ஹைக்கூ - காதலின் பரிசு


காதலின் பரிசு 

தோல்வி ஜென்மம் 

வெற்றி ஜெனனம் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ - அருவி ...!



இயற்கைக்கு 

பல் துலக்கியது 

அருவி ...!

என்றென்றும் புன்னகை...!



அதிசயத்திற்கு உயிரூட்டும் 
அவள் கண்கள்

அன்பிற்கு பயிரூட்டும் 
அவள் வாசம் 

அத்தனைக்கும் ஆசைப்படு என்று  
விதையாகி வீழ்ந்தேன் 

வீதியை அலங்கரிக்கு  
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...!



எமதர்மன் ...!


விலை மதிப்பு இல்லா
 ஊரில்
விதி மதிப்பை தேடும் 
உளவாளி 
எமதர்மன் ...!











ஆயிர முத்தம் ...!



ஆயிரம் முறை யோசித்து 

அரை முத்தம் தந்தேன் 

என் அருகில் 

யாரும் இல்லாததால் 

இருந்தால் ....

ஆயிரம் முத்தம் தந்திருப்பேன் 

இதய சத்தத்தில் ...!


சரித்திரம் ...!



சாரிரம் படிக்கச் சென்றேன் 

சரித்திரம் படித்துவிட்டேன் 

இசையில் அல்ல 

அவள் இதயத்தில் ...!



காதல் ஜீன்கள் ...!



தொற்று வியாதி பற்றி 

கேள்விப் பட்டிருக்கிறேன் 

நீ

தொற்றிக்கொள்ள மட்டும் 

ஏன் தடை விதிக்கிறது 

காதல் ஜீன்கள் ...!



வரமா ? சாபமா?


நீ 

எனக்கு கிடைத்தால்

அது 

முன் ஜென்ம சாபம் ...!

நான் 

உனக்கு கிடைக்காவிட்டால்

அதுவே 

பின் ஜென்ம வரம் ...!




நாளைய சரித்திரம் - ஹைக்கூ,



நாளைய சரித்திரம் 

பேனாவை மிஞ்சியது 

கணினி ...!



மணிவண்ணன் ...! (15.06.13)



மணி சுற்றுகிறது மலர் வளையம் பற்ற 
வண்ணம் மறைந்தது ஏனோ ?அவர் 
எண்ணமெல்லாம் திரை இறைவா 
என்னது இது உன் குறைவா?

தந்தை இழந்த மகனுக்கு 
தன் கை உதிவி செய்தாயோ ?
மங்கையர் தாயின் குங்குமத்தை 
மரணத்தில் விதைத்தாயோ ?

சங்கமிக்கும் திரைக்கடலில் 
சரித்திரம் படைத்த கலங்கரை 
அங்கம் மட்டும் ஆடுகிறது மனையில் 
அடுத்த பாதரசம் இல்லாமல்
நகைச்சுவையே ...

ஒரு திரி எரியப் பல விழி கரையத்  
தேராய் போகும் கலையே உனக்காக 
உலகமே வழியனுப்பிவைத்தது  
நலலொரு திரைப் பிரம்மனை 
இழந்துவிட்டோமோ என்று !

(இவரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் )

காதல் காதலாகும் ...!



யார் 
யாரை வேண்டுமானாலும் 
காதலிக்கலாம் 
ஆனால் 
காதல் 
யாரைக் காதலிக்கிறது என்று 
காத்திருந்து காதல் செய் 
காதல் காதலாகும் ...!



சென்ரியு - செல் அடங்கிவிடும்



"செல்" அடிச்ச பேசாதே 

"செல்" அடங்கிவிடும் 

சேருமிடம் தெரியாமல்  ...!

வயசு கோளாறு ...!




இறை தேடும் மனதிற்குள் 

இளைப்பாறும் காதலே 

கனியது சுவையும் 

கார்மேகத் தேடலும் 

விழியது கோர்வையில் 

விடையாகிறது   ...!




விழிகள் தவமிருக்கிறது ...!



இமைகளுக்கு மட்டும் தூக்கம் 

கனவுகளை சுமந்து கொண்டு 

விழிகள் தவமிருக்கிறது 

வெட்டி வாழ்க்கையை மாற்றி 

வெற்றி வாழ்க்கை அடைய ...!



 



 

பறித்துப் போவேன் ...!

Photo: இன்னொரு பிறவி எடுக்கவேண்டும் அதிலும் உன்னையே நேசிக்கவேண்டும் உன் காதலுக்காய் ஏங்கவேண்டும் உனக்காகவே உயிர்விடவேண்டும் !!

அவளின் கண்கள்

இன்னொரு நிலாக் காலம் 

விடியலைத் தேடி 

விதையிடுகிறேன் 

காதல் பூ பூக்க

காலம் தாழ்த்தாமல் 

பறித்துவிடு இல்லையேன் 

பறித்துப் போவேன் ...!




தத்துவம் ...!



வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் 

வள்ளுவ‌னைப் பெற்றதால் பெற்ற‌தே
புக‌ழ் வைய‌க‌ம்  -  பாவேந்தர்

வள்ளுவன் தவிப்பு (பிறப்பு )
வான் புகழுக்கே சிறப்பு    -  ஹிஷாலீ 



இதயம் சொன்னது ...!



உன்னை 
நினைக்கச் சொல்லி 
இதயத்தில் கைவைத்தேன் 
ஆனால் ..

இதயம் சொன்னது 
நினைக்க மட்டுமே முடியும் 
மணக்க முடியாது என்று ...!



விழி இழந்த போது ...!








விழி இழந்த போது 
பழியாகும் காதலுக்கு 
ஒளியாக நிற்கிறது 
வரதட்சணை ...!

காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!





உடைகள் எல்லாம் 
எடுத்துக் கொண்டு 
படைகளோடு 
ஊருக்கு செல்லுகையில் நீ 
பயணச்சீட்டு இல்லாமலே 
என்னுடன் பயணிப்பதை 
காட்டிக் கொடுத்தது 
என் அலைபேசி ...!

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம்.

எழுது கோலை இதயக் கோலாகக் கொண்டு எழுதுகிறேன் முதல் காதல் 

கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இருந்தும் எழுதுகிறேன் ....

முரட்டுக் காதலிக்கு திருட்டுக் காதலன் எழுதும் மடல் நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை அனால் பேசியிருக்கிறோம் அந்தப் பேச்சிலே இவ்வளவு ஆசைகள் இருந்தால் உன் மூச்சில் எவ்வளவு அன்பு இருக்கும் என்று காதலிக்க தொடங்கினேன் அன்று முதல் இன்று வரை நீ எப்படி எல்லாம் என்னுடன் நடை பெயர்க்க வேண்டும் என்று ஓரு சிறு கற்பனை செய்திருக்கிறேன் பார் 

அன்பே ஆருயிரே அதிகாலைத் தேநீரில் சுவை ஊட்டவா ? 

அன்ன பசிக்கு வண்ண ருசிக்  கூட்டவா ...?

எண்ணங்கள் யாவும் பொன் மஞ்சங்கள் பேசும் பொழுதாக்க வா ! 

இரவு தாரகைக்கு இமைகளைக் கடன் கொடுத்துக் கனவைத் தாலாட்டவா ...?

அப்பப்போ ரசிக்கும் பாடலுக்கு நிழலாக வா !

சுவாசிக்கும் காற்றுக்குப் பூஜிக்கும் முதலாக வா !

பேசும் வார்த்தைக்குப் பிழையாக வா !

பேராசைத் தருணத்தில் ஓராசைக் கூறும் அறிவாக வா !

அவ்வப் போது கோபம் கொண்டால் யாகம் செய்யும் மெழுகாக வா !

பெண்ணே என் முன்னே இன்னொரு தாயா வா !

தவழுகிறேன் குழந்தையாய் வாரி அணைத்துக் கொள் 

வாழும் நாளெல்லாம் இறக்கி வைக்காமல் இமை போல் வழிகாட்டுவேன்  

நாம் வந்தப்  பாதை முடியும் வரை. 

வெறும் முற்றுப் புள்ளியாக இல்லை முடிவில்லாப் புள்ளிகள் கோர்க்க 

சம்மதம் என்றால் சொல் 
சகல விதத்திலும் சமர்ப்பணம் செய்கிறேன் இதோ ... 

முடிகள் கோர்த்துப் படிகள் செதுக்கும் பருவமாய் 
அடிகள் பதிக்கும் சுவடுகள் பூசும் விபூதியாய் 
உதிர்ந்த மலரில் உருவம் செதுக்கும் சருகாய் 
மடித்த உடையில் படுத்துக்கிடக்கும் பட்சியாய் 
நகங்கள் சேர்த்து யுகங்கள் முடிக்கும் ஆலாபனையாய் இல்லாமல் 

அதிர்ஷ்டத்தில் ராமனாய் 
பொறுமையில் வசிஷ்டராய் 
மழலையில் கண்ணனாய் 
பாரே போற்றும் பாரதிக்குக் கண்ணம்மா  வாக ஈருலகை  அழைத்து 
இருகரம் பற்றிட வாராயோ ?

என்று கவிதையில் சொன்னாலும் இளமையில் துள்ளும் கற்பனையையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

நீ சாலையில் வருவதற்கு முன்  உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன் 

ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன் 

கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன் 

சம்பள நாளன்று உனக்கென்று ஓர் புடவை வாங்கச் சொல்லி ஜவுளிக்கடை பொம்மைகள் கூட என்னை கேலி செய்வதாக புன்னகை செய்கிறேன் 

ஐஸ் கிரீம் கடையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் அழகிய தருணத்தை நோக்கி தவமிருக்க எண்ணுகிறேன் 

மழையில் குடையாக மனதில் சிலையாக நட்புடன் நடக்க ஆசைப்படுகிறேன் 

கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டிகள் சுவைத்துக் கொண்டே அலைகளை ரசிக்க விரும்புகிறேன்

பிடித்த சினிமாவிற்கு சென்று அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து யாரெனத் தெரியாத உன் குறும்புத்தனத்தை ரசிக்க எண்ணுகிறேன்

பிரிவைக் கூட பரிவாய் மாற்றும் பதுமையே இன்று முதல் இரவை பகலாகவும் பகலை உனதாகவும்  மாற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன் இதோ  இன்றையக் கலிகாலத்தில்  தொட்டுப் பழகாமல் எட்டி நிற்கும்  அன்பு காதலனாக  சம்மதம் என்று சொல்வாயா என் முரட்டுக் காதலியே! 

இப்படிக்கு,
உன் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கு
திருட்டுக் காதலன் .





(இது போட்டிக்காக எழுதப் பட்டது வெறும் கற்பனை தான் மற்றவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த லிங்கை http://www.seenuguru.com/2013/06/contest-info.html சொடுக்கவும் நன்றிகள் )

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

கலையும் மேகத்தைக்  கண்டு 
கலங்கவில்லை வானம் 
கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...!
நட்சத்திரப் போர் வீர்கள்
நிலா ராணி 
சூரியன் பரிசு ...!
இறுதி அலையை 
எண்ண முயன்று 
தோற்றது காற்று ...!
பைத்தியம் போல் 
சிரிக்கிறது அலைகள் 
கரையில் மனிதர்கள் ...!
சகுனத்தடை 
மிஞ்சியது வசதி வாய்ப்பு 
சுடுகாட்டில் வீடு  ...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 261 to 265

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்


குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற் குரு.

ஹிஷாலீ சென்ரியு 

தீமை வரவு 
நன்மை செலவு 
தவம் ...!

குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை 
அஃதிலார் மேற்கொள் வது.

ஹிஷாலீ சென்ரியு 

முற்பகல் ஒழுக்கம் 
பிற்பகல் தவம் 
வீண் போகாது ...!

குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
மற்றை யவர்கள் தவம்.

ஹிஷாலீ சென்ரியு 

துறவி தவம் 
பிறவி பிணி 
மறவாதீர் ...!

குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின் தவத்தான் வரும்.

ஹிஷாலீ சென்ரியு 

கண் எதிரியை விளக்கி
நல் அறிவை காட்டும்  
தவம் ...!

குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
ஈண்டு முயலப் படும்.

ஹிஷாலீ சென்ரியு 

தவத்தின் பெருமை
பலன் கிட்டும் 
தெய்வங்கள் ...!


தோல்விப் பெண்ணாக ...!


 

கிடைத்ததை நினைத்து 
வருந்துகிறேன் 
கிடைக்காத ஒன்றில் 
தோற்றப் பின் 

ஐய்யோ 
காலம் இறங்கவில்லை 
காட்சி மட்டும் வந்து 
வந்து போகிறது 

சாட்சி சொல்லும் மனதில் 
ஆட்சி செய்யும்  
தோல்விப் பெண்ணாக ...!






அள்ளித் தரும் விதி...!



வெள்ளி தோறும் 
அர்ச்சகருக்கு தட்சணை 
அம்பாளுக்கு நெய்விளக்கு 
காலம் கடந்து கண்விழித்தேன் 
அள்ளித் தரும் விதியை 
ஆண்டவனாலும்
வெல்லமுடியாது என்று ...!



முதிர் கன்னி ...!





கரு வளர்ச்சி முதல்

குரு பெயர்ச்சி வரை 

வாழ்ந்துவிட்டேன் 

பலன் என்னவோ 

முதிர் கன்னி ...!

பதுமை பெண் ...!



விழித்ததும்
முழிக்க விரும்புகிறேன் 
அழுகும் உடலுக்குள் 
இத்தனை விழித் திரையா ?
அழியாமல் வழி ஆகுவேன் 
ஒளியாகும் உலகில் 
பழியாகா பதுமை பெண் ...!


கருணாநிதி - பிறந்த நாள் வாழ்த்துகள்...!



நான்கு சிங்கம் பொரித்த நாட்டில்
மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும்
முழு மூச்சின் கடவுளே நீ 
இரு பார்வை கோட்டில் 
ஓர் இதயமாகத் தமிழைக் கடந்த

விதை காவலனே என்றும் 
ருசிக்கும் திரையில் ஜொலிக்கும் 
(ணா) நாயனே தூயனே ஏகனே 
நிலவும் தேயும் மலரும் மறையும் 
திரியில் ஒளி தரும் சூரியனே 
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு !

(03.06.13)




ஹைக்கூ - புத்தகம்



தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது 

தொடர் மின்வெட்டு 

புத்தகமும் கையுமாய் கண்கள் ...!

சொர்கத்தில் நீரோடை ...!




நாம் மழையில் 

நனைகையில் 

மனதுக்கு மோட்சம் 

மழைக்கு மரணம் 

சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!



 

mhishavideo - 145