ஹைக்கூக்கள்

மழையின் அடர்த்தி 
நிரம்பவில்லை 
கடலின் பசி
அரசனையும் 
ஆண்டியாக்கியது 
அந்தி நேர தென்றல் காற்று"
வெளியூர் மாப்பிள்ளை 
அண்ணாந்து மேலே பார்த்தால்
வானூர்தி
புது செருப்பு 
கடிக்கிறது 
தையல்கூலி 
தாத்தாவின் பிரிவு 
வனவாசத்தில் 
சீதாப்பாட்டி 
சடங்கு சம்பிரதாயம் மூலம் 
பிரிந்துகிடக்கிறது 
கலப்பு திருமணம்
மழை இல்லாமல் 
துருப்பிடித்தது 
குடைகம்பி
அழுதுவிட்டேன் 
சிரிக்கிறது 
காற்றில் உதிர்ந்த பூ
நதி இருந்த இடத்தில் 
துள்ளி குதித்து ஓடுகிறது ....
மேச்சல் ஆடு
இரவை வாசிக்க வாசிக்க 
பகலாகி போகிறது 
மேகம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...