காதால் அழிவின் ஓசை ...!
இமை மூடி 
இதயம் வருடி 
பேசும் ஆசை தான் 
கவிதை என்பார்கள் 

நானோ !
அழிவின் ஓசை என்பேன் 
ஏன் தெரியுமா ...?

இதயம் இரண்டாகும் 
இமைகள் நான்காகும் 
உயிர்கள் மற்றும் ஒன்றானால் 
வாழ்வேது கண்ணில் 
வளம் மேது சொல்லில் 

இதோ 
தவமிருந்த தாய் 
தலை வலியானாள் 
தந்தையோ வேலியானார் 
உடன் பிறந்தவர்கள் 
உதாசினப்படுத்த 

உயிரானவள் 
மயிராய் போனதால் 
காதல் தோல்வியானது 
காலம் வேள்வியானது 

கடைக்கண் பட்டாலே 
கால்கள் ஓடுகிறது 
மதுவைத் தேடி 
மனதோ வெறுக்கிறது   
மரணத்தை தேடி 

எல்லாம் ஒன்றானால் 
எதற்கு உயிர் என்று 
அழிந்துவிட்டேன் 
ஆகாயத்தில்....!

 


6 comments:

 1. Replies
  1. நன்றிகள்

   Delete
 2. நல்ல வரிகள்...

  ஆனால் இப்படி எல்லாம் நடக்கக் கூடாது...

  ReplyDelete
  Replies
  1. வரிகளுக்கு நன்றிகள் பல

   இருந்தும் இன்றைய சூழலில் காதல் இவ்வாறுதானே ...........

   Delete
 3. காதல் வலிகள் வரியாகியுள்ளன! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்