வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து !

மாநா புலவர்கள் மறையுமென்று சூளுரைக்க 
சாநா பலகையில் சமதர்ம வள்ளுவனை 
வாரி எடுத்துக் கொண்டு வஞ்சகசம்பு பொன்தாமரை 
குளத்தில்தள்ளி மெய்யுரைத்த பொய்யாமொழியும் நீயே 
கனியமுது மொழியால் வையம் ஆண்டுவான் 
கடல்தாண்டி ஆற்றவும் தொடுத்த வள்ளுவமாலை 
சூடாத வாயுமில்லை சுமக்காத ஊர்தியுமில்லையென 
சுற்றி திரியும் ஈரடி தந்த வாமனனும் நீயே 
உன்குறள் அளந்து உருவம் தரித்துத்  
தென்குமரி கங்கையில் தன்கடம் நனைய 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் வாயுறை வாழ்த்தும் பொதுமறையும் நீயே  
சமணனா கிறிஸ்துவனா பௌத்தனா என்றெல்லாம் 
சாதிபார்க்கும் பாதகர்முன் பாலினம் இரண்டெனப் 
பாரில் நிரந்தரமென நகைசெய்யும் உத்தர வேதம் 
பதினென்கீழ்கணக்கு மடுவில் சுரக்கும் முப்பாலும் நீயே 
காதல் மணக்கக் கலவியின்பம் வகுத்து 
ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அறம் பெருக்கி 
கூட்டுப் பொருள்தன்னை கூடிவாழ் இன்பமுடன் 
கழித்தெழுங்கும் சமூக சீர்த்திருத்த அறிஞரும் நீயே 
மரபுடைத்த இலக்கண மதுதனை உண்டு 
மாற்றங்கள் படைக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் 
புதுகவி படைக்கும் புலவனுக்கும் உன் ஏடே 
புதுவாழ்வு அளிக்கும் தெய்வ நூல் திருக்குறள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு