ஹைக்கூக்கள்

ஒரே கருவறையில் 
மலர்ந்த இரு வேறு 
கை ரேகைகள் 
நாற்காலி சண்டையில் 
தெரிகிறது 
கோடரியின் பகை !
வரப்புகள் நடுவே 
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் 
பெருச்சாளிகள் 
உடைந்த கண்ணாடிக்கு 
நடுவே தெரிகிறது 
பல புதிய முகம் 
சிவப்பு கம்பள விரிப்பில் 
தூங்கிக் கொண்டு இருக்கிறது 
பல சாதனை விருதுகள்
உறைபனி காலம் 
பளபளப்பாக மின்னுகிறது 
வானவில் 
வயதானாலும் 
இளமையான காற்றை தருகிறது 
மரங்கள்
கன்று ஈன்ற வாழை மரம்
முணுமுணுத்தபடியே செல்கிறார்
மாமியார்
கழட்டி விடட செருப்பில் 
ஒட்டிக்கொண்டிருக்கிறது 
செருப்பு தைத்தவனின் வடு 
புன்னை மரத்தடியில் 
அழுதுகொண்டிருக்கிறது 
ஒரு பறவை 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...