நகைச்சுவை ...!
ரமா எங்கடி போற ...

அதுவா அக்கா குழந்தை வாரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்

முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச் செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்

எப்படிக்கா ...?

ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....

ஹா ஹா ஹா ஹா
குழந்தை கவிதை ...!நஞ்சு திங்களாகி
நவரசத் தாலாட்டில்
பிஞ்சு குழந்தையாய்
பஞ்சு மெத்தைதனில்
பாலாடை வாசம் கண்டு
கொஞ்சும் தந்தையுனை

அள்ளி அணைக்கையில்
ஆருயிர் ரெண்டும்
ஆகாயத்தைத் தொட்டது போல்

வஞ்சிய வாய்களுக்கு
வாரிசு நானிருக்கேன் என்று
செல்லச் சிரிப்பாலே
செவ்விதனில் உரைத்தவளே

எங்கள் செஞ்சோற்று
கடன் தீர்த்து தன் சோற்று
தலைமுறை காக்கும் குலமகளே
நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு !ஹைக்கூ - குழந்தை


கருவுக்கு  விடுதலை 
மகிழ்ச்சி
கடவுளாய் குழந்தை ...!தாசியானாள் 
கண்ணகி
டெஸ்டியூப் பேபி ...!முள்ளில் ரோஜா - # 14


பெண்ணின் பருவம் 

பருக்கள் 

மலரின்  பருவம் 

பனித்துளிகள் 

இறைவன் விதியால் 

இரண்டும் முரண் படுகிறது 

என் பருக்கள் மரணம் 

உன் பருக்கள் ஜெனனம் ...!


முள்ளில் ரோஜா - # 13


மணம் காணாவிடில்

மகரந்த தாலாட்டில் 

மாலையாகிறேன் !

மனம் வருட வரும் 

வண்டுகளுக்கு 

தாய்ப்பால் தந்த தாயாகிறேன் !

ஆம்! என்னைப் போல் 

இந்த மண்ணில் எத்தனையோ 

வெள்ளை ரோஜாக்கள் 

அன்பு பாலூட்டுகிறார்கள் ...! 

இதற்கு முன்னாள் 

நான் வெறும் சருகுகள் தான்...!


அனைவருக்கு கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்பாவ அறிக்கை 
பதில் கேட்கும் நேரம் 
சாபங்கள் நீங்கி 
சமாதானமானோம் 
அவரவர் தெய்வங்கள் முன் 
அதன் வரலாறு இதோ! 

இறந்தவர் உயிர்த்தெழுந்தார் 
இயேசு ஆனார் 
இயற்கைகள் உயிர்த்தெழுந்தது 
பொங்கலானது 

இதயம் புதிதாய் 
உயிர்த்தெழுந்தால் போதும் 
இன்பமே இல்லமாகும் 
என்றது என் கவிதை 
அனைவருக்கும்‌ கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள்

மரணிக்கவில்லை...!மனதால் கொன்றாலும் 
என் மைவிழி நீர்கள் 
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என் 
ஆருயிர் வேறொரு 
காதலைத் தேடியிருக்காது !முள்ளில் ரோஜா - # 12


கிளையை மறந்ததால்

மலருக்கு மரண தண்டனை

ஆம் ...

மருமகள் சுருக்கில் மாமியார்

நார் மட்டும் மிச்சமில்லை

நாற்றமும் தான் ...!


முள்ளில் ரோஜா - # 11
என்னை வளர்க்கும் 
வரைமுறை தோட்டத்திற்கும் 

வாரி அணைக்கும் 
காதலர்களுக்கும் 

வாழ்வைத் தேடும் 
திருமணத்திற்கும் 

தேடிக் கொடுக்கும் 
கோவில்களுக்கும் 

திரும்பா பயணத்திற்கும்  
உபயோகிக்கும் உள்ளங்களே 

உங்களில் யாரவது உள்ளீர்கள 
உண்மை உளவாளியாக ...!


முள்ளில் ரோஜா - # 10ஊழல் ...

பூவிலிருந்து

பூஜ்யம் வரை என்று

புரிந்ததால் தானோ

என்னவோ

மறு பொழுதுகள்

விடியும் முன்

பூமிக்கு இரையாகிறேன்

புண்ணியத்தை சேர்க்க ...!

முள்ளில் ரோஜா - # 9நீரூற்றியவனுக்கு

நினைவுகள் சொந்தம்

உரமிட்டவனுக்கு

உணர்வுகள் சொந்தம்

இடைப்பட்டத் தருணத்தில்

எனக்கிட்டப் பெயர்

சிசு கொலை !

முள்ளில் ரோஜா - # 8


ஏழு வண்ணங்களில்

எழுந்து நிற்கிறேன்

ஆனால் ...

இறைவன் எழுதிய விதியோ

ஓர் நாள் என்றாலும்

எத்தனையோ தியாகங்கள் முடிவில்

இளைப்பாறுகிறேன்

இதயமற்ற ஆண்களுக்கு

இல்லற ராணியாக...!


முள்ளில் ரோஜா - # 7கற்பத்தில் 

அறுந்த மலர்கள்

வருந்தும் உலகில்

விருந்தோம்பலாய் 

உரிமைப் போராட்டத்தில்

உலவுகிறது வீதியில்

வாழ் நாள் அநாதையாக ...!பணம் < ? > பிணம்என்னடா இது இன்று எல்லோரும் அதிசியமான நாள் என்று கூறுகிறார்கள் நீங்கள் பணமா ? பிணமா? என்று பேசுகிறேர்கள் என்று நினைக்கலாம் இருந்தும் ஏதோ என் சிற்றறிவுக்கு தோன்றியதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

மனித  வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது பணம் .
இந்தப் பணம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தான் அர்த்தம் .
ஆம் இன்றைய சூழலில் பணத்திற்காக யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பணக்காரன் தன் பணத்தை பெருக்கிக்கொள்ள போராடுகிறான் 
ஏழை அதே பணத்திற்காக தன் வயதை பொருக்கிக்கொள்ள போராடுகிறான். 

இரண்டிற்கும் நடுவில் இருப்பது (?பிஒரே ஒரு கேள்விக்குறி தான் இந்தக் கேள்விகுறி எப்போது எங்கு மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும் அதற்கிடையில் எத்தனை போராட்டங்கள்... 

அது மட்டுமா! அடிதடி, கொலை,கொள்ளைகள், கற்பழிப்பு, திருட்டு என்று பாவங்கள் பெருகிக்கொண்டே செல்கிறது உலகில். இதற்கு மூல காரணம் பணம் இல்லை என்றால் நீ பிணம் என்று மிரட்டல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது பேப்பரில், அதையும் படித்துவிட்டு அதே பணத்திற்காக ஓடித் திரிகிறோம்  உறங்காமல் என்ன ஒரு கொடுமை சற்று யோசியுங்கள்.

எத்தனையோ உயிர்கள் ரோட்டிலும் காட்டிலும் பசிக்காக தங்கள் ரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையை முதலாக்கி நோயை வெற்றியாகக் கொண்டு வாழ்கிறார்கள்  நம் மண்ணில். இந்த நிலை மாறவேண்டும் என்றால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதை விட உவத்திரியம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறன்.

எப்படி என்றால் :-

வரி ,வட்டி, காப்பீடு அனைத்தும்  ஓர் ஏழையின் உறிஞ்சலில் கட்டும் சொத்துக்கள் அது மட்டுமா? விளம்பரம், போட்டிப் பரிசித் தொகைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தவிர்த்து ஞாயமான முறையில் பொருட்களை வாங்கவோ விற்கவோ செய்தால் போதும் ஏழைகளும் எல்லா வசதிகளையும் பெற்று விட ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.   

தனியொருவனுக்கு உணவில்லையெனில் , ஜகத்தினை அழித்திடுவோம் என்று  பாரதி சொன்னார் . அதை தான் நான் சுருக்கமாக "பணம் < ? > பிணம்" என்ற நோக்கில்  பிறந்தோம் வளர்ந்தோம் பசிக்காக பணத்தை நுகர்ந்தோம் அப்பணமே இறுதியில் நெற்றிப் பொட்டாக  வெட்டியான் கைக்கு செல்கிறது.மீண்டும் மறு சுழற்சி முறையில் எங்கோ முடிவில்லா தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருக்கும். இடையில் இருப்பது வெறும் மண் தான் மனிதா மாறு உன் மரணம் முடியும் வரை ! அப்படியாவது நம் பூமியும் பொன்னாகட்டும் .

நன்றிகள் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துகள் - 12.12.12கல்வியின் எல்லைப் பன்னிரண்டு உன் 
கருவறைப் பிறப்போ அதிலுண்டு 

எண்ணிய முட்கள் பன்னிரண்டு இறைவன் 
எழுதிய விதியோ பல நூறாண்டு  

குருஞ்சிப் புன்னகைச் சிரிப்பாலே திரைக்  
குலம் செழித்த மன்னவனே  நீ 

பன்னிரண்டு ராசிகளின்  படையப்பா என்றும் 
பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 
நாங்கலப்பா .. !கடலுக்கு சுத்தம் அலைகள் 
கடவுளின் சித்தம் நீங்கள் 

பிறப்புக்கும் உயிருக்கும் 
அர்த்தமானாய் என்றும் 
பேர் போற்றும் உலகிற்கு 
வெளிச்சமானாய் 

பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு 
கூட்டி மாற்றினால் உன் வயதுண்டு

இனிதுண்டு வாழும் நாட்கள் எல்லாம் 
இமையம் கண்டு செழித்திடவே 

தமிழ் மொழி கொண்டு வாழ்த்துகிறேன் 
தரணியின் கண்கள் சுத்திப்போடவே

போராளித் துளிகள் ...!


எந்த தேசத்தின்
 புண்ணியத் தீர்த்தமோ
 எங்கள் மண்ணின்
 புனிதம் காக்க
 போராடுகிறது போராளியாக ...!


முள்ளில் ரோஜா - # 6வாலிபத்தின் போதை காதல் 

வாழ்க்கையின் பாதை சாதல் 

இரண்டிற்கும் நடுவில் 

இதழ்கள் மட்டுமே பேசுகிறது 

வரதச்சணையா ? வாரிசா ? 

இறுதியில் நீதிபதிக் கூண்டில் 

ஒற்றை ரோஜா...!

முள்ளில் ரோஜா - # 5இதயம் இரண்டானாலும் 

பயணம் ஒன்றானது 

இறங்கிவிட்டோம் 

எதிரில் எதிரிகள் கூட்டம் 

தாலியா ? மோதிரமா ?

தரித்திரத்தில் பிரிந்தது  காதல்.. !

முள்ளில் ரோஜா -# 4அம்பு பாயிந்த இதயத்தில் 

எவரோ ஊசி தைத்ததால்  

ஒழுகும் இரத்தத்தில் தெரிவதில்லை

ஜாதி வெறி !
முள்ளில் ரோஜா - # 3உலக அழகியாய்  

உயிர்த் தெழுகிறேன் 

ஒரே கிளையில் 

ஓடி ஒளியும் காதலர்களுக்கு 

உவமை சொல்ல..!


முள்ளில் ரோஜா - # 2காதல் 

விரல் பட்ட பரவசத்தில் 

உதிர்ந்து கிடக்கிறது இதழ்கள் 

தோல்வியா ? வெற்றியா ?

புரியாமல்..!


முள்ளில் ரோஜா - # 1தூங்கவில்லை வேர்கள் 

துளிர் விடத் துவங்கியது 

இலைகள் ...

முள்ளில் ரோஜா !!!


சூரியனைப் பெண் பார்க்கவா ...!


வளியாத இரவுமில்லை 
அழியாத உயிருமில்லை 
உலகில்...

நிலவே வழியாக 
செல்லும் பாதைக்கு 
நீ ...

ஒளியாக மட்டும் 
வந்தால் போதுமே 
என்று 

பகல் நடப்பு 
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப் 
பெண் பார்க்கவா ..!
ஹைக்கூ தீபாவளிநட்சத்திரங்கள்
பூமிக்கு வருகை
தீபாவளி !


வீதியில் கடையடைப்பு
வீட்டினில் கடை திறப்பு
தீபாவளி !


எம்மதமும்
சம்மதம்
பட்டாசு சத்தத்தில் !

தீபாவளி - ஜோக்ஸ்டேய் மச்சான் இந்த தீபாவளி தான் புகையே இல்லாம போனது


எப்படிடா ....


ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்

ஹாஹாஹாஹா....


விடுதிப் பூ...!


நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !

தளபதி படம் சூப்பர்ஹிட்நாயகி துப்பாக்கி 
நாயகன் புல்லட் 
நான்கு கண்களும்  
சேர்ந்து வெடிச்சா 
தளபதி படம் சூப்பர்ஹிட் 

கவலை தேவதை ...!


இருப்பது சென்ரல் 
உடுப்பது கந்தல் 
படிப்பது மட்டும் 
பாவமானது எங்களுக்கு 
பாருங்கள் ...

சட்டை இல்லை 
பட்டம் படிக்க ஆசை 
கொட்டாய் இல்லை 
கோபுரம் கட்ட ஆசை 

ஆங்காங்கே அழுகிறது 
அட்டை படத்தைப் போல் 
எங்கள் அவமானங்கள் 
துடைக்க யாருமில்லை 
துளிர்விடும் தலைமுறையை 

இதோ 
தண்டவாளத்தில் 
தலைமுறையோடு இத் 
தரணியை ஆள 
அச்சாரம் போடுகிறோம் 

எங்கள் 
கேளிக்கைகள் 
வேடிக்கையாய் வளராமல் 
வரலாறாக வானைத் தொட 
வணங்குகிறோம் 
கவலை தேவதையை ...!


ஹைக்கூ - வாழைவந்தது மின்னல் 
என்ன தோஷமோ 
வாய்கரிசியானது வாழை 
ஹைக்கூ - இயற்கை
இறுதி நாட்களின் 
பன்மடங்கு 
இயற்கை உணவு ...!
மரணத்தின் 
மருத்துவக் கல்லூரி  
இயற்கை ...!


ஹைக்கூ - ஈழம்


ஈழ மானுடம் வீதியில் 
விழும் மீன்களாய் 
களங்கம் சுமந்தன இராணுவம்...!


இறக்கிறேன் மலராக...!


ஒவ்வொரு நாளும் 
மலராக இறக்கிறேன் 
மரணத்தை விரும்பால் 
மலரும் நினைவுகளை 
மனதில் சுமந்தபடியே 
இம்மண்ணில் ...

விதையானேன் விழியால் 
பயிரானேன் மொழியால் 
உயிரானேன் உன்னால் 

அறுவடை செய்யும் பிரிவே
வழியாக நீயிருந்தால்  
வரமாக நான் வருவேன் 
நம் வாழ் நாள் முழுவதும் ...!

காதால் அழிவின் ஓசை ...!
இமை மூடி 
இதயம் வருடி 
பேசும் ஆசை தான் 
கவிதை என்பார்கள் 

நானோ !
அழிவின் ஓசை என்பேன் 
ஏன் தெரியுமா ...?

இதயம் இரண்டாகும் 
இமைகள் நான்காகும் 
உயிர்கள் மற்றும் ஒன்றானால் 
வாழ்வேது கண்ணில் 
வளம் மேது சொல்லில் 

இதோ 
தவமிருந்த தாய் 
தலை வலியானாள் 
தந்தையோ வேலியானார் 
உடன் பிறந்தவர்கள் 
உதாசினப்படுத்த 

உயிரானவள் 
மயிராய் போனதால் 
காதல் தோல்வியானது 
காலம் வேள்வியானது 

கடைக்கண் பட்டாலே 
கால்கள் ஓடுகிறது 
மதுவைத் தேடி 
மனதோ வெறுக்கிறது   
மரணத்தை தேடி 

எல்லாம் ஒன்றானால் 
எதற்கு உயிர் என்று 
அழிந்துவிட்டேன் 
ஆகாயத்தில்....!

 


ஹைக்கூ - இயற்கைபூமித்தாயின் 
கூந்தல் 
இயற்கை...!

( சுருக்கமாக கூறுகிறேன் : பூமியில் எப்படி இயற்கை இல்லாமல் இருந்தால் அழகாக இருக்காதோ அவ்வாறே பெண்களின் தலையில் கூந்தல் இல்லை என்றால் அழகு குறைந்துவிடும் என்ற கருத்தில் எழுதியது இந்த ஹைக்கூ.)ஆணுலகம் 
பெண்ணியற்கை 
பாகப்பிரிவினை ...!
இயற்கையின் 
வரப்பிரசாதம் 
கலைப் பொருட்கள் ...!


தமிழ் மொழி பிறந்து சுமார் 20000 வருடம் ஆகுது
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .  நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,

ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்கநாடு, ஏழுமதுரைநாடு, ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம இன்றைய மதுரையில் "கி .மு1850 இல் 449 புலவர்கல்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள்   இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்.........!!  தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !  இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !  நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !  தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

நன்றி !

( இதை எனக்கு பகிர்ந்தவர் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷிணி அவர்கள் அதை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சிக் கொள்கிறேன் )

ஹிஷாலீ ஹைக்கூ
மின்னடுப்பில் பிணங்கள் 
வெட்டியான் வீட்டில் 
பசி பட்டினி ...!

ஹிஷாலீ ஹைக்கூ


அன்பை அடகுவைத்து 
விலை போனான் வெளிநாட்டில் 
கிணற்றுத் தவளை...! 

ஹிஷாலீ ஹைக்கூ
ஆயிரம் கொடுமைகள் 
அண்ணல் காந்தி 
கேப்பார் யாருமில்லை...! 
ஹிஷாலீ ஹைக்கூபச்சை நரம்புகள் 
பாரின் துரும்புகள் 
பசுமை புரட்சி ...!


ஹிஷாலீ ஹைக்கூ - ஓவியம்ஓவியங்கள் 
விடுதலை 
விருதுகள் ....!


விழி புகைப்படம் 
விரலில் விருந்தானது 
ஓவியங்கள்...!

உயிர் பெற்றது 
ஓவியம்
ஊமை வண்ணங்கள் ...!  

சிறைபட்ட வண்ணங்கள் 
சுதந்திரம் 
ஓவியத்தில்...!
கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...