பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் ...!


காலமே எதிரிபாரா கடலைஒற்ற வெள்ளமதில் 
கரையாதுயிர் மறுபடி பிறக்க வைத்து 
மீள்வதற்கு உணவுடை யளித்தஎம் மதங்களுக்கு நன்றி

ஓடும் வெள்ளத்தில் ஓரம் வளரும் 
மரமெனப் பாராமல் எல்லாம் உயிரென 
மருத்துவம்தந்த மானம் காத்த மனங்களுக்கு நன்றி

தொல்லை வெள்ளத்தில் துன்புற்றோரை 
இன்புற்ற முகத்தோடு இன்னல் தாண்டி 
வின்னில் பரந்த இராணுவ இளைஞனுக்கு நன்றி

காரிருள் சூழ்ந்தும் கைபேசி தொடர்பற்றுக் 
கதறும் சத்தத்தில் நன்மை தேடாது
கொள்ளை திருடனைத் திருத்தியக் கருணைக்கு நன்றி

செம்பரம் பாக்கமா? தன கரம் காக்குமா? 
யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது 
தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி

பன்னாட்டு வாணிபம் மல்லாது பல்நாட்டு 
நிவாரணத்தில் பஞ்சம்போக்கி நெஞ்சம் மகிழ்ந்த 
மனிதாபி மானத்திற்கு நன்றி
(12.01.15)

சிறுகதை - களைகள் !இளவரசி மிகவும் சாதுவானவள் எவருக்கும் துன்பம் என்றால் ஒடிப்போய் உதவுவதில் கெட்டிக்காரி ஒரு நாள் தன்னுடன் பணியாற்றும் தோழிக்கு பணம் தேவை பட்டது உடனே இளவரசி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வட்டிக்கு கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொடுத்தாள் 
சில நாட்கள் சென்றது கொடுத்த கடனை திருப்பிக் கேட்டாள் 
ஆனால் அந்த தோழியோ பணத்தை இப்போது திருப்பி தரமுடியாது கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றாள் உடனே இளவரசி சரி என்று ஒரு வருட காலம் காத்திருந்தாள் பணம் கிடைக்கவில்லை 
என்ன செய்வது கொடுத்தவர் கடனைக்கேட்க தன் பணத்தைக் கொடுத்து அந்தக் கடனை அடைத்தாள் 
ஓரிரு மாதம் ஆனது அதே தோழிக்கு பணம் தேவைப்பட்டது அந்த வழியாக வந்த இளவரசியின் தாத்தா என்னமா இந்தப்பக்கம் என்றார் 
அதற்கு அவள் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது அதனால் தான் அங்கும் இங்குமாக வட்டிக்கு பணம் கேட்டு அலைகிறேன் கிடைக்கவில்லை தாத்தா என்றதும் 
சரிமா நான் வாறேன் முடிஞ்சா நானும் உதவி பண்ண முயற்சிக்குறேன் என்றவாறு சென்றார் தாத்தா  
வீட்டிற்கு சென்றதும் இளவரசியிடம் நடந்ததை சொன்னார் தாத்தா 
உடனே இளவரசி தாத்தா அவளுக்கு உதவுவது தவறு நான் கொடுத்த பணத்தை கேட்டப் போது வாங்கும் போது நன்றாக இருக்குமாம் கொடுக்கும் போது யாருமே நல்ல எண்ணத்துடன் கொடுக்க மாட்டார்களாம் என்று கூறினாள். அதைகேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று மட்டும் சரியான நேரத்தில் நான் உதவவில்லை என்றால் அவளின் அக்கா திருமணம்
நடந்திருக்குமா? அன்றையில் இருந்து இனிமேல் யாருக்கும் பண உதவி செய்யக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அடிக்கடி கூறுவீர்களே விதைத்தது தான் மூளைக்கும் என்று அதுதான் என் தோழியின் விசயத்தில் நடந்துள்ளது என்றாள்     
நீ கூறுவது தவறு இளவரசி ஒரு விவசாயி வருடம் தோறும் விதவிதமாக காலத்திற்கு ஏற்ப விதைக்கிறான் அவன் விதைக்காமலே விளைவது களை அந்த களையை பிடிங்கி போட்டுவிட்டு தொடர்ந்து தனது விவசாயத்தை செய்து வெற்றி காண்கிறான் அதே போல் தான் நாம் உதவி செய்யும் போதும் சில களைகள் கூடவே இருக்கத்தான் செய்யும் அதை பிடிங்கி எறிந்துவிட்டு நம் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் அப்போது தான் பிறவி பயன் முற்றுப் பெரும் என்றார் தாத்தா
சரிங்க தாத்தா நான் இப்போது சென்று அவளுக்கு தேவையான பணத்தை கடனுக்கு வாங்கி அவளிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினாள் ....
தோழியோ ரோசியோ அப்பணத்தை வாங்க மறுத்தாள் அப்போது இளவரசி கூறியது 
" மாதம் முழுவதும் உழைத்தப் பணத்தில் ஒரு பங்கு சந்தோசமாக  கடவுளுக்கு கொடுக்கிறோம் காரணம் நடந்ததற்கு நன்றி கூறி இனி நடக்கப்போவதற்கும் சேர்த்து கடவுள் நம்மை காத்தருள்வார் என்று தானே "
அதே போல் நம் கஷ்டத்தில் கடவுள் நேரில் வரமாட்டார் நம்மை போன்றவர்கள் உருவத்தில் தான் வருவார் அப்போது தனக்கு உதவி செய்யும் நபருக்கு அதைவிட இருமடங்கு வட்டி கொடுப்பதில் தவறில்லை அதை விட்டுவிட்டு வயிறேரிந்து கொடுத்தால் நாம் எதற்காக வாங்கினமோ அதற்கான பலன் தவறாகிவிடும் என்பதை உணர்ந்துகொள் "  நாளை வந்து அம்மாவை பார்க்கிறேன் தைரியமாக இரு என்று இளவரசி சென்றாள். 

சிறு கதை : உணவை வீணாக்காதே !சித்து எப்போதும் தனது தாத்தாவுடன் மாலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம் அப்போது அந்த வழியாக வந்த விளம்பர வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு நோட்டிசை கொடுத்தார் அதில் உணவை வீணாக்காதீர்கள் என்ற எழுதியிருந்தது .
படித்து விட்டு தாத்தாவிடம் விவரத்தை கூறினான் கூறியதை கேட்காமல் எதோ சிந்தனையில் இருந்த தாத்தாவின் கண்களை உற்றுப் பார்த்தான் 
தாத்தாவோ அருகில் இருக்கும் குப்பை தொட்டியை பார்த்தார் அங்கு ஒரு காகம் பசியோடு குப்பை தொட்டியில் இருக்கும் வடையைக் கொத்தியதும் சந்தோசமாகப் பறந்து சொன்றது. பின் சிறிது நேரம் கழித்து காக்கை அந்த வடையை அதே குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதைக் கண்டு வருத்தத்துடன் தாத்தா சொன்னார் 
என்றோ ...
வானுயர்ந்த அனுமனுக்கு 
வடையால் அலங்காரம் 
வந்த விழிகள் எல்லாம் 
வளைத்து வளைத்து எடுத்த செல்பியில்
வடை ஊசவில்லை 
வயிற்றுப் பசிக்கு 
வட்டமிட்ட காக்கையின் 
வாயில் ஊசியதோ ?
என்றதும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி தாத்தாவை புகழ்ந்தார்கள் அத்துடன் நாங்கள் யாரும் இனிமேல் உணவை வீண் அடிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்தார்கள் 
மறு நாள் சித்து பள்ளிக்கு சென்றான் வழக்கம்போல் பாடம் நடந்தது மதிய உணவுக்கு நேரம் வந்ததும் தனது உணவை எடுத்து சென்று ஓடுகையில் கை தவறி கிழே சிந்தியது சிந்திய உணவை குப்பையில் போடும் படி ஆசிரியர் கூறினார் ஆனால் குப்பையில் கொட்டிய சோறு அழுகி தொற்றுக் கிருமிகள் காற்றுடன் கலந்து துருனாற்றம் வீசும் என்பதை பேச முடியாத காக்கை அந்த வடையை கொண்டு சென்ற இடத்தில் போட்டால் அங்கேயும் நோய் கிருமி பரவிவிடுமே என நினைத்து எடுத்த இடத்திலே கொண்டு வந்து போட்டதை நினைவு கூர்ந்த சித்து தன் பசி அடங்கவில்லை என்றாலும் இந்த பருக்கையில் எத்தனை காகங்களின் பசி அடங்கும் என்று பள்ளியின் மொட்டை மாடியில் சென்று தூவிவிட்டு வந்தான் இதை கண்ட அனைவரும் அவனை பாராட்டி தாங்களும் உணவை வீணாக்க மாட்டோம் என்று சபதம் எடுத்தனர் .
குழந்தைகளே இதன் மூலம் தாங்கள் கற்றுக்கு கொள்வது என்னவென்றால் "உடலைப் பேணுவதற்கு உணவு தேவை அப்படிப்பட்ட உணவை வீணாக்குவது உலகையே அழிப்பதற்கு சமமாகும் "

பாரதம் எங்கள் பாரதம் !பாரதம் எங்கள் பாரதம் 
பகைவரை அழிக்க 
பல்லுயிர் கொடுத்து 
பட்டொளி வீசி பறக்கும் 
பாரதம் எங்கள் பாரதம் 

ஜன கண மன அதி - நம் 
சமூகத்தின் உயிர் நீதி - (பாரதம் )

பாரத பாக்யம் - எங்கும் 
பாயிந்திடும் ஏழுயிர் வாக்கியம் - (பாரதம்)

விந்திய இமயம் வரை - ஒலிக்க
கங்கை யமுனையே சாட்சி ! (பாரதம்) 

சிறுகதை,ரோசி தனது பாட்டியின் நினைவு நாளுக்கு பூஜை போட கிராமத்திற்கு செல்கிறாள் 
அங்கு பல வகை இனிப்புகளுடனும்  காரங்களும் சேர்த்து கறி குழம்பு வாசனையும் ஊரையே அழைத்தது தனது சொந்தங்கள் அனைவரும் உண்ட பின் மிஞ்சிய சோற்றை தனது தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்க தாத்தா எடுத்து வைத்தார் 
இதைக் கண்ட ரோசி ஏன் தாத்தா அவர்களும் நம்முடன் அமர்ந்து உணவு அருந்தலாமே என்றாள் 
அதற்கு தாத்தா அவர்கள் கொல்லைப்புறமாக தான் வருவது நம்ம ஊர் வழக்கம் இது எல்லாம் உனக்கு புரியாது நீ போய் சாப்பிடு என்றார் 
உடனே தாத்தா எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் ரோசி 
நம்ம குலுக்கையில் நிரம்பி வழியுதே கடலை அப்புறம் அரிசி மூட்டை பருப்பு மூட்டை காய்கறி மூட்டை இதெல்லாம் நீங்களா விளைய வைத்தீர்கள் இல்லையே ஏன் ?இதையெல்லாம் வியர்வை சிந்தி வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்த இந்த ஏழைகளின் இரத்தம் தானே தாத்தா இவைகளை விற்றப் பணத்தை பீரோவில் பூட்டி வைக்கிறீர்கள் இவர்களை மட்டும் பின்புரத்தில் வந்து உணவருந்தச் சொல்கிறீர்கள் இது ஞாயமா தாத்தா 
குழந்தையின் அறிவை கண்டு வாமன கிருஷ்ணன் தான் தன் கண்களை திறந்து வைத்தார் என்று தனது தவறை உணர்ந்து அவர்களை எல்லாம் முன் புறமாக வந்து உணவு அருந்தும்படி மிகவும் அன்போடு அழைத்தார் தாத்தா
ஊர் மக்கள் அவனைவரும் ரோசியை தெய்வமாகவே கொண்டாடினர் அன்றையில் இருந்து அவ்வூர் ஒற்றுமையுடனும் சந்தோசமாகவும் வாழ்த் தொடங்கியது 
குழந்தைகளே ! இந்தக் கதை கூறும் நீதி என்ன இளைய தலைமுறையாகிய நீங்கள் ஜாதி மதம் வேதம் பாராமல் ஒற்றுமையுடன் இருந்தால் போதும் உலகமே உங்களை வியந்து பார்க்கும் என்று தூண்டுதலுக்கு உதவியாக இருந்தது கல்வி 
ஆகவே ஒரு மனிதனை மாற்றும் சக்தி கல்விக்கே உண்டும் என்பது தான் உண்மை  

சிறுகதை - சிற்பி !பொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும்  கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும் போது  ஊர்  பெரியவர்கள் அனைவரும் மாதவனை சந்தித்து வருகிற வெள்ளிகிழமை நாள் நன்றாக உள்ளது அன்றே இந்த சிலையை பிரதிஷ்டை செய்திடலாம் என்றனர்.அவனும் சரி என்று விறுவிறுப்பாக வேலையை முடித்தான் . சாமியின் கண்களை திறக்கும் பணி முடியும் போது சிறு துளி கல் அவனது கண்களில் பட்டு பார்வை இழந்துவிட்டான். மறு நாள் வெள்ளிக் கிழமை அவன் செய்த சிலைக்கு கும்பாவிசேகமும் ஆட்டமும் பாட்டமும் ஜோராகா நடந்தது இவற்றையெல்லாம் அந்த சிற்பியால் கண்டு களிக்க முடியவில்லை மனம் உடைந்து கோயில் சன்னதிக்கு சென்று தாயே கல்லாக இருந்த உன்னை கடவுளாக வடித்தேன் இன்று ஊரே கைகள் கூப்பி உன்னை வணங்குகிறது கடவுளாக பாவிக்கும் என்னை ஒரு கல்லாக தூக்கி எரிந்து விட்டார்களே இந்த கல் நெஞ்சு கார மக்கள் இது என்ன கொடுமை இதற்கு நீயே என்னை கொன்று விடலாமே என்று அழுது புலம்பினான் மாதவன் 
இதைக் கேட்ட தெய்வம் குழந்தை உருவில் வந்து ஐய்யா தங்களின் கூற்று தவறு.கல் கடவுளாகலாம் கல் நெஞ்சம் படைத்த நீங்கள் கடவுளாக முடியுமா ? என்றதும் குழந்தை மறைந்தது 
குழந்தையே நீ யார் எனது தவறை சுட்டிக்காட்டி நடந்த தவறை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சொல்லியவாறு நினைத்துப் பார்த்தான் மாதவன் அன்றொரு நாள் ஒரு குருடனை அலச்சியம் செய்தேன் இன்று நான் குருடனாக வாழ்கிறேன் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடு இறைவா இனிமேல் உனக்கு கண்ணுக்கு கண்ணாக நானே இருப்பேன் என்றதும் விடிந்தது அய்யோ காண்பது கனவா 
தாயே என் தவறை உணர்த்தவா கனவில் வந்தாய் என்று தன் தவறை உணர்ந்து அந்த சிலைக்கு கிடைத்தப் பணத்தை கண்ணில்லாத மக்களுக்கு தானமாக தருகிறேன் என்று வாக்கு கொடுத்தான்.
குழந்தைகளே "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம் 
நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை ஒருவர் இன்னொருவருடன் தோழமையுடன் இருக்கவே வந்திருக்கிறோம் என்று உணருங்கள் . 
நன்றி !
  

சிறுகதை - நிவாரணம் !
தீபாவளி லீவு முடிந்ததிலிருந்து சென்னையில் வரலாறு காணாத கன மழை இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டது . இன்று பள்ளிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு கட்டுரைப் போட்டி. இந்த மழையால் என்ன என்ன சேதங்கள் அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொருவரும் எழுதி வரவும் என்றதும் 
பூமிகா தனது பாட்டியிடம் வந்து நடந்ததைக் கூறினாள். 
அதற்கு பாட்டி சரி நீ எதைப்பற்றி எழுதப் போறாய் என்று சொல் நான் முடிந்தவரை உதவி செய்கிறேன் 
உடனே பூமிகா "நிவாரணம்" பற்றி எழுதப்போறேன் பாட்டி 
ஒ அப்படியா பலே பேஷ் பேஷ் நன்றாக எழுது இதற்கான அர்த்தம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுப்பது போல் சொல்கிறேன் எழுதிக் கொள் என்றதும் 
பூமிகா பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு பாட்டியின் அருகில் வந்தாள் 
அன்று பாஞ்சாலியின் துயிலை இழுத்து மானபங்கம் பண்ண எண்ணிய கௌரவர்களுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணன் துயில் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தை காத்தான் அதனால் தான் பாஞ்சாலி சபதம் நடந்தது 
இன்று மழையால் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்க கிருஷ்ணன் இந்த புவியில் சில மனிதர்கள் உருவில் நிவாரணம் கொடுக்கிறான் அதில் சில பல அரக்கர்கள் அதிலும் ஊ ழல் செய்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த பஞ்ச வெள்ள சபதம் தொடர்கிறது 
சரியாக சொன்னீர்கள் பாட்டி, மீண்டும் எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் பூமிகா 
எல்லோரும் நதிக்கு கால் இருக்கிறது என்று கூறுகிறார்களே இது உண்மையா ? 
உண்மை தான் பூமிகா 
சற்று விளக்குங்களேன் பாட்டி 
இதோ சொல்கிறேன் நதி நடந்தால் என்னவாகும் என்று காட்டவே இந்த வெள்ளம். இதில் எத்தனை கால்கள் நடக்கின்றன,ஓடுகின்றன அதிலும் சில பல மரணமும் கூட நடக்கின்றன அதனால் தான் நதி எப்போதும் படுத்துக்கிடக்கிறது நான் நடந்தால் நாடு தாங்காது என்று உணர்த்தவே இந்த கன மழை வெள்ளம் 
ஆகா அழகான விளக்கம் பாட்டி அப்படியே இந்த மழை நல்லாத கெட்டதா என்று சுருக்கமாக கூறுங்களேன் 
மழை வருவது இயல்பு அதன் வழியை மறைத்து கட்டிடங்கள் கட்டியது தவறு, நஞ்சை பூமி நான்கு போக விளைச்சலைஉருஞ்சும் தன்மை கொண்டது அதை தரிசாக்கி தண்ணீர் மண்ணை பெருசாக விலை வைத்து விற்றவன் வாழ்ந்துவிட்டான் வாங்கியவன் வீழ்ந்துவிட்டான் இப்போது விளைச்சலுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது விளைய நிலம் எங்கே ?என்று கேட்கும் வானத்திடம் சண்டை போட முடியுமா ? நான் எவ்வளவு காலம் தான் மழை பொழியாமல் அடக்கி வைப்பது அதனால் நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்று அடைமழையாக வெளுத்து வாங்குகிறேன் என்று கூறுவது உங்களைப் போல் வளரும் சமுதாயத்திற்கு பாடம் புகட்டவே வந்தேன் இனியாவது திருந்துங்கள் இல்லை திருத்த முயலுங்கள் என்று கூறுவதாக உனது கட்டுரையை முடித்துக்கொள் பூமிகா என்றதும் 
பாட்டிக்கு நன்றி சொல்லி பள்ளியில் முதல் பரிசு பெற்றாள் பூமிகா 
"பாதை மறந்து வாழாதே 
பாலம் உடைந்து சாகாதே " 
இந்த கதை கூறவருவது என்னவெறால் காலத்தை விட பழிவாங்கக் கூடிய சக்தி வேறு ஒன்றும் இல்லை

பொங்கலோ பொங்கல்...!


போகி முடிஞ்சிருச்சு 
பொழுதும் விடிஞ்சாச்சு 
நாடும் வீடும் செழிக்கவே 
நடந்ததெல்லாம் மறந்தாச்சு
கலர்கலராய் கோலமிட்டு 
கரும்பு மஞ்சள் படைச்சாச்சு 
அச்சுவெல்லப் பொங்கலிட்டு
ஆடிப்பாடிடு மகிழ்ந்தாச்சு 
ஊரும் உறவும் ஒன்று கூடி  
உழவனுக்கு நன்றி கூறியாச்சு  
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தவே 
காணும் பொங்கல் முடிஞ்சிருச்சு 
பொங்கலோ பொங்கல்...! 
                                       - ஹிஷாலீ

(வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் )

சிறுகதை - ஜல்லிக்கட்டு !


ரோஷன் தனது பள்ளியில் நடக்கும் சிறப்பு பேச்சுபோட்டிக்கு தேவையான கருத்துகளை தனது அம்மாவிடம் சென்று கேட்கிறான் ஆனால் அம்மாவோ காலையில் சமைக்கணும் அப்புறம் அலுவலகத்திற்கு செல்லனும் நீ போய் உன் அப்பாவிடம் கேள் என்றாள் உடனே ரோஷன் தனது அப்பாவிடம் சென்று கேட்டான் அப்பாவோ காலையில் வாக்கிங் போகணும் அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசர மீட்டிங் இருக்கு அதுக்கு நான் பிரிப்பேர் பண்ணனும் நீ போய் தாத்தாவிடம் கேள் என்றதும் சலித்துக்கொண்டு தனது தாத்தாவிடம் சென்று கேட்டனான் தாத்தாவோ நடந்ததையெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தேன் உனக்கு என்ன கருத்து வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்றார் நல்லது தாத்தா மிக்க நன்றிகள் என்றவாறே கேள்வியை தொடுத்தான்
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பது நல்லதா? கெட்டதா ?
சரியென்றும் சொல்லமுடியாது தவறென்றும் சொல்லமுடியாது அவரவர் வசதியை பொறுத்தது 
என்னதாத்தா குழப்புறீங்க ....
தாத்தா சிரித்துக்கொண்டே ஜல்லிக்கட்டும் பள்ளிகட்டும் நமது மூதாதையர்கள் வந்த வழிமுறை என்று பலருக்கும் தெரியும் தெரிந்தும் என்ன செய்வது ஒரு பக்கம் மாட்டை அடித்து தின்பது தப்பில்லை என்பார்கள் மறுபக்கம் அதே மாட்டை அடக்கி விளையாடுவது தப்பு என்றும் தப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள் 
இன்னும் கொஞ்ச நாள் போனால் கொசுவை அடிப்பவனுக்கு ஆயுள் தண்டனை ஏறும்பை நசுக்கியவனுக்கு மரண தண்டனை என்று வாதிப்பார்கள் எல்லாம் கலிகாலம், அன்று அரிசியை சமைத்து உண்டோம் ஆயுள் கூடியது இன்று புதுசு புதுசா  உணவுகளை சாப்பிடுகிறோம் புற்று நோய் போன்ற புதிய புதிய நோயிகள் வந்து சாகிறோம் 
அதுமட்டுமா ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ குழந்தைகள் மிருகங்களாகவும் மிருகங்கள் குழந்தைகளாகவும் வளர்கிறார்கள். நம் கண்ணுக்கு தெரியாமல் எத்தனை உயிர்களை வதைக்கிறோம் தெரிந்தும் எத்தனை உயிர்களை கொல்கிறோம் அது தவறென்று வாதிட முடியாது ஏன் என்றால் அது நம் முன்னோர்கள் மரபு என்பார்கள் 
உதாரணத்திற்கு மதுவை எடுத்துகொள் சிலர் குடித்துவிட்டு மிருகம் போல் நடக்கிறான் இதை தடை செய்வதற்கு எவரும் முன்வரவில்லை,இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
ம்ம்ம் மிகவும் சரியகாக சொன்னீர்கள் தாத்தா நம் தமிழரின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டே நசுக்கப் படுகிறது என்பது தான் உண்மை.மேலும் எதையுமே தகுந்த பயிற்சியுடன் செய்தால் தவறில்லை அப்படி தானே  
ஆம் ரோஷன் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது நீ கிளம்பு 
ஓகே தாத்தா பாய் சொல்லி கிளம்பினான் ரோஷன் .
நன்றி !

சிறு கதை - கடிகாரம்

large picture

பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள்

அவரும் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றாரர்

இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பிவிட்டார்

ஆதி அங்கேயே தனது விடுமுறையை அழகாகவும் இனிமையாகவும் கழித்து வந்தாள்

ஒரு நாள் தாத்தா வீட்டில் இருக்கும் பழமையான கடிகாரத்தை பார்த்து எள்ளி நகைத்துவிட்டு தாத்தா தாத்தா என்று அழைத்தாள் 

தாத்தா உடனே வந்தார் 
என்னடா ஆதி என்றார் 

இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்தையும் புதுமையாக மாற்றி விட்டீர்கள் ஆனால் இந்த பழைய கடிகாரத்தை மட்டும் ஏன் குப்பையில் போடவில்லை என்றாள்

அதற்கு தாத்தா இது ஒழுங்காகத்தானே ஓடுகிறது பின் எதற்கு குப்பையில் போட வேண்டும் என்றார்
இருந்தும் பழமையாக உள்ளதே

தீடிரென்று கடிகராம் பேசத் தொடங்கியது . நானும் பல ஆண்டுகளாக நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது பேத்தியே நீயாவது ஒய்வு கொடு என்றதும்

ஆதி சிரித்தாள்

உனது புகார் தவறு எனதருமை கடிகாரமே என்று பதில் அளிக்கத் தொடங்கிய தாத்தா ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு வினாடி ஒய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயோ ?...

கடிகாரம் ஒரு நொடி யோசித்தது பிறகு மீண்டும் வழக்கம் போல் தன் பணியைத் தொடங்கியது

தாத்தாவின் அறிவுப்பூர்வமான சிந்தனையைக் கண்டு வியந்தாள் ஆதி

திடீரென்று தாத்தா சொன்னார் ஒரு ஒழுங்கு முறையிலான வேளையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக் கொன்று ஈடு கொடுத்து அமைந்தால் அந்த ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் ஏற்படும் வலியையும் போக்கிவிடும் என்பது தான் உண்மை !

பள்ளி தொடங்கும் நாள் வந்தது ஆதி தாத்தாவின் நீதிக் கதையை தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கும் உரைப்பதாக வாக்கு கொடுத்தாள்.

அடியே கள்ளி ...!


அடியே கள்ளி 

இத்தனை மெதுவாகவா 

வளர்ப்பது 

நம் காதலை ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!தெய்வமான தாயைப்பார்த்து 
சிரித்தது 
அழுத குழந்தை ...!
களிமண் பொம்மை 
உயிர் கொடுத்தது 
விநாயகர்சதுர்த்தி ...!
கருப்பு இரவு 
பச்சையம் மாறது 
சிவக்கும் மருதாணி  ...!
பல புள்ளிகள் 
சேர்ந்து செல்கிறது
ஊர் கோலமாய் ...!
பெரும் உதவி 
செய்தது 
சிறு கதை ...!
ஊஞ்சல் ஆடும் 
கடல் அலைகள் 
அறுந்து விழுகும் மின்கம்பம் ...!
எரியும் வயிறு 
அணைக்கவில்லை 
வெள்ளம் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்புதுவெள்ளம்
நிவாரணம்
பழைய துணிகள் ...!

16 ஆம்  நாள் காரியம்  
புன்னகையுடன் 
நினவு பதாகைகள் ...!
விரைவு செய்திகள் 
தடங்களில் 
விளம்பரம் ...!
குட்டையை குழப்பும் 
அரசியல் வாதிகையில் 
கருவாடாகும் மக்கள் ...!
மாத விலக்கு 
சாஸ்திர சம்பிரதாயங்களை முறியடித்தது மனக்கோயில் ...!

புது வெள்ளம் 
பழையதை போர்த்திகொள்ளும் 
மக்கள் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்கனமழை
பெருகும் கல்வி கட்டணம்
தத்தளிக்கும் தாய்மார்கள் ...!

ஆண்பால் பெண்பால்
தரம் பிரித்தது
ஜாதி ...!

நினவு நாட்கள்
அசை போடும்
ஆணி வேர் ...!

நரையழகை பார்த்து (கடல் அலை )
மயங்கி விழிக்கும்
சூரியன் ...!

விண்வெளிய வீடாக்கி
வாசல் தாண்டிக் கோலமிடும்
பாரதிப் பெண்கள் ...!

சிறைப் பிடித்த
ரோஜா செடியில்
சிரிகிறது காதல் ...!

தேன் கூட்டைக் கலைத்து
அஹிம்சையைத் தேடுகிறது
அரசியல் ...!

கருபழியில் தப்பிய
குழந்தைக்கு
நரபழி ...!

கருபழியில் தப்பிய
குழந்தைக்கு
பாலியில் பலி ...!

கருவறையில் தப்பித்து
ஆழ்குழாய் கிணற்றில்
புகுந்தது குழந்தை ...!

ஜாதிக் காதல்
என்றுமே
சாதிக்காது ...!

காற்றாற்று வெள்ளத்தில்
கலக்கிறது
கானல் நீர் ...!

கொட்டும் மழை
முட்டி முனுங்குகிறது
ஏரி குளம் ...!

அடை மழை
ஊஞ்சல் ஆடும்
கடல் அலைகள் ...!

ஆணி வேர்
அசைத்துக் காட்டியது
அடை மழை ...!

மரணிக்காமல்
மரணித்துக்கொண்டிருக்கும்
அவளின் நினைவுகள் ...!

நிலா சோறு
வயிறு நிரம்பாத
முதிர்கன்னி ..!

முல்லைப் பூ
குத்தி கிழித்தது
தூர தேசத்து ராமனை ...!

இறங்கும் அம்மை
கூழ் குடிக்கும்
பூமித் தாய் ...!

mhishavideo - 21