கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்

மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி

குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்

நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி

கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்

மின்மினிக் கனவுகள்


மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்"
தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் .


ஆக்கம் - மின்னிதழ் (புரட்டாதி - ஐப்பசி -2017)

எந்த முனீவரின் சாபமோ 
நின்றபடியே ...
கோயில் சிலைகள் !
உளியின் சத்தம் 
காய்த்துப் போனது 
கடவுளின் மனம் !

பழங்களால் வந்த நோய்


மோசமான ரசாயனங்கள் கலந்துள்ளது!!  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகளில் எல்லாம் எச்சரிக்கை!!

வறுமையில் வாடிய குடும்பம் ஒரு நாளைக்கு உணவு உண்பதே கடினம் அப்படி இருக்கையில் தனது மகளை எப்படியாவது ரத்த சோகையில் இருந்து மீட்டெடுக்கவேண்டுமென்று தினமும் மாலை கடை வீதிக்கு சென்று அங்கு கூறு கட்டிய பழங்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கொடுப்பாள் மகளும் அதை விரும்பி சாப்பிடுவாள் 
ஒருநாள் திடிரென்று தாளாத வயிற்று வலி வந்தது துடிதுடித்தாள் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் அக்குழந்தையை பரிசோதனை செய்தார் அவராலே நம்ப முடியவில்லை அக்குழந்தைக்கு சம்மந்தமே இல்லாமல் பெரிய பெரிய நோயிகள் 
அம்மாவை அழைத்தார் மருத்துவர் என்ன இது உங்க குழந்தையை நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டேர்கள் இப்போது அவள் மரண தருவாயில் இருக்கிறாள் எப்படி, நான் கூறும் போது வெறும் ரத்த சோகை தானே இருந்தது இது எப்படி சாத்தியம் வேறு எங்காவது ரத்தம் ஏத்தி இருக்கீங்களா 
அவர் இல்லை டாக்டர் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் தான் கூறு கட்டிய பழங்களை வாங்கி கொடுத்தேன் 
ஐயோ அது தான் நீங்கள் செய்த தவறு 
இல்லை டாக்டர் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தான் கொடுத்தேன் 
அட அம்மா இப்படி இருக்கீங்களே இப்ப உள்ள பழங்கள் எல்லாம் கெமிக்கல் மூலம் விறபனைக்கு வருகிறது அதன் தாக்கமே ஒரு வாரம் தான் ஒரு வாரம் முடிந்ததும் குப்பையில் போடவேண்டிய பழங்களை இந்த மாதிரி கூறு கட்டி விற்பனை செய்கிறான் இதில் எத்தனை பேர் கைகள் தொட்டு புழங்கியிருக்கு நல்லவர்களும் வருவார்கள் நோய் உள்ளவர்களும் வருவார்கள் இல்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு எதாவது நோயிகள் இருந்திருக்கலாம் 
இரண்டாவது ரோட்டு கைடை என்றால் புகை ஈ கொசு இப்படி ஏகப்பட்ட கிருமிகள் நிறைத்திருக்கும் இந்த பழங்களை உண்டதால் தான் உங்கள் மக்களுக்கு இவ்வாறான நோயிகள் வந்திருக்கிறது தயவு செய்து பணம் குறைவு என்று எண்ணி பல நோயிகளுக்கு ஆளாக்குகிறார்கள் இன்றைய மக்கள் 
இது உங்களுக்கு மட்டும் அல்லா எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் (http://tamil.times.lk/news/2009)

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே 
தியானத்தில் இருக்கிறது 
நூலகத்தில் புத்தங்கள் 
ராப்பிச்சை 
ஒளிவீசுகிறது 
தட்டில் நிலா 
ஆடி பெருக்கு 
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் 
அம்மா 
சுடும் மணல் 
ஒத்தடம் கொடுக்கின்றன 
பனித்துளிகள் 
உயர்ந்த வானம் 
தரையிறங்கியதும் விஷமானது 
மண் வாசனை 

மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்


வணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி

இன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம் "#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

அப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன் வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

மேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் கொடுத்த அனைத்து மாதாந்திர இதழ்களுக்கும் நன்றிகள்

எனது எழுத்தை நூலாக வடிவமைத்த நம் மொழி பதிப்பகத்திற்கும், சிறப்பான கவிதையை தேர்வு செய்து அச்சிட்ட அண்ணன் இளையபாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல

நண்பர்களே இப்புத்தகம் சிறுசிறுக சேமித்து தேனீக்கள் போல் வெளிவந்துள்ளது அதை பருகும் வாசகர்களாகிய நீங்கள் நிறை குறை இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும் அடுத்த இதழுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்பது என் கருத்து

மற்றவை விரைவில் சொல்கிறேன்
என்றும் உங்கள் ஆசியியுடன் 
உங்கள் ஹிஷாலீ


எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?

Related image

இந்த உலகத்தின் 
முதல் கருவை 
என்ன ஜாதி என்று கூறு 
பின் சொல்கிறேன் 
என் ஜாதியை ....?

அந்த கருவறை
குழந்தை எந்த கருவறை
குழந்தையுடன்
மணமுடித்தது என்று கூறு
பின் சொல்கிறேன்
என் ஜாதியை ...?

மணமுடித்த கையேடு
மறு சுழற்சி முறையில்
புதுப்பித்த கருவறை
என்ன உறவு என்று கூறு
பின் சொல்கிறேன்
என் ஜாதியை ...?

ஜாதி ஜாதி ...
என்று கோஷமிடும் தமிழினமே
பேரைப் போலவே ஜாதி பிரிந்தது
ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது 
மதத்தைப் போலவே இனம் பிரிந்தது
இனத்தைப் போலவே மொழி பிரிந்தது
இன்னும் என்ன முடனே

எடுத்துரைக்கிறேன் கேள்
ஒன்று இரண்டாகி
உயர்ந்து திரியும் பறவையாய்
இனம் மட்டுமே கண்டு
இன்புற்றிருந்த காலத்தில்
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?

கொலுசு மின்னிதழ் – செப்டம்பர் 2017

அகால மரணம் 
தொலைத்தொடர்புக்கு அப்பால் 
இரங்கல் செய்தி 
சிபாரிசு கடிதம் 
சிரித்துக்கொண்டே 
காந்தியின் அகிம்சை 

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக 
சுற்றி வந்தாலும் 
தெருக்கு நான்கு ஜாதி

ஆரம்ப பள்ளி முதல் 
‎துடக்கப்பள்ளி‬ வரை 
தொட்டு பேசாத சாதி

முற்றத்தில் நின்று 
விட்டத்தை பார்த்தபடி 
அடி மடி நிரம்பாத கூலி சாதி

கள்ளத்தொடர்பு முதல் 
உள்ளத் தொடர்வு வரை 
கசக்காது காதல் சாதி

தீண்ட தகாதவன்
தீண்ட தகாதவன்
என்று தீண்டி தீண்டி 
எரிய விட்ட ஏழை சாதி

இப்படி தான் 
நம் 
பாட்டன் முப்பாட்டன் 
வாழ்ந்தான் 
நாமும் வாழ்கிறோம்

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில் 
புகையத் தொடங்கியது 
வங்கிக்கடன் 
உழைக்கும் கரங்கள் 
தேய்ந்து கொண்டே இருக்கும் 
ஆயுள் ரேகை 
அகலப்பாதை 
குறுக்கு வழியில் செல்கிறது 
மேய்ச்சல் ஆடு 
பயணம் செய்கிறாள் 
சுருக்கு முடிச்சு போட்டவாரே 
பூக்காரி 
ஆயிரம் காலத்துப்பயிர் 
அறுவடைக்காக காத்திருக்கிறது 
கோர்ட் வாசலில் 
அழும் குழந்தை 
கூடவே சிணுங்குகிறது 
கால் கொலுசு 
காற்றை நிரப்பிவிட்டேன் 
பறக்க மறுக்கிறது 
மனசு 

கவிச்சூரியன் - ஆகஸ்டு 2017 - ஹைக்கூ

இறந்த பூவில் 
தேனருந்த சுற்றும் 
தேனீக்கள் 
ஒலிக்கிறது
சகுனமாய் மனிதனுக்கு 
பூனையின் மணி 
வெள்ளிகளின் வெளிச்சத்தில் 
தங்கமென ஜொலித்தாள் 
செவ்வாய் பெண்
முதியோர் இல்லத்தில் 
இளமையாகவே இருக்கிறது 
மனதின் நினைவுகள் 
கோவில் திருவிழா 
காணாமல் போனது 
பாரம்பரிய கலைகள் 

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017

பொது சுவர் 
இரண்டாகப் பிரிகிறது 
பங்காளிகளின் உறவு 
ஊது பத்தி தொழில் 
புகைய தொடங்கியது 
வங்கிக் கடன் 
உழுத நிலத்தில் 
அடுக்கடுக்காய் தெரிகிறது 
கட்டிடங்கள் 
பாயும் வாகனத்தால் 
தூயக்காற்றும் துயரப்படுகிறது 
கண்ணுள்ள மனிதரால் 

கவிச்சூரியன் ஜூலை 2017 இதழில் எனது ஹைக்கூக்கள்

பரந்த கடல் 
குறுகிய வட்டத்திற்குள் 
இலங்கை அகதிகள் 
வறண்ட நிலத்தில் 
பூத்து குலுங்குகிறது 
காதல் ரோஜா 
நீர்க்கால்கள் ஓரம் 
செழித்து வளர்கிறது 
அன்றில் மலர்கள் 
பூக்காமலே 
காய்க்க தொடங்கியது 
நவீன நாகரிகம் 
நிஜ அலைகளுக்கு முன்
தோற்றுப் போனது
நினைவலைகள்

உழவும் தொழிலும் !
உழவும் தொழிலும் உலகினிரு கண்கள் 
உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல் 
தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள் 
தலை முறை பசி தீர்த்திடுமே உழவரின் கரங்கள்   
காணி நிலமும் கதிரவன் ஒளியும் 
கடவுளேனெக் கொண்டு களம் சேர்த்த 
நெல் மணிகள் உறவேதும் பாராது 
உலகுக்கே பாடியளந்த விவசாயி 
வளம் மிகுந்த மண்ணில் விலை உயர்ந்த 
இயந்திரம் மக்கள் பஞ்சம் தீர்த்துவைக்க 
மழையைதேடி  நிலைகுழைந்த விவாசயி 
இப்போ நிர்கதியா நிற்கின்றான் 
விலை நிலத்திலே வீடு வந்து குடியேற 
விற்றவனுக்கு சோறுமில்லை பெற்றவனுக்கு 
கூலுமில்லை கால் வயிறு கஞ்சிக்காக 
கல்லறையை தேடி திரிகிறான் விவசாயி
அடைக்கலம் கொடுக்க அரசுமில்லை 
ஆதரித்து கரைசேர்க்க ஆளுமில்லை 
கூறு போட்டு ஆடசியிலே கொடிகட்டி 
பறக்குது பார் பஞ்சமென்னும் அன்னக்கொடி !

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில் 
பேயாகத் திரிகிறது 
உதிரிப்பூக்கள் !
கீழ் வானம் 
மெல்லச் சிவக்கிறது 
தாவணிப்பூக்கள் !
சுருக்கு முடிச்சு போட்டவாரே 
பயணம் செய்கிறாள் 
பூக்காரி !
தண்ணீர் தாகம் 
நாவை அடக்கி வைத்தது 
மூச்சுக் காற்று !
முற்றிய விதையிலிருந்து 
துளிர்க்கிறது 
இளந்தளிர்  !
மழை இல்லை 
குடை பிடித்தபடி 
இளநீர் வியாபாரி 

கவிதையின் நிழலில் !

Image may contain: 1 person, closeup

இந்த பாலை வானத்திலும் 
ஓர் அழுகுரல் 
கேட்டுக்கொண்டே இருக்கிறது
கேட்பதற்கு நீ 
இல்லை என்றாலும்
சுவாசிப்பதற்கு வருவாயென 
காத்திருக்கிறேன் 
கவிதையின் நிழலில் !

கொலுசு ஜூலை 2017

துவையல் அரைத்த
அம்மியைச் சுற்றி
பாட்டியின் நினைவலைகள்
அலசும் துணியில் 
ஒட்டிக்கொண்டிருக்கிறது 
அம்மாவின் பாசம் 

முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017

கிளையை முறித்தபின் 
பூக்கத் தொடங்கியது 
செம்பருத்திப்பூ !
தேநீர் இலை பறித்துப் போட 
அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது 
சாரமற்ற வாழ்வு !
ஆயிரம் காலத்துப் பயிர் 
அறுவடைக்காகக் காத்திருக்கிறது 
கோர்ட் வாசலில் !
கோவில் வாசலில் நின்று 
வணங்காமல் இருக்கும் 
காலணிகள் !
கோவில் சுவற்றில் 
அசுத்தம் செய்யும்
தெரு நாய்கள் !
கொட்டித் தீர்க்கும் மழை
வயலில் இறங்கி 
கப்பல்விடுகிறான் பேரன் !
மாமியார் மருமகள் சண்டை 
பதவி உயர்வு பெறுகிறார் 
வீட்டு வேலைக்காரி !
வளைந்து நெளிந்த புருவம் 
நேராகச் செல்கிறது 
பார்வைகள் !

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆனி 2017

ஜன்னல் வச்ச ஜாக்கெட் 
இலகுவாக நுழைகிறது 
வன்முறை
அலசும் துணியில் 
ஒட்டிக்கொண்டிருக்கிறது 
அம்மாவின் நினைவு 

தளபதி விஜய் - க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Vijay's 61 film title, first look poster released
உள்ளொன்று வைத்து 
புறமொன்று பேசும் 
உலகினிலே 
உரிமைக்கும் குரல் கொடுத்த 
இளைய தளபதியே 
செய் நன்றி மறவாத 
ரசிகர்களுக்காக 
செஞ் சோற்று கடன் தீர்த்த 
தலைவனே 
உன் கையசைத்தால் 
கை தட்டும் கூடடத்திற்கு நடுவில் 
கலங்கரை விளக்காக 
வழிகாட்டி ஒளி கொடுத்த 
தமிழனே 
நல்லரசு கொடுத்தால் 
வல்லரசாகும் காலம் 
வெகு தூரமில்லையென்று  
போர் கொடி தூக்கிய 
விஜயனே 
உன்னை பாராட்ட 
உலகமே  காத்திருக்கு 
விரைந்து வா 
நாளைய முதல்வனே 

கொலுசு மின்னிதழ் ஜூன் 2017

அழும் குழந்தை 
கூடவே சிணுங்குகிறது 
கால் கொலுசு

வேப்ப முத்து பொறுக்கும் 
பாட்டி எண்ணிக்கொண்டிருக்கிறாள் 
பேரனின் பிறந்தநாளை !

பறவையின் எச்சம் 
உயர்ந்து நிற்கிறது 
ஆலமரம்

ஹைக்கூ இதழ் நடு நிசி உலா ஜூன் 2017

முற்றிய விதையிலிருந்து 
துளிர்க்கிறது 
இளந்தளிரி 
பொது சுவர் 
இரண்டாகப் பிரித்துவைத்தது 
பங்காளி சண்டை 

சட்டப்பேரவையின் வைரவிழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள் விழா

Image may contain: 1 person, sunglasses and text

ஜாதி மதங்களைக் கடந்தவரு 
சமத்துவம் பேசிடும் கலைஞரிவரு 
அண்ணா வழியில் நடந்தவரு 
அகிலத்தில் பூத்த முதல்வரிவரு 
முரசொலி இதழைத் தொடங்கியவரு 
முத்தமிழ் கவிஞராய் திகழ்ந்தவரு 
திரைக்கதை வசனம் அமைத்தவரு 
திராவிட கழகத்தின் மூத்தத் தலைவரிவரு  
ஆண்டுகள் அறுபது உழைத்தவரு
அருந்ததியர் வாழ்வைக் காத்தவரு                                                                   
இலவசக் கண்ணொளி வழங்கியவரு 
இதயங்களில் வாழும் தெய்வமிவரு 
வைர விழா கண்டவரு நாளைய 
வரலாறு பேசிடும் நாயகனிவரு 
உலகமே பார்த்து வியந்தவரு 
உயிர் மூச்சாய் வாழும் தமிழறிஞரிவரு 
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் நூற்றாண்டு !

ஜூன் 2017 தமிழ்நெஞ்சம் மாத இதழில் எனது ஹைக்கூ

அரை வட்டம் 
முழுமதிப்பெண் கிடைத்தது 
பரிட்சை பேப்பரில்
தரிசு நிலத்தைப் பார்த்து 
ஓயாமல் கத்துகிறது
கறவை மாடு
துரோகியின் மரணம் 
புண்ணியத்தை தேடிக் கொண்டது 
சவப்பெட்டி 
நடந்து முடிந்த இரவு 
சுத்தம் செய்கிறது 
காலைப் பனித்துளி
தலைமுழுகிய பின்பும் 
துவட்டிவிட்டுச் செல்கிறது  
சில நீர்த்துளிகள் 
அகலப் பாதை 
குறுக்குவழியில் சென்றது 
மேச்சல் ஆடு 
இந்தியாவின் முதுகெலும்பு 
செயலிழந்து கொண்டிருக்கிறது 
ஜந்தர் மந்தர் 
கோடை வெயில் 
குளிர்ச்சியாகவே இருக்கிறது 
கோயில் சிலைகள் 

மே 2017 தமிழ் வாசல் மாத இதழில் எனது ஹைக்கூ

நிலா சோறு 
பசியோடு திரும்புகிறது 
நட்சத்திரங்கள்
கிளையை முறித்தபின்
பூக்க தொடங்கியது
செம்பருத்தி பூ
மாமியார் மருமகள் சண்டை 
பதவி உயர்வு பெறுகிறார் 
வீட்டு வேலைக்காரி

கவிச்சூரியன் மே 2017 - எனது ஹைக்கூ !

கண்ணாம் பூச்சி ஆட்டம் 
காட்டிக்கொடுக்க மறுக்கிறது 
சுத்தியல் சத்தம் !
 
விடியலைக் கண்டதும் 
முகம் கழுவுகிறது 
கிழக்கு சூரியன்
 
அழிக்க மனமில்லை 
ஆளாக்குகிறது 
ரப்பர் மரம்
 
வீட்டின் மேல் கூரையில் 
ஊஞ்சலாடுகிறது நிழல் கொடுத்த
மரத்தின் ஞாபகம்
மலடி வைத்தாள் 
குலை தள்ளியது
வாழை மரம் !

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - வைகாசி - 2017

வாலிபக் காதலுக்கு 
வண்ணம் தீட்டிச் செல்கிறது 
நிழல் ஓவியம்
பஞ்சத்தில் அடிபட்ட காகம் 
குளித்துக்கொண்டிருக்கிறது 
குழாய் அடியில்
கரை ஒதுங்கிய பரிசல் 
மூழ்கியது மாணவனின் 
எதிர்க்கலாம் !
அளவு குறைந்தாலும் 
ஆசையை தூண்டுகிறது 
ஒரு குவளை தேநீர்
கனவு கலந்த தூக்கம் 
ஆறுதல் தந்தது 
காலை தேநீர்

கோடை வெயில் 
குளிர்ச்சியாகவே இருக்கிறது 
கோயில் சிலைகள் 

கொலுசு மின்னிதழ் மே 2017 எனது ஹைக்கூ

மோதிர விரல் 
மெல்லக் கடிக்கிறது 
வரதட்சணை கணக்கு ...!
குடையை விரித்ததும் 
நிழலை மறைக்கிறது 
சூரியன் ...!
பூட்டிய கோவில் 
மனம் திறந்து பேசினான் 
பாதிக்கப்பட்ட பக்தன் ...!
உதிர்ந்த இறகு 
பறந்து செல்கிறது 
ஒரு குழந்தையின் மனம் ...!

தாழ்வு மனப்பான்மை ...!

Image result for தாழ்வு மனப்பான்மை

உனக்கும் எனக்கும்
இடையே இருப்பது
சிறு வைராக்கியம் தான்
என்றாலும்
பெருசாகப் பேசப்படுகிறது
நமக்குள் இருக்கும்
தாழ்வு மனப்பான்மை

கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம் உப்புக்கரிக்கிறது மழைத்துளிகள் மொட்டை மரம் அழகாக படர்ந்திருக்கிறது வெற்றிலைக்கொடி குளிரும் ஆற்றில் மிதந்து செல்கிற...