ரோஷன்
தனது பள்ளியில் நடக்கும் சிறப்பு பேச்சுபோட்டிக்கு தேவையான கருத்துகளை தனது
அம்மாவிடம் சென்று கேட்கிறான் ஆனால் அம்மாவோ காலையில் சமைக்கணும் அப்புறம்
அலுவலகத்திற்கு செல்லனும் நீ போய் உன் அப்பாவிடம் கேள் என்றாள் உடனே
ரோஷன் தனது அப்பாவிடம் சென்று கேட்டான் அப்பாவோ காலையில் வாக்கிங் போகணும்
அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசர மீட்டிங் இருக்கு அதுக்கு நான்
பிரிப்பேர் பண்ணனும் நீ போய் தாத்தாவிடம் கேள் என்றதும் சலித்துக்கொண்டு
தனது தாத்தாவிடம் சென்று கேட்டனான் தாத்தாவோ நடந்ததையெல்லாம் பார்த்துகொண்டு
தான் இருந்தேன் உனக்கு என்ன கருத்து வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தவரை
உதவி செய்கிறேன் என்றார் நல்லது தாத்தா மிக்க நன்றிகள் என்றவாறே கேள்வியை
தொடுத்தான்
|
ஜல்லிக்கட்டுக்கு
தடைவிதிப்பது நல்லதா? கெட்டதா ?
|
சரியென்றும் சொல்லமுடியாது தவறென்றும் சொல்லமுடியாது அவரவர் வசதியை பொறுத்தது |
என்னதாத்தா குழப்புறீங்க .... |
தாத்தா சிரித்துக்கொண்டே ஜல்லிக்கட்டும் பள்ளிகட்டும் நமது மூதாதையர்கள் வந்த வழிமுறை என்று பலருக்கும் தெரியும் தெரிந்தும் என்ன செய்வது ஒரு பக்கம் மாட்டை அடித்து தின்பது தப்பில்லை என்பார்கள் மறுபக்கம் அதே மாட்டை அடக்கி விளையாடுவது தப்பு என்றும் தப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள் |
இன்னும் கொஞ்ச நாள் போனால் கொசுவை அடிப்பவனுக்கு ஆயுள் தண்டனை ஏறும்பை நசுக்கியவனுக்கு மரண தண்டனை என்று வாதிப்பார்கள் எல்லாம் கலிகாலம், அன்று அரிசியை சமைத்து உண்டோம் ஆயுள் கூடியது இன்று புதுசு புதுசா உணவுகளை சாப்பிடுகிறோம் புற்று நோய் போன்ற புதிய புதிய நோயிகள் வந்து சாகிறோம் |
அதுமட்டுமா ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ குழந்தைகள் மிருகங்களாகவும் மிருகங்கள் குழந்தைகளாகவும் வளர்கிறார்கள். நம் கண்ணுக்கு தெரியாமல் எத்தனை உயிர்களை வதைக்கிறோம் தெரிந்தும் எத்தனை உயிர்களை கொல்கிறோம் அது தவறென்று வாதிட முடியாது ஏன் என்றால் அது நம் முன்னோர்கள் மரபு என்பார்கள் |
உதாரணத்திற்கு மதுவை எடுத்துகொள் சிலர் குடித்துவிட்டு மிருகம் போல் நடக்கிறான் இதை தடை செய்வதற்கு எவரும் முன்வரவில்லை,இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ... |
ம்ம்ம் மிகவும் சரியகாக சொன்னீர்கள் தாத்தா நம் தமிழரின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டே நசுக்கப் படுகிறது என்பது தான் உண்மை.மேலும் எதையுமே தகுந்த பயிற்சியுடன் செய்தால் தவறில்லை அப்படி தானே |
ஆம் ரோஷன் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது நீ கிளம்பு |
ஓகே தாத்தா பாய் சொல்லி கிளம்பினான் ரோஷன் . |
நன்றி ! |
சிறுகதை - ஜல்லிக்கட்டு !
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
கதை போல ஜல்லிக்கட்டின் அவசியத்தை சொல்லிவிட்டீர்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDelete