தீராத தீவிரவாதம்...!


மூன்று பேதத் தீயில்

மூழ்கும் மானிடா

"தீரா" வியாதி போல்

தீவிரவாதத் தீயில்

குளிப்பது ஏனோ ?


துப்பாகிகளும் 

அணுகுண்டுகளும் 

தூவி விளையாட

நாடென்ன நாடக மேடையா ? 

சொல் ...


வெறிப்பிடித்த எறும்பு போல்

விரட்டி விரட்டி

கடிச்சி கொதற 

மனித உயிர்கள் என்ன

கோழியா ஆடா ? 

பன்னியா ?நில் ...


பிணத்தின் பெயரில் 

போராட்டம் நடத்துவது 

இன்னொரு பிணத்திற்காக 

தேடும் ஒத்திகை கோசமா ?

யோசி ....


அணு உலை அழிக்கும் 

காலம் அறிந்தும் 

எதிர்மறைச் சண்டையில் 

எதிரியா நானாவெனப் 

பிரித்தெடுக்க 

குருதியென ஆராய்ச்சி கூடமா ?


சைவம் கூட அசைவமானது 

சைனஸ் நோய் போல்

மாற்று மருந்தாக ..

மார் தட்டி மோகம் தணிப்பது 

மிகையாகுமா ? சிந்தித்துப் பார் 


பழிக்கு பழி என்று

பாடுபடும் மனித விலங்கே  

நீ பதுங்கிக்கிடக்கும்

காட்டை விட்டு 

வெளியே வா 


வந்து 

அகிம்சை வழி நீருற்றி 

அமைதிப் பூ பறிக்க 

யாவரும் ஒன்றென

உரமிடுங்கள் ...!

2 comments:

 1. //அகிம்சை வழி நீருற்றி
  அமைதிப் பூ பறிக்க
  யாவரும் ஒன்றென
  உரமிடுங்கள் ...!//

  அருமையான முடிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...