ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

ஏழிசை கீதமும்
எழுந்து நிற்கிறது
தாய்மைக்கும் முன்...!

பூர்வ ஜென்ம பாவமோ
கொன்று குவிக்கிறது
தங்கம் !

எதோ ஓர் ஆசையில்
எழுந்து நிற்கிறது
காளான் !

கண்ணிற்கு புலப்பாடத காற்று
மண்ணிற்கு உணர்த்தியது
மகுடம் நிரந்திரமில்லை !

மின்சார சுடுகாட்டால்
சமயலறையாகிக் கொண்டிருக்கிறது
சமாதி நிலங்கள்

எங்கோ ஓர் மூலையில்
முடங்கிக்கிடப்பேன்
முதியோர்  இல்லம் இல்லாவிடில்

கடிகாரத்திற்கு போட்டியாக
கொக்கரக்கோ சேவல்
யாரும்  தாழ்ந்தவரில்லை

கனவை புதைத்தது
நினைவு மண்டபம்
பதவி ஆசையில்

ஆமைகள் நகர்வலம்
மகிழ்ச்சியில்(வரவேற்ப்புடன் )
எமதர்ம ராஜா

ஆழ்ந்த உறக்கத்தில்
நடத்துனர்
விழித்துகொண்டது விதி

வெற்றியை புதைத்து
தோல்வியை  தழுவுங்கள்
கஜினி முகமது

கண்ணீர் சுவையை
உணர்த்தியது
மீன்கள்

எதோ ஓர் மரக்கிளையில்
என் தாய்
தளிர்கள்

வான் தேவதைக்கு
வாழ்த்து மடல்
மலர்கள்

சிறுமைக்கும் பொறுமைக்கும்
பாடம் கற்பித்தது
எறும்புகள்

சைக்கிள் பயணம் முடிந்தது
தொடர்ந்ததோ
சைக்ளோன் ஓட்டை

வானம் பாலுட்டியது
மண் பிள்ளைக்கு
சூரியன் ஆசியால்

எத்தனையோ கனவுகள்
எரிக்கப்பட்டுக்கிடக்கிறது
ஓலை  குடிசையில்

திணிக்கப்பட்ட ஆசைகள்
தணிக்கை செய்யப்படுகிறது
நாளேட்டில்

கால்கள் அற்று
கரை சேருகின்றன
சிற்பிகள்

நிலையில்லாத வாழ்க்கை
நிலைக்கப்படும்
இறப்பின் தானம்

மரித்தபின்பு
உயிர்த் தெளுகிறாள்
நீதி தேவதை

தத்தளிக்கும் எறும்பிற்கு
தன்னடக்கத்தை கற்றுக் கொடுக்கிறது
உதிர்ந்த சருகுகள்

எறிந்த கனவுகள்
உயிர் பெற்றது
சரித்திரத்தில்

விளையாட்டு
விதையானது
சிறுவர் காப்பகத்தில்

கசிந்த பழத்தில் ருசி அதிகம்
உணர்த்தினான்
தாள் சிறுவன்

யாரும் கற்றுக் தரவில்லை
வழிப் போக்கனுக்கு
கணித அறிவு

உதிர்ந்த மொட்டுக்களுக்கு
மீண்டும் உயிர் கொடுத்தது
நார் !

சிறை பட்ட கண்களுக்கு
விடுதலை
கண் தானம்

இரு ஜாதி குடுவையில்
ஒரு ஜாதிப் பூ
காதல்

வான் கூட்டில்
தேன் கசிவு
வாழ்த்தும் உயிரினங்கள்

வலியின் ஏற்ற இறக்கத்தை
அளந்து காட்டுகிறது
மூக்கு கண்ணாடி

9 comments:

 1. கணித அறிவு, கண் தானம் உட்பட அனைத்தும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. எல்லாமே அருமை..
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வான் கூட்டில்
  தேன் கசிவு
  வாழ்த்தும் உயிரினங்கள்

  தேன் துளிகளாய் ஹைக்கூக்கள்..! பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. "எத்தனையோ கனவுகள்எரிக்கப்பட்டுக்கிடக்கிறது ஓலை  குடிசையில்"

  அருமை

  உண்மையே உணர்ந்தால்தான் இது ஒன்ற உண்மைகள் மனதிற்கு புலப்படும்

  ReplyDelete
 5. எத்தனையோ கனவுகள் எரிக்கப்பட்டுக்கிடக்கிறது ஓலை  குடிசையில்


  அருமை

  உண்மையே உணர்ந்தால்தான் இது போன்ற உண்மைகள் மனதிற்கு புலப்படும்

  ReplyDelete
 6. சிறந்த பாவரிகள்

  ReplyDelete
 7. உதிர்ந்த மொட்டுக்களுக்கு
  மீண்டும் உயிர் கொடுத்தது
  நார் !
  அனைத்தும் உண்மையும் அருமையும்.
  என் முதல் வருகை இனி தொடார்கிறேன் ... தொடர வாழ்த்துக்கள்........!

  ReplyDelete
 8. அனைத்தும் சிறப்பான ஐகூக்கள்...

  பிடித்தது...

  மரித்தபின்பு
  உயிர்த் தெளுகிறாள்
  நீதி தேவதை

  ReplyDelete
 9. அழகான ஹைகூக்கள் ...!!!

  வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

  தொடர வாழ்த்துக்கள் ...!!!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

#mhishavideo - 154 thought