ஹைக்கூக்கள்

காக்கை அமர்ந்ததும்
திஷ்டி கழிந்தது
கோயில் கலசம்
ஊதுபத்தி தொழில்
புகைய தொடங்கியது
வாங்கிக் கடன்
முறை வாசல் சண்டை
முடிவுக்கு வந்தது...
சிமெண்ட் பூசியதும்
உழைக்கும் கரங்கள்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஆயுள் ரேகை
கால் நடை பராமரிப்பு 
சோடை போனது 
அரசாங்க சலுகை
மரம் விழுந்த இடத்தில்
வேரைத் தோண்டும்
காக்கை கூட்டம்
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள்
பாவ மன்னிப்பு கிடைத்தது
முதியோர் இல்லத்தில்
காற்றை நிரப்பிவிட்டேன்
பறக்க மறுக்கிறது
மனசு
தவளையின் ஆரவாரம்  
உறங்க முடியவில்லை  
அழுத குழந்தையின் நினைவுகள்
குடிசை பகுதி
எரிந்து சாம்பலாகிறது
மனித நேயம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...