நானும் தாஜ்மஹால் தான் ...!


நொடிகள் நகரநகர 
படிகள் ஆகிறேன்
நம் காதலில் !

பார்த்தால் ...
விதியின் வாசலில் 
கோலமிட்டது 
ஜாதிப்பூ!

ரசிக்க மட்டுமே நான் 
உன்னுடன் சேர்ந்து 
நடப்பதற்கில்லை என்றதும் 

இதயத்தைத் திறந்துவைத்து 
இளமையைப் பூட்டினேன் 
நானும் தாஜ் மஹாலாய் மாற ...!


10 comments:

 1. Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

   Delete
 2. இதயத்தைத் திறந்துவைத்து
  இளமையைப் பூட்டினேன்
  நானும் தாஜ் மஹாலாய் மாற ...!
  நினைவுச்சின்னமாய் கவிதை..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அக்கா !

   Delete
 3. அருமை! படிகள் என திருத்தவும்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா மாற்றிவிட்டேன் !

   Delete
 4. அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ சிறந்த கவி வரிக்கு .

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அக்கா !

   Delete
 5. //இதயத்தைத் திறந்துவைத்து
  இளமையைப் பூட்டினேன்
  நானும் தாஜ் மஹாலாய் மாற ...!//

  உலக அதிசயத்தில் ஒன்றானதோ, அவளின் தவிப்பு !

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் ஐயா

   தொடர் வருகைக்கு அன்பு நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...