ஹைக்கூக்கள்

அடகு கடை 
கனமாக இருக்கிறது 
படிக்கல் 
நெகிழி அரிசி 
புழுக்களாக மாறும் 
மனிதர்கள் 
கரையில்லா சுவற்றில் 
ஏறி இறங்குகிறது 
வீட்டு மனைகள்
உடலில்லா நாற்றம்
குடலை பிடுங்கினது
கௌரவக் கொலை
புத்தக புழுக்கள் 
நெளிந்துகொண்டிருக்கிறது 
முகநூல் பக்கம்
பட்டமளிப்பு விழா
கை குழந்தையுடன்
முன்னாள் காதலி
வற்றிய நதியில் 
நிரம்பி வழிகிறது 
விவசாயின் கண்ணீர்
ஈறும் பேணும்
செழிப்பாக வளர்கிறது
அநாதை இல்லத்தில் 
மனதை கலைத்துவிட்டேன் 
லேசாக தெரிகிறது 
குப்பை தொட்டி
ஒட்டு வீடு 
முந்திக்கொண்டது 
கட்டிடங்கள்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...