ஹிஷாலீ ஹைக்கூ - 28



சோற்றாய் குவியுது 
மலர்கள் 
பசியில் சூரியன்


இரவு அங்காடியில் 
விற்பனையில் இல்லை 
நட்சத்திர நிலவு 





இலையில் படுத்துறங்கும் 
ஆடு மேய்ப்பவளின் மூக்குத்தி 
பனித்துளிகள் 





மாடு மேய்ப்பவளின் 
முகம்பார்க்கும் கண்ணாடி
குளத்தில் குதிக்கும் சூரிய ஒளி



சென்ரியு - 2



அம்மாவாசையில் முந்திவிரித்தேன் 
பௌர்ணமியில் பாவ மன்னிப்பு 
கேலியாய்  குழந்தை

வரியால் விலை வீக்கம் 
வளர்கிறது பொருளாதாரம் /வாணிபம் 
ஏக்கத்தில் விவசாயி 

வியர்வையில் உரம் 
இனித்தது கரும்பு 
கசந்தது உழுதவனின் பசி 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 116-120


ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் :

குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்.
நீதி மறந்து 
அநீதி செய்தால் 
வாழ்க்கை கெடும் 
குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நீதியால் கெட்டான்
புகழ்
நிலைத்திருக்கிறது
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கணி.
சம நீதியின் 
அளவு கோல் 
தராசு முள் 
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
உட்கோட்டம் இன்மை பெறின்.
நேர்மை நெஞ்சுறுதி 
கொண்டவரின் சொல் 
கடவுள் வாக்கு 
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின்.
முதலாளி தொழிலாளி பார 
நேர்மை வாணிகம் 
சிறந்த லாபம் தரும் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 111-115

ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்:


குறள் 111:

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், அயலார், நண்பர் 
என்று பாகுபாடில்லா நீதி 
நடுவுநிலைமை 
குறள் 112:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
நீதி மான்களின் செல்வம் 
எல்லா  தலைமுறைக்கு 
பாதுகாப்பாக இருக்கும்.
குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே யொழிய விடல்.
நீதி தவறிய லாபம் 
ஒரு போதும் 
நன்மை தராது 
குறள் 114:

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்ப படும்.
இன்றும் என்றும் பேசப்படுவது 
ராமன் புகழ் 
ராவணன் இகழ்
குறள் 115:

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி.
வாழ்வும், தாழ்வும் 
விதியால் இல்லை 
நீதியால் உள்ளது


சென்ரியுவாய்த் திருக்குறள் - 101 to 110


ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்:

குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.
பெருமைக்கு உதவாமல் 
வறுமைக்கு உதவுபவன் 
வான் வையகதிற்கு ஈடு ஆக  
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.
உயிருக்கு போராடும் தருணத்தில் 
கைமாறு கருதா உதவி 
பூமியை விட மிகப் பெரியது 
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.
பிறர் மொய் நாடாமல் 
பெருமையற்று செய்யும் உதவி 
கடலை விட பெரியது...!
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.
தர்கசமயத்தில் செய்யும் உதவி 
பயன் பெற்றோர் 
போற்றுவார் வானளவு
குறள் 105:
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
வாங்கிய உதவிக்கு மேல் 
பொருள் உதவுவது 
இருவரின் சிறந்த பண்பளவு...!
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
நேர்வழி நட்பு 
துன்பத்தில் தூக்கிவிட்ட நட்பு 
இரண்டையும் மறப்பது தவறு...!
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் 
விழுமந் துடைத்தவர் நட்பு.
ஜென்மமெல்லாம் புகழ் பெற 
அடுத்தவரின் 
துன்பத்தை போக்குக 
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.
இதயத்தின் நல் அறம் 
நல்லதை மறக்காமல்
கெட்டதை மறப்பது
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கொலையளவு தீமை 
செய்தாலும் அவரின்   
முன் நன்மை மறவாதே 
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 
பாவத்தை அழிக்கும் வழி
பிறரின்  நன்மையை 
மறக்காதிருந்தால் 

ஹிஷாலீ ஹைக்கூ - 27

பழுதுண்டு சாலையில் 
பழைய பல்லவன் 
புதிய பயணச் சீட்டு 
மனித நேயத்தின் 
மறுமலர்ச்சி காவியங்கள் 
காந்தி காரல்மார்க்ஸ்

விவசாய மண்ணின் 
தாய் பால் 
காவேரி தென்பெண்ணை பாலாறு

அவன் விழி  பிம்பத்தில் 
ஆயிரம் முகங்கள் திருத்தம் 
விரத்தியில் சலூன் கண்ணாடி 

பக்கங்கள்  இல்லா இதயத்தில் 
சாகும் வரை எழுதுகிறேன் 
சுயசரித்திரம் 

ஹிஷாலீ ஹைக்கூ - 26


நன்றாக கட்டிய வீடு 
நற் சிந்தனை உள்ளம் 
தீயவை நுழையாது..!
நிலம் பிளந்து 
உயிர்கள் விதையானது 
சுனாமி...! 
முன் ஐந்து ஊழல் 
பின் ஐந்தில் பட்டியலிடுதல் / மறு பரிசீலனை செய்தல் 
அரசியல்...!
சாக்கடையை சுத்தம் செய்தவன் 
சாராயத்தில் ஆசிங்கமாகிரன் 
வறுமையின் நிறம் கருப்பு...!
கோடியில் புதைந்த மரங்கள் 
கருப்பு வைரமானது 
எதுவும் வீணில்லை உலகில்
பால்வீதி வயிற்றில் 
பேரண்டம் 
ஜீன்களின் பிரசவம் 
நீளும் வானம் 
நிழலில்லா உண்மை 
உலக நீதி...! 
கேட்டது கிடைக்கும் முன் 
கேள்விகள் தொடர்கிறது 
ஆசைக்கு அளவில்லை...!
நாநூறு ஆண்டுகள் 
இனிக்கும் ஆரஞ்சு கனி 
இயற்கை மருத்துவம் 
மெலிந்த  தேகம் 
பானை வயிறு 
குவாஷி யோர்கள்   

ஹிஷாலீ ஹைக்கூ - 25


கணினிமயம் உலகமயமானதால் 
ஒழிந்துவிடாது 
கை ஓவியம்...!   
கணினி மறந்ததால் 
கல்லின் சிற்பம் 
கடவுளாகிறது..! 
தமிழனின் அறிவுப் பால் 
பேசும் ஓவியம் 
எழுதும் காவியம்...!
வாடிய பயிர்களுக்கு 
வலிகள் தெரிவதில்லை 
வருத்தத்தில் நிலம் 
வானில்  மின்சாரம் 
கூறு போடாத நிலா 
புன்னைகையில் இரவு 
காணி நிலமும் கட்டிடமானால் 
ஊண் உண்ணிகள் 
அழிந்துவிடும்...!
தொகு பகுதி 
மூல காரணி 
பணம்...!
சூரியன் வருகை 
கடலின் 
பிராணாயாமம்...!
மனிதனின் 
உயிர் மருந்து
ஆசனம் சுவாசனம்...! 
பத்துமுறை சுற்றினால் 
களிமண் பானை 
மனிதன் என்றுமே...!

குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்










பிச்சைக்காரன் : அம்மா தாயே பழைய மொபைல் இருந்த பிச்ச
போடுங்களேன்



குபேரன் : எல்லாரும் காசு தானே கேட்பாங்க நீ என்ன மொபைல் கேட்குற....


பிச்சைக்காரன் : அதுவா யாராருக்கு என்ன தேவையோ அததான் கேட்டு வாங்குவாங்க .


குபேரன் : அப்படியா நான் மொபைல் பிச்ச போட்ட நீ வாங்கி என்ன
பண்ணு வே



பிச்சைகாரன்: அதுவா இப்பெல்லாம் டிவில நெறையா நிகழ்ச்சி வருது அதுக்கு SMS பண்ணுனா ஒரு கோடியாம் அதன் கேட்டேன்


குபேரன் : அப்படியா அதுல நீ எப்படி வின் பண்ணுவா ....?


பிச்சைக்காரன்: இந்தியாவில எத்தன கோயில் இருக்கு தெரியுமா


குபேரன் : தெரியாது ......


பிச்சைக்காரன் : மக்கள் தொகை


குபேரன் : சுமார் 1.17 மில்லியன் இருக்கலாம்


பிச்சைக்காரன்: இந்த மக்கள் தொகையில கால் வாசி கோயில்
இருக்குமா அந்த கால்வாசி கோயில்ல எங்க கூட்டங்க தான் இருக்காங்க அதனால எப்படியும் SMS பண்ணுறவுங்கல பாதிப் பேர் தான் பண்ணுவாங்க அந்த பாதில கால்வாசி நாங்க தானே இருக்கோம் அப்போம் நாங்க தானே ஒரு கோடிய வின் பண்ணுவோம் அப்போம் நானும் கோடிஸ்வரன் தானே



குபேரன் : அட முட்டாள் ஒரு நாளைக்கு உனக்கு எவளவு கலைக்சன் ஆகும்


பிச்சைக்காரன் : என்ன ஒரு ஐய்நூறு ரூபாய் சில்லறையா வரும்


குபேரன் : அப்படினான் இந்த ஐய்நூறு ரூபாய் சில்லறைய உங்க கால் வாசி பிச்சைக்காரங்க உனக்கு தினமும் அனுப்புனா உன்னால எண்ண முடியுமா .....?


பிச்சைக்காரன் : முடியாது கொஞ்சம் சோம்பேறியா தன் இருக்கும்


குபேரன் : அப்படினா இந்த உலகத்துல இருக்குறவங்க அனுப்புற SMS அவனால எப்படி பார்க்க மடாலயம். அப்படியே பாத்தாலும் நிச்சையம் உங்கள் யாரையுமே தேர்வு செய்யமாட்டன் எல்லாமே கண் தொடிப்பு இது உனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும் இருந்தும் ஏமாருராங்களே மக்கள் இத நினைச்ச சிரிப்பு தான் வருது நீ சோம்பேறியா பணம் சம்பாதிக்க ஆசப்பட்ட பிச்சைக்காரன இருக்க. அவன் அறிவால சம்பாதிச்சதால அவன்கிட்ட நான் குபேரனா இருக்கேன் ஒன்னு தெரியுமா 1.17 மில்லியன்ல 3- னால பெருக்கி பாரு அவன் எவளவு சம்பாதிப்பான் அதுல விளம்பர காசு வேற இப்படியே போனா அவன் அம்பானி நீ சப்பாணி ஹா ஹா ஹா


பிச்சைக்காரன்: சிரிக்காதே குபேரா நானும் இனிமேல் அறிவால
சாதிக்க முயற்சி செய்கிறேன் நீ எனக்கு துணையா இருப்பியா ...?



குபேரன் : நிச்சையமா உன்ன மாதிரி சோம்பேறியா இருக்குறவங்கல திருத்த தான் நான் குபேரனா அவதாரம் எடுத்துருக்கேன்.
அப்போம் நான் போயிடு வரட்டா ......!



பிச்சைக்காரன்: மிக்க நன்றி. சந்தோசமா போயிட்டு வாங்க குபேரா ....!

சென்ரியுவாய்த் திருக்குறள் 96 to 100

ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் : 

குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.

நாட்டில் 
அறநெறி தழைக்க
இன்சொல் பேசுக

தீமை அகற்றி 
நல்வழிகாட்ட 
தேன் சொற்கள் போதும் 

குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

உலகத்தாரோடு ஒன்றுவது
பிறருக்கு நன்றி பயக்கும் 
பண் சொல்

குறள் 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.

அன்றும் இன்றும் என்றுமே 
புகழுடன் திகழ 
மனுநீதி சோழன் இன்சொல்லே...!

குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

கடுஞ்சொல் பேசாதவர் 
வாழ்க்கை 
இன்பம் பெருகும்

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இன்பமற்ற சொல்லை நாடுபவர்  
கனியை விட்டு 
விஷத்தை உண்பவர் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95


ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் 
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
வஞ்சனையற்று 
வாய்மையன்பு சொற்கள் 
இனிய சொல்.
வார்த்தையில் அன்பு 
நேசத்தில் காதல் உடையவர் 
அறம் அறிந்தவர்...! 
குறள் 92:
அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.
கொடுக்கும் கைகள் 
சிரிக்கும் புன்னகை 
பிறப்பின் நன்றிக்கடன் 
குறள் 93:
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்!
பெரியவருடன் பணிவு 
சிரியவரிடன் அன்பு 
வாய்மையின் அறம்...!
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

சென்ரியுவாய்த் திருக்குறள் - 81 to 90

ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள் : 


குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.
அண்டைவீட்டாரை  அனுசரிப்பதும் 
விருந்தினருக்கு  உதவுதல்
இல்வாழ்க்கையின் அழகு 
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினரை மறைத்து 
உண்ட பண்டம் 
விஷமானது 
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினருக்கு உதவினால் 
வறுமை துன்பம் 
குடும்பத்தை நெருங்காது 
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.
மனமகிழ்ச்சி முகமலர்ச்சி
ஜொலிக்கும் வீட்டில் 
திருமகள் குடி இருப்பாள்.
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.
விதை நெல்லை 
விருந்தளிப்பவன் 
சிறந்த பண்பாளன்
குறள் 86:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.
விரும்பாத விருந்தினரை உபசரித்து 
வரும் விருந்தினரை எதிர் பார்ப்பவன் 
கடவுளின் விருந்தினன்!
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினரின் தகுதிக்குமேல் 
விருந்தளிப்பது 
அளவிட முடியாத நன்மை 
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.
கஷ்டத்தில் சேர்த்த செல்வம் 
தன் இஷ்டத்தில் செலவளிபவன் 
புண்ணியத்தை இழப்பான்...! 
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.
கோடி செல்வம் இருந்தும் 
கொடைவள்ளல் அற்றவர்  
மூடர் 
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குநழ்யும் விருந்து.
முகம் கோணி
அமிழ்தம் படைத்தால் 
வாடும் அனிச்சப் பூ 

சென்ரியுவாய்த் திருக்குறள் 76 to 80


குறள் 76: 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை.
அறத்திற்கும் 
மறத்திற்கும்
அன்பே துணை 
குறள் 77: 
என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.
புழுவைப்போல் வெயிலில் 
காயிந்து இறப்பான் 
அறத்தை மறந்தவன்
குறள் 78: 
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.
பட்டுப் போன அன்பு 
பாலைவனமானது 
வாழ்க்கை...!
நீண்ட ஆயுள் 
நிறைந்த வாழ்வு 
அன்பு செய்
குறள் 79: 
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
புறத்தில் உலக அழகி 
அகத்தில் ராட்ச்சசி 
பயனில்லா வாழ்க்கை 
குறள் 80: 
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.
உடம்பு உயிர் தோள் 
கவசக் குண்டலம் 
அன்பு 

ஹிஷாலீ ஹைக்கூ - 25


கணினிமயம் உலகமயமானதால் 
ஒழிந்துவிடாது 
கை ஓவியம்...!   
கணினி மறந்ததால் 
கல்லின் சிற்பம் 
கடவுளாகிறது..! 
தமிழனின் அறிவுப் பால் 
பேசும் ஓவியம் 
எழுதும் காவியம்...!
வாடிய பயிர்களுக்கு 
வலிகள் தெரிவதில்லை 
வருத்தத்தில் நிலம் 
வானில்  மின்சாரம் 
கூறு போடாத நிலா 
புன்னைகையில் இரவு 
காணி நிலமும் கட்டிடமானால் 
ஊண் உண்ணிகள் 
அழிந்துவிடும்...!
தொகு பகுதி 
மூல காரணி 
பணம்...!
சூரியன் வருகை 
கடலின் 
பிராணாயாமம்...!
மனிதனின் 
உயிர் மருந்து
ஆசனம் சுவாசனம்...! 
பத்துமுறை சுற்றினால் 
களிமண் பானை 
மனிதன் என்றுமே...!

mhishavideo - 145