ஹிஷாலீ ஹைக்கூ - 28சோற்றாய் குவியுது 
மலர்கள் 
பசியில் சூரியன்


இரவு அங்காடியில் 
விற்பனையில் இல்லை 
நட்சத்திர நிலவு 

இலையில் படுத்துறங்கும் 
ஆடு மேய்ப்பவளின் மூக்குத்தி 
பனித்துளிகள் 

மாடு மேய்ப்பவளின் 
முகம்பார்க்கும் கண்ணாடி
குளத்தில் குதிக்கும் சூரிய ஒளி4 comments:

 1. நல்ல‌ சிந்தனைத் தோழி

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் நண்பரே

  ReplyDelete
 3. புதிய சிந்தனையில் முதல் ஹைக்கூ அருமை! மற்றவையும் சிறப்பே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மிக்க நன்றிகள் அண்ணா

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு