புதையல் - 1





அம்மா பூங்கோதை எங்கேமா ராஜா மந்திரி இருவரும் 

இதோ அழைக்கிறேன் அப்பா என்றாள் .... 

இருவரும் வந்தார்கள் தனது தாத்தாவின் அருகில் அமர்ந்தார்கள் 

என்ன தாத்தா அழைத்தீர்கள் என்றார்கள் 

அதற்கு அந்தத் தாத்தா எனக்குப் பூலோகம் செல்ல அழைப்பு வந்துவிட்டது அதானால் இதுவரை நான் சொல்லாத ஒன்றைச் சொல்லப்போகிறேன் கவனமாகக் கேளுங்கள் என்றார் 

அப்படியா? தாத்தா சொல்லுங்கள் என்றனர் 

முன்னொரு காலத்தில் நானும் உங்க பாட்டியும் குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக ஏறி இறங்கினோம் அப்போது தான் கடவுள் கொடுத்த வரமாய் உங்கள் அம்மா பூங்கோதை எங்களுக்குப் பிறந்தாள் நாங்களும் மிகவும் சந்தோசப்பட்டோம்அதே சந்தோசத்தில் உங்க அம்மாவுக்குப் பத்து வயது வந்த பிறகு அவள் எடைக்கு எடைத் தங்கம் தருவதாக இறைவன் சன்னதியில் வாக்குறுதிக் கொடுத்தோம் 

அதே போல் அவளும் பத்து வயதை அடைந்தாள் அவள் எடைக்கு ஏற்றவாறுத் தங்கத்தை அந்தக் கோயில் உண்டியலில் போட்டு விட்டு வந்துவிட்டோம் 

வீட்டிற்கு வந்ததும் உங்க பாட்டிக்குச் சந்தேகம் வந்துவிட்டது அந்த நகையைப் பூசாரி எடுத்துவிட்டால் என்ன செய்வது தன் தர்மத்தின் பயன் தடைபட்டுவிடுமே என்று புலம்பினாள் 

உடனே நான் கோயிலுக்குச் சென்று பார்த்தேன் உங்கள் பாட்டி சொன்னது போல் நடந்தது அந்த நகையை எடுத்துக்கொண்டு பூசாரி ஓடினான்நான் பார்த்துவிட்டேன் பின்னாடியே விரட்டி ஓடினேன் என்னால் முடியவில்லை திரும்பி வந்துவிட்டேன். 

மறு நாள் காலையில் அந்தப் பூசாரி நமது தோட்டத்தில் இறந்து கிடந்தார் ஆனால் நகைகள் எங்கோ மறைந்துவிட்டது உடனே நானும்உங்கள் பாட்டியும் கோயிலுக்குச் சென்று முறையிட்டோம் அப்போது அங்கே ஓர் குரல் கேட்டது மகனே தயக்கம் வேண்டாம் உனது தர்மம் பத்திரமாக உள்ளது நீ எப்படி நீதி நேர்மைத் தவறாது ஏழை எளியோருக்குத் தொண்டு செய்தாயோ அதே போல் உன் அடுத்தத் தலைமுறையும் இருந்தால் அந்தப் புதையல் உன் வம்சத்தைச்சேரும் அதை உன் வம்சம் தவிர வேறு யாரும் அனுபவிக்கவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது இல்லையேன் அது மண்ணோடுமண்ணாகவே புதைக்கப்படும் ஆனால் ஒரு வேண்டுகோள் இதை நீ யாரிடமும் சொல்லக் கூடாது எப்போது உன் உயிர் பிரியுமோ அப்போதுதான் சொல்ல வேண்டும் என்றது நானும் சரி தாயே அவ்வாறே செய்கிறேன் என்று வீடு திரும்பினோம் இது தான் நடந்தது பேரங்களே நீங்களும் இது வரையுளும் எல்லாக் கஷ்டங்களையும் தாண்ட்டிவிட்டேர்கள் இருந்தும் நீங்கள் ஒரு பாவமோ பழியோ செய்ததில்லை அதனால் தான் உங்களிடம் சொல்கிறேன் என் ராஜா மந்திரிகளே என்றார் 

அதற்கு அவர்கள் போங்கத் தாத்தா நீங்கள் சினிமாப் படம் மாதிரிக் கதைச் சொல்லுகிறேர்கள் என்று அங்கிருந்து நகர்ந்தார்கள் அப்போது தாத்தா "கமலம்" என்று சொல்லி இறந்துவிட்டார் 

சிறிது நேரம் கழித்துப் பூங்கோதை வந்தாள் அங்கே தன் அப்பா இறந்துக் கிடந்ததைப் பார்த்து கத்திச் கூச்சல் போட்டாள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததனர் ராஜாவும் மந்திரியும் வந்து அழுதார்கள் மன்னியுங்கள் தாத்தா நீங்கள் கூறியதை நாங்கள் விளையாட்டாக எடுத்துவிட்டோம் என்று புலம்பினார்கள் 

மாலை ஆனது அவர் உடல் மயான கரைக்குக் கொண்டு செல்லப் பட்டது அங்கே இறுதிச் சடங்கு நல்லபடியாக முடிந்தது பின் அனைவரும் வீட்டிற்கு வந்தகர்கள் நாட்கள் கடந்தது தன் தாத்தாவின் தோழர் செய்திக் கேட்டுத் துக்கம் விசாரிக்க வந்தார் அப்போது தன் தாத்தா கூறியதை அவர்கள் சொன்னார்கள் அதற்கு அந்த நண்பர் அது உண்மையாகத் தான் இருக்கும் நீங்கள் முயன்று பாருங்கள் அப்போது தான் உங்கள் வறுமைக்கும் ஊருக்கும் நன்மை பயக்கும்அத்துடன் உங்கள் தாத்தா ஆத்மா சாந்தி அடையும் என்றார் அவர்கள் அயோ அதைத் தான் நாங்கள முழுமையாகக் கேட்கவில்லையேஎன்றார்கள் உடனே அந்தப் பெரியவர் கடைசியாக உங்கள் தாத்தா என்ன சொன்னார் யோசியுங்கள் என்று திரும்பிவிட்டார்

இருவரும் தாத்தாவின் போட்டோ அருகில் நின்று அழுதார்கள் அப்போது மந்திரிக்கு யோசனை வந்தது நம்மைத் தாத்தா இதுவரை ராஜாமந்திரி என்றே அழைப்பார் ஆனால் கடைசியாக அவர் அழைத்தது கமலம் அப்படி என்றால் அந்த வார்த்தையில் தான் எதோ ஒளிந்திருக்கிறது அந்தப் புதையலின் ரகசியம். 

ஆம் மந்திரி நீ சொல்வதும் முற்றிலும் உண்மை சரி விடு கண்டுபிடிப்போம் நமக்கு எப்போதும் நம் தாத்தா துணையிருபார் என்று நிறையப் புத்தகங்களைப் படித்தார்கள் அங்கே கமலம் என்றால் தாமரை என்ற பொருள் விளக்கம் இருந்தது உடனே மந்திரி சுதாரித்து விட்டான் 

அண்ணா ராஜா நான் ஒன்று விளக்கலாம 

தாராளமாக 

கமலம் என்றால் தாமரை 
தாமரை எங்கே இருக்கும் நீரில் 
நீர் எப்படி வந்தது மழையால் 
மழை எங்கிருந்து வரும் மேகம் 
மேகம் எங்கே உள்ளது வானத்தில் 
வானம் எங்கே பார்கிறது பூமியை 

அப்படி என்றால் வானம் பார்த்தப் பூமி இதன் பொருள் விளையாத நிலம் வனத்தை நோக்கிப் பார்க்கிறது அப்படி ஒரு நிலம் நம்மத் தோட்டம் தான் சுமார் இருபது வருடங்களாக விளைச்சலே இல்லாமல் இருக்கிறது அப்படி என்றால் அங்கே தான் அந்தப் புதையல் இருக்க வேண்டும்அண்ணா 

ம்ம்ம் மிகவும் சரியாகச் சொன்னாய் மந்திரி வா சென்று பார்க்கலாம் 

புறப்பட்டார்கள் நிலத்தில் நின்று கண்ணுக்கெட்டாத் தூரம் உள்ளது இவ்வளவு பெரிய நிலத்தில் எங்கே தேடுவது என்று விழித்தார்கள்அப்போது தாகம் எடுத்தது அருகில் இருக்கும் கிணற்றின் உள்ளே ஒரு சிறு ஊற்று இருந்தது அங்கே சென்று தாகத்தைத் தனித்தார்கள்அப்போது அந்தத் தண்ணீரில் அவர்கள் முகம் தெரிவதைக் கண்டு ராஜா சொன்னான் மந்திரி நம் முகம் தெரிவது போல் அந்த வனத்தின் முகம் அதாவது நிலா எங்கே தெரிகிறதோ அங்கே தான் புதையல் இருக்க வேண்டும் ஆம் அண்ணா என்ன ஒர் அற்புதமான விளகம் சரிவாருங்கள் இரவில் வந்து பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் 

அதே போல் இரவில் வந்தார்கள் அந்த நிலா அதே இடத்தில் மிதந்தது தோண்டினார்கள் அங்கே தங்கப் புதையல் எடுத்தார்கள் ஒரேஆச்சிரியம் பின் வீட்டிற்குச் சென்று தனது தாத்தா போட்டோ அருகில் வைத்து வணங்கினார்கள். மறு நாள் அந்தப் புதையலை ஊர் மக்கள்அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது தாத்தாவின் ஆத்மாவும் சாந்தி அடைந்தது வறுமையும் பறந்தோடியது.

ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டோம் தர்மம் தலைகாக்கும் நேர்மை குளம் காக்கும் என்பதை உணர்த்திவிட்டார்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு என ஆசிர்வதித்தார்கள் . 

சுபம் ! 



8 comments:

  1. சுபமான முடிவுடன் அழகான சிறிய கதை

    தர்மம் தலைகாக்கும் நேர்மை குளம் காக்கும்

    புதையல் போன்ற முடிவு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக இந்த மாதிரி புதிய யோசனையில் எழுத தொடங்கினே அதற்கும் அனைவரின் ஆதரவும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சிகள் பல மேலும் இந்த ஊக்குவிப்பே என்னை இன்னும் அதிகமாக எழுத தூண்டும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றிகள் ஐயா

      Delete
  2. சுவையான கதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் கவிதைக்கு மட்டும் ஆதரவு தாராமல் நான் பதிவிடும் அனைத்து பதிவுகளும் ஆதரவு தருவதைக் கண்டும் மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா

      Delete
  3. சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு (கமலம் - தாமரை)

    அருமையான கதை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா தினமும் வெறும் கவிதையை மட்டுமே பதிவிடுகிறோமே இந்த மாதிரி எதாவது புதிய கோணத்தில் பதிவிடலாமே என்று யோசித்தேன் வெறும் ஐந்து நொடிகள் தான் கதை எழுந்துவிட்டது மறு நாள் காலையில் வந்து டைப் செய்தேன் கதையை பகிர்ந்தேன் மாலை வரை ஒரு பின்னூட்டமும் வராததால் ஐயோ எங்கோ தவறு நடந்துவிட்டதோ என்று புலம்பினேன் இன்று காலையில் வந்து பார்த்தது மனதில் சந்தோசம் அதிகமாகிவிட்டது இனிமேல் கவிதையும் தவிர இந்த மாதிரி கதையும் பதிவிட முயற்சிக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவுகளை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
      நன்றிகள் பல

      Delete
  4. தர்மம் தலை காக்கும். அருமையான கதை சகோ

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் அண்ணா அன்பு நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145