ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள் : |
குறள் 96:
|
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
நாடி இனிய சொலின். |
நாட்டில்
|
அறநெறி தழைக்க
|
இன்சொல் பேசுக
|
தீமை அகற்றி
|
நல்வழிகாட்ட
|
தேன் சொற்கள் போதும்
|
குறள் 97:
|
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
பண்பின் தலைப்பிரியாச் சொல். |
உலகத்தாரோடு ஒன்றுவது
|
பிறருக்கு நன்றி பயக்கும்
|
பண் சொல்
|
குறள் 98:
|
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
இம்மையும் இன்பம் தரும். |
அன்றும் இன்றும் என்றுமே
|
புகழுடன் திகழ
|
மனுநீதி சோழன் இன்சொல்லே...!
|
குறள் 99:
|
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
வன்சொல் வழங்கு வது. |
கடுஞ்சொல் பேசாதவர்
|
வாழ்க்கை
|
இன்பம் பெருகும்
|
குறள் 100:
|
இனிய உளவாக இன்னாத கூறல் |
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. |
இன்பமற்ற சொல்லை நாடுபவர்
|
கனியை விட்டு
|
விஷத்தை உண்பவர்
|
சென்ரியுவாய்த் திருக்குறள் 96 to 100
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...