சென்ரியுவாய்த் திருக்குறள் - 101 to 110


ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்:

குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது.
பெருமைக்கு உதவாமல் 
வறுமைக்கு உதவுபவன் 
வான் வையகதிற்கு ஈடு ஆக  
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.
உயிருக்கு போராடும் தருணத்தில் 
கைமாறு கருதா உதவி 
பூமியை விட மிகப் பெரியது 
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.
பிறர் மொய் நாடாமல் 
பெருமையற்று செய்யும் உதவி 
கடலை விட பெரியது...!
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.
தர்கசமயத்தில் செய்யும் உதவி 
பயன் பெற்றோர் 
போற்றுவார் வானளவு
குறள் 105:
உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
வாங்கிய உதவிக்கு மேல் 
பொருள் உதவுவது 
இருவரின் சிறந்த பண்பளவு...!
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
நேர்வழி நட்பு 
துன்பத்தில் தூக்கிவிட்ட நட்பு 
இரண்டையும் மறப்பது தவறு...!
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் 
விழுமந் துடைத்தவர் நட்பு.
ஜென்மமெல்லாம் புகழ் பெற 
அடுத்தவரின் 
துன்பத்தை போக்குக 
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.
இதயத்தின் நல் அறம் 
நல்லதை மறக்காமல்
கெட்டதை மறப்பது
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கொலையளவு தீமை 
செய்தாலும் அவரின்   
முன் நன்மை மறவாதே 
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 
பாவத்தை அழிக்கும் வழி
பிறரின்  நன்மையை 
மறக்காதிருந்தால் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 41

என் கொலுசொலியில் கேட்கிறது உன்  உயிரின் சங்கமம்