பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் ...!


காலமே எதிரிபாரா கடலைஒற்ற வெள்ளமதில் 
கரையாதுயிர் மறுபடி பிறக்க வைத்து 
மீள்வதற்கு உணவுடை யளித்தஎம் மதங்களுக்கு நன்றி

ஓடும் வெள்ளத்தில் ஓரம் வளரும் 
மரமெனப் பாராமல் எல்லாம் உயிரென 
மருத்துவம்தந்த மானம் காத்த மனங்களுக்கு நன்றி

தொல்லை வெள்ளத்தில் துன்புற்றோரை 
இன்புற்ற முகத்தோடு இன்னல் தாண்டி 
வின்னில் பரந்த இராணுவ இளைஞனுக்கு நன்றி

காரிருள் சூழ்ந்தும் கைபேசி தொடர்பற்றுக் 
கதறும் சத்தத்தில் நன்மை தேடாது
கொள்ளை திருடனைத் திருத்தியக் கருணைக்கு நன்றி

செம்பரம் பாக்கமா? தன கரம் காக்குமா? 
யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது 
தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி

பன்னாட்டு வாணிபம் மல்லாது பல்நாட்டு 
நிவாரணத்தில் பஞ்சம்போக்கி நெஞ்சம் மகிழ்ந்த 
மனிதாபி மானத்திற்கு நன்றி
(12.01.15)

4 comments:

 1. வணக்கம்
  மனிதம்இன்னும் வாழ்கிறது... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. //செம்பரம் பாக்கமா? தன் கரம் காக்குமா? யெனத் குமுறுவது தந்தை தாயெனப் பந்தம் பாராது தமிழரினம் ஒன்றெனப் படகோட்டியக் கரங்களுக்கு நன்றி//

  :)

  ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம் நன்றிகள்.

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...