல் உன் வம்சத்தைச்சேரும் அதை உன் வம்சம் தவிர வேறு யாரும் அனுபவிக்கவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது இல்லையேன் அது மண்ணோடுமண்ணாகவே புதைக்கப்படும் ஆனால் ஒரு வேண்டுகோள் இதை நீ யாரிடமும் சொல்லக் கூடாது எப்போது உன் உயிர் பிரியுமோ அப்போதுதான் சொல்ல வேண்டும் என்றது நானும் சரி தாயே அவ்வாறே செய்கிறேன் என்று வீடு திரும்பினோம் இது தான் நடந்தது பேரங்களே நீங்களும் இது வரையுளும் எல்லாக் கஷ்டங்களையும் தாண்ட்டிவிட்டேர்கள் இருந்தும் நீங்கள் ஒரு பாவமோ பழியோ செய்ததில்லை அதனால் தான் உங்களிடம் சொல்கிறேன் என் ராஜா மந்திரிகளே என்றார் 

அதற்கு அவர்கள் போங்கத் தாத்தா நீங்கள் சினிமாப் படம் மாதிரிக் கதைச் சொல்லுகிறேர்கள் என்று அங்கிருந்து நகர்ந்தார்கள் அப்போது தாத்தா "கமலம்" என்று சொல்லி இறந்துவிட்டார் 

சிறிது நேரம் கழித்துப் பூங்கோதை வந்தாள் அங்கே தன் அப்பா இறந்துக் கிடந்ததைப் பார்த்து கத்திச் கூச்சல் போட்டாள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததனர் ராஜாவும் மந்திரியும் வந்து அழுதார்கள் மன்னியுங்கள் தாத்தா நீங்கள் கூறியதை நாங்கள் விளையாட்டாக எடுத்துவிட்டோம் என்று புலம்பினார்கள் 

மாலை ஆனது அவர் உடல் மயான கரைக்குக் கொண்டு செல்லப் பட்டது அங்கே இறுதிச் சடங்கு நல்லபடியாக முடிந்தது பின் அனைவரும் வீட்டிற்கு வந்தகர்கள் நாட்கள் கடந்தது தன் தாத்தாவின் தோழர் செய்திக் கேட்டுத் துக்கம் விசாரிக்க வந்தார் அப்போது தன் தாத்தா கூறியதை அவர்கள் சொன்னார்கள் அதற்கு அந்த நண்பர் அது உண்மையாகத் தான் இருக்கும் நீங்கள் முயன்று பாருங்கள் அப்போது தான் உங்கள் வறுமைக்கும் ஊருக்கும் நன்மை பயக்கும்அத்துடன் உங்கள் தாத்தா ஆத்மா சாந்தி அடையும் என்றார் அவர்கள் அயோ அதைத் தான் நாங்கள முழுமையாகக் கேட்கவில்லையேஎன்றார்கள் உடனே அந்தப் பெரியவர் கடைசியாக உங்கள் தாத்தா என்ன சொன்னார் யோசியுங்கள் என்று திரும்பிவிட்டார்

இருவரும் தாத்தாவின் போட்டோ அருகில் நின்று அழுதார்கள் அப்போது மந்திரிக்கு யோசனை வந்தது நம்மைத் தாத்தா இதுவரை ராஜாமந்திரி என்றே அழைப்பார் ஆனால் கடைசியாக அவர் அழைத்தது கமலம் அப்படி என்றால் அந்த வார்த்தையில் தான் எதோ ஒளிந்திருக்கிறது அந்தப் புதையலின் ரகசியம். 

ஆம் மந்திரி நீ சொல்வதும் முற்றிலும் உண்மை சரி விடு கண்டுபிடிப்போம் நமக்கு எப்போதும் நம் தாத்தா துணையிருபார் என்று நிறையப் புத்தகங்களைப் படித்தார்கள் அங்கே கமலம் என்றால் தாமரை என்ற பொருள் விளக்கம் இருந்தது உடனே மந்திரி சுதாரித்து விட்டான் 

அண்ணா ராஜா நான் ஒன்று விளக்கலாம 

தாராளமாக 

கமலம் என்றால் தாமரை 
தாமரை எங்கே இருக்கும் நீரில் 
நீர் எப்படி வந்தது மழையால் 
மழை எங்கிருந்து வரும் மேகம் 
மேகம் எங்கே உள்ளது வானத்தில் 
வானம் எங்கே பார்கிறது பூமியை 

அப்படி என்றால் வானம் பார்த்தப் பூமி இதன் பொருள் விளையாத நிலம் வனத்தை நோக்கிப் பார்க்கிறது அப்படி ஒரு நிலம் நம்மத் தோட்டம் தான் சுமார் இருபது வருடங்களாக விளைச்சலே இல்லாமல் இருக்கிறது அப்படி என்றால் அங்கே தான் அந்தப் புதையல் இருக்க வேண்டும்அண்ணா 

ம்ம்ம் மிகவும் சரியாகச் சொன்னாய் மந்திரி வா சென்று பார்க்கலாம் 

புறப்பட்டார்கள் நிலத்தில் நின்று கண்ணுக்கெட்டாத் தூரம் உள்ளது இவ்வளவு பெரிய நிலத்தில் எங்கே தேடுவது என்று விழித்தார்கள்அப்போது தாகம் எடுத்தது அருகில் இருக்கும் கிணற்றின் உள்ளே ஒரு சிறு ஊற்று இருந்தது அங்கே சென்று தாகத்தைத் தனித்தார்கள்அப்போது அந்தத் தண்ணீரில் அவர்கள் முகம் தெரிவதைக் கண்டு ராஜா சொன்னான் மந்திரி நம் முகம் தெரிவது போல் அந்த வனத்தின் முகம் அதாவது நிலா எங்கே தெரிகிறதோ அங்கே தான் புதையல் இருக்க வேண்டும் ஆம் அண்ணா என்ன ஒர் அற்புதமான விளகம் சரிவாருங்கள் இரவில் வந்து பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் 

அதே போல் இரவில் வந்தார்கள் அந்த நிலா அதே இடத்தில் மிதந்தது தோண்டினார்கள் அங்கே தங்கப் புதையல் எடுத்தார்கள் ஒரேஆச்சிரியம் பின் வீட்டிற்குச் சென்று தனது தாத்தா போட்டோ அருகில் வைத்து வணங்கினார்கள். மறு நாள் அந்தப் புதையலை ஊர் மக்கள்அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது தாத்தாவின் ஆத்மாவும் சாந்தி அடைந்தது வறுமையும் பறந்தோடியது.

ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டோம் தர்மம் தலைகாக்கும் நேர்மை குளம் காக்கும் என்பதை உணர்த்திவிட்டார்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு என ஆசிர்வதித்தார்கள் . 

சுபம் ! நானும் தாஜ்மஹால் தான் ...!


நொடிகள் நகரநகர 
படிகள் ஆகிறேன்
நம் காதலில் !

பார்த்தால் ...
விதியின் வாசலில் 
கோலமிட்டது 
ஜாதிப்பூ!

ரசிக்க மட்டுமே நான் 
உன்னுடன் சேர்ந்து 
நடப்பதற்கில்லை என்றதும் 

இதயத்தைத் திறந்துவைத்து 
இளமையைப் பூட்டினேன் 
நானும் தாஜ் மஹாலாய் மாற ...!


பொழப்பைப் கெடுக்கும் ...!
காதல்
கழட்டி மாட்டும் 
சட்டையல்ல 

கல்லறை வரை 
பொழப்பைப் கெடுக்கும் 
நினைப்பு ...!

சொல்ல முடியாது ...!


என் இறுதிக் கண்ணீரை
உன்னால் 
எப்படி சொல்ல முடியாதோ 
அதே போல் தான் ...

என் இதயத்தில் கரைந்திருக்கும் 
காதல் அன்பை 
சொல்ல முடியாது ...!

சொன்னக் காதல்....
மச்சி சொன்னக் காதல் சொர்கத்தில் சேரும்

சொல்லாதக் காதல் அடுத்தப் பக்கத்தில் வாடும்

-------------------------------------------------------------------------------

முன்னெல்லாம் புத்தகமும் கையுமா இருந்தாங்க

இப்போம் போனும் கையுமா இருக்காங்க
மச்சி என்னடா உலகம் .....

அதாண்டாரட்டைச் சூழி உலகம் !மேகத்தின் கிளிஞ்சல் ...!

மேகத்தின் கிளிஞ்சல்
அவள் கண்கள் 

மிதக்கும் திசையில்  
அவள் பார்வை 

உதிக்கும் சூரியனில் 
அவள் உயிர் 

உரையாக் காற்றில் 
அவள் மூச்சு 

மொத்தத்தில் நிலா 
பெண்ணாகிவிட்டாள் 

வெறும் நிழலாகவே 
வாழ்கிறேன் பூமியில் ...!


அவனில் நான்...!

Samantha in Naan EE Tamil Movieவாசித்தக் கணமே
நேசித்துவிடுகிறேன் 
இதோ ...

மௌனத்தில் ஓர் புன்னகை 
மனத்திற்குள் ஓராயிரம் முத்தங்கள் 
ஜகத்தையே ஆட்சி செய்யும் நம்பிக்கை 
சாகா வரம் வேண்டி பிரார்த்தனை 
இப்படி ...

அனைத்தும் கிடைத்து விட்டது 
அவனிடம் காதலைச் சொல்ல 
வார்த்தை மட்டும் கிடைக்கவில்லை 
வாழ்கிறேன் அவனில் நான்...!


ஹைக்கூ - வானம்

வானவில்


மழையில் களையிழந்தது 

வீட்டிற்கு ...

வண்ணம் தீட்டியது வானவில் ...!

----------------------------------------------------

நனைத்து 

அழித்தது மழை 

வண்ணம் பூசியது வானவில் ...!சுதந்திரமானேன்...!

Photo: நான் கேட்கும் பதில் இன்று வாராத
 நான் தூங்க மடி ஒன்று தாராத
 தாகங்கள் தாபங்கள் தீராத
 தாளங்கள் ராகங்கள் சேராத
 வழியோரம் விழி வைக்கிரேன்

படம்:காதலுக்கு மரியாதை
பாடல்:என்னை தாலாட்ட வருவாளோ

நீ என்னைக் கண்டதும் 
இதயம் இமையானது 
கன்னம் கனமானது 
பார்வை நெருப்பானது 
ஸ்பரிசம் மட்டும்  
பழகிய பின் 
பருகிக்கொள் என்றுதும்  
அரைப் புன்னகையால் 
அகிம்சை மொழி வார்க்கையில்   
சுதந்திரமானேன் நம் காதலில் ...!

அன்னையர் தின வாழ்த்துக்கள் ...!
பிரம்மனின் தொழிலுக்கு 
குருவானவளே 
கருவறைக் கவிதையைவிட 
கல்லறை ஒன்றும் பெருசல்ல 
உனக்காக நானும் 
மீண்டும் கருவறை ஆவேன்
தொப்பூழ் கொடிச் சிஷியனாக ...!முதலும் கடைசியுமாக ...!
என் காதலின் 
விளக்கவுரையில் 
நீயே 
முதலும் கடைசியுமாக 
இடம் பிடித்துவிடு 
கலப்புத் திருமணப் புத்தகத்தில் ...!


மரணத்தில் நான் ...!

பேஸ் புக்கில் 
உன்னைக் கண்ட நொடியில் 
என்னில் புதையுண்ட 
காதல் மீண்டும் 
புதையலாகிறது 

மகிழ்ச்சியில் காதல் 
மரணத்தில் நான் 
காரணம் 
உனது ஜனனம் 
வேற்று மலரைச்  
சூடிக் கொண்டதால் ...!


இரண்டுமாகிறேன் ...!நேரில் பேசுகையில் 
நண்பனாகிறாய் 

நிழல் படம் பார்க்கைகியில் 
காதலனாகிறாய் 

முரண் படுகிறேன் 
மூன்று முடிச்சிற்காக 

எப்போது
முகூர்த்தப் புடவை தருவாய்
சொல்
இரண்டுமாகிறேன் ...!


சாலையில் ...!


என் பார்வை
உன்னை குருடாக்கியது 

என் வாய் மொழி 
உன்னை செவிடாக்கியது 

என் மோதல்  
உன்னை சுகமாக்கியது 

என் தாகம் 
உன்னை தாலாட்டியது 

என் பிரிவு 
உன்னை ரணமாக்கி விட்டதோ  
என்னவோ?

இறந்து
பிறக்கிறேன் சாலையில் ...!
இதயம் தந்தால் ...!தண்ணீரில்
மிதக்கும் 
எறும்பிற்கு 
இலை தந்தாய் !

கண்ணீரில் 
தவிக்கும் 
எனக்கு 
இதயம் தந்தால் 
உயிர் பெற்றுவிடும்
நம் காதல் ...!லட்டுச் சாமி ...!எத்தனை
மனங்களைப்
பிணமாக்கியதோ ?
இந்தப் பணக்காரச் சாமி

நாங்கள்
குத்தவைக்கக் கூட
கோடி இடம் இல்லை
கோடியை எட்டிவிட்டது
லட்டுச் சாமி ...!


பணம் தின்னி மனிதா ...!
பட்சிகள் கூட 

பகிர்ந்துண்ணுகிறது 

பணம் தின்னி மனிதர்களே ஏன் 

பாவம் செய்கிறீர்கள் ...!
ஒருவனாக நில் ...!
நான்கு அறை 
இதயத்திலும் 
வாசலாய் நின்றவனே 

நான்கு பேர் 
சுமக்கும் பாதையில்  
ஒருவனாக நில் 
என் காதல்
மோட்சம் பெறும் ...!

இதயத்தில் நித்திரை பதிக்க ...!
கண்ணில் 
                  வைத்துக் கொண்டே 

கவிதையால் 
                      தேடுகிறேன் 


இணையத்தில் 
                      முத்திரைப் பதிக்க அல்ல 

இதயத்திலும் 
                       நித்திரைப் பதிக்கவே !
வழக்கு பதி...!அழுது புலம்பிய
காலம் போய் 

வாடிப் போடாவென 
வழியும் காலத்தில் 

வழக்கு பதிவாகிறது 
காதலா ? காமமா ?இன்றைய காதலர்கள் ...!
காற்றை 
விற்றவனும் இல்லை 
வாங்கியவனும் இல்லை 
ஏனோ ?

காதலை மட்டும் 
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்  
இன்றைய காதலர்கள் ...!
ஹைக்கூ - விதைகள் ...!மரணித்தும்  

உயிர்த்தெழுந்தது 

விதைகள் ...!


ஹைக்கூ - மே தினம்உணவு உடை இருப்பிடம் 

இவற்றிற்கில்லை விடுமுறை 

தொழிலுக்கு மட்டுமே ...!
வேற்று உலகை படைக்க ...!

மலர்கள் மலர மறுக்கிறது 

சூரியன் சுற்ற வெறுக்கிறது 

நிலா நிலைத் தடுமாறுகிறது 

நச்சத்திரங்கள் நாணூகிறது 

இயற்கை இறக்க நினைக்கிறது 

ஆன்மாக்கள் அழிவை தேடுகிறது 

காற்று கரைகிறது 

காலம் சுருங்குகிறது 

இறைவன் மட்டும் இன்னும் 

சந்தோசமாய் இருக்கிறான் 

வேறொரு உலகத்தைப் படைக்க ...!

கலிகால விதி...!

வெடிக்க மறந்தது 
விதைகள் 

விளைய மறுத்தது 
நிலங்கள் 

காற்று மட்டும் 
கேள்வி கேட்கிறது 

காலனே 
கலிகால விதியை மாற்றி 
எழுதக்கூடாதா என்று !

ஏனோ ?விதி மீறுகிறான்!

பாலியல் வன்முறை

மருத்துவமில்லா

விலங்கினங்கள் கூட 

விதியை மீறுவதில்லை 

ஆனால் 

மயானத்தைக் கூட 

மறு மணமாய் மாற்றும் 

மனிதன் மட்டும் ஏனோ ?

பாலியில் கொடுமையில்

விதி மீறுகிறான் ...!


இரத்த பானம் ...!

அனைத்து வகை இரத்தங்களும் 

அருந்தும் குளிர்பானத்திற்கு 

தெரிந்திருக்கு...

இரத்த தானம் மட்டும் 

ஒரே வகையில் வேண்டுமென்று 

மனிதனுக்கு மட்டும் 

ஏன் புரியவில்லை ...!


கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...