நஞ்சு திங்களாகி
நவரசத் தாலாட்டில்
பிஞ்சு குழந்தையாய்
பஞ்சு மெத்தைதனில்
பாலாடை வாசம் கண்டு
கொஞ்சும் தந்தையுனை
அள்ளி அணைக்கையில்
ஆருயிர் ரெண்டும்
ஆகாயத்தைத் தொட்டது போல்
வஞ்சிய வாய்களுக்கு
வாரிசு நானிருக்கேன் என்று
செல்லச் சிரிப்பாலே
செவ்விதனில் உரைத்தவளே
எங்கள் செஞ்சோற்று
கடன் தீர்த்து தன் சோற்று
தலைமுறை காக்கும் குலமகளே
நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு !
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteவணக்கம்
ReplyDeleteநெஞ்சை தொட்டுச் சென்றது கவிவரிகள் கவிதைக்கு ஏற்றால்போல் படமும் அமைந்து விட்டது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு நன்றிகள் ரூபன்
Delete