பொங்கலோ பொங்கல்...!


போகி முடிஞ்சிருச்சு 
பொழுதும் விடிஞ்சாச்சு 
நாடும் வீடும் செழிக்கவே 
நடந்ததெல்லாம் மறந்தாச்சு
கலர்கலராய் கோலமிட்டு 
கரும்பு மஞ்சள் படைச்சாச்சு 
அச்சுவெல்லப் பொங்கலிட்டு
ஆடிப்பாடிடு மகிழ்ந்தாச்சு 
ஊரும் உறவும் ஒன்று கூடி  
உழவனுக்கு நன்றி கூறியாச்சு  
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தவே 
காணும் பொங்கல் முடிஞ்சிருச்சு 
பொங்கலோ பொங்கல்...! 
                                       - ஹிஷாலீ

(வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் )

12 comments:

 1. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   Delete
 2. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
   மிக்க நன்றிகள் அண்ணா 

   Delete
 3. வணக்கம்

  கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா 

   Delete
 4. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மனதாரப் பாராட்டிய அண்ணனுக்கு இந்த தங்கையின் அன்பு நன்றிகள்

   Delete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா 

   Delete
 6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் . என்னை நினைவிருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ...
   சற்று மன்னிக்கவும் கொஞ்சம் யாபகம் செயுங்கள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...