சென்ரியுவாய்த் திருக்குறள் - 81 to 90

ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள் : 


குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.
அண்டைவீட்டாரை  அனுசரிப்பதும் 
விருந்தினருக்கு  உதவுதல்
இல்வாழ்க்கையின் அழகு 
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினரை மறைத்து 
உண்ட பண்டம் 
விஷமானது 
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினருக்கு உதவினால் 
வறுமை துன்பம் 
குடும்பத்தை நெருங்காது 
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.
மனமகிழ்ச்சி முகமலர்ச்சி
ஜொலிக்கும் வீட்டில் 
திருமகள் குடி இருப்பாள்.
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.
விதை நெல்லை 
விருந்தளிப்பவன் 
சிறந்த பண்பாளன்
குறள் 86:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.
விரும்பாத விருந்தினரை உபசரித்து 
வரும் விருந்தினரை எதிர் பார்ப்பவன் 
கடவுளின் விருந்தினன்!
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினரின் தகுதிக்குமேல் 
விருந்தளிப்பது 
அளவிட முடியாத நன்மை 
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.
கஷ்டத்தில் சேர்த்த செல்வம் 
தன் இஷ்டத்தில் செலவளிபவன் 
புண்ணியத்தை இழப்பான்...! 
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.
கோடி செல்வம் இருந்தும் 
கொடைவள்ளல் அற்றவர்  
மூடர் 
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குநழ்யும் விருந்து.
முகம் கோணி
அமிழ்தம் படைத்தால் 
வாடும் அனிச்சப் பூ 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...