ஹைக்கூக்கள்

பழுத்த இலையின் மேல் 
துள்ளிக்குதித்து விளையாடுகிறது 
விட்டில் பூச்சி
உழுத நிலத்தில் 
அடுக்கடுக்காய் தெரிகிறது 
கட்டிடங்கள்
எமதர்மனின் ஆயுள்
கூடிக்கொண்டே செல்கிறது 
மரணத்தின் வாயிலாக
நகரத்தை நோக்கி 
மெல்ல நகர்கிறது 
வன விலங்குகள் 
அழகின் பரிசத்தை 
ஒவ்வொன்றாக விளக்கியது 
எதிரே உள்ள கண்ணாடி 
புதுப் புதுப் மலர்கள் 
பூத்துக் குலுங்குகிறது 
முதியோர் இல்லத்தில் 
திருவிழா கூட்டம் 
கூடவே வருகிறது 
மதுக்கடை வாசம் 
அடகு கடையில் 
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது 
அம்மாவின் தாலி 
இரு தை மாற்றம் 
வழி பிறக்காத 
முதிர் கன்னி
நன்றி செய்தவரை 
ஒதுக்கி வைத்தது 
ஒட்டுண்ணிகள்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...