இருப்பது சென்ரல்
உடுப்பது கந்தல்
படிப்பது மட்டும்
பாவமானது எங்களுக்கு
பாருங்கள் ...
சட்டை இல்லை
பட்டம் படிக்க ஆசை
கொட்டாய் இல்லை
கோபுரம் கட்ட ஆசை
ஆங்காங்கே அழுகிறது
அட்டை படத்தைப் போல்
எங்கள் அவமானங்கள்
துடைக்க யாருமில்லை
துளிர்விடும் தலைமுறையை
இதோ
தண்டவாளத்தில்
தலைமுறையோடு இத்
தரணியை ஆள
அச்சாரம் போடுகிறோம்
எங்கள்
கேளிக்கைகள்
வேடிக்கையாய் வளராமல்
வரலாறாக வானைத் தொட
வணங்குகிறோம்
கவலை தேவதையை ...!
மனம் கனத்தது...
ReplyDeleteநிஜம் தான் அண்ணா இவர்கள் நிலை இன்றும் மாறவில்லை
Deleteவருகைக்கு நன்றிகள்