தளபதி படம் சூப்பர்ஹிட்



நாயகி துப்பாக்கி 
நாயகன் புல்லட் 
நான்கு கண்களும்  
சேர்ந்து வெடிச்சா 
தளபதி படம் சூப்பர்ஹிட் 

கவலை தேவதை ...!


இருப்பது சென்ரல் 
உடுப்பது கந்தல் 
படிப்பது மட்டும் 
பாவமானது எங்களுக்கு 
பாருங்கள் ...

சட்டை இல்லை 
பட்டம் படிக்க ஆசை 
கொட்டாய் இல்லை 
கோபுரம் கட்ட ஆசை 

ஆங்காங்கே அழுகிறது 
அட்டை படத்தைப் போல் 
எங்கள் அவமானங்கள் 
துடைக்க யாருமில்லை 
துளிர்விடும் தலைமுறையை 

இதோ 
தண்டவாளத்தில் 
தலைமுறையோடு இத் 
தரணியை ஆள 
அச்சாரம் போடுகிறோம் 

எங்கள் 
கேளிக்கைகள் 
வேடிக்கையாய் வளராமல் 
வரலாறாக வானைத் தொட 
வணங்குகிறோம் 
கவலை தேவதையை ...!






ஹைக்கூ - வாழை



வந்தது மின்னல் 
என்ன தோஷமோ 
வாய்கரிசியானது வாழை 




ஹைக்கூ - இயற்கை








இறுதி நாட்களின் 
பன்மடங்கு 
இயற்கை உணவு ...!




மரணத்தின் 
மருத்துவக் கல்லூரி  
இயற்கை ...!






ஹைக்கூ - ஈழம்






ஈழ மானுடம் வீதியில் 
விழும் மீன்களாய் 
களங்கம் சுமந்தன இராணுவம்...!


இறக்கிறேன் மலராக...!


ஒவ்வொரு நாளும் 
மலராக இறக்கிறேன் 
மரணத்தை விரும்பால் 
மலரும் நினைவுகளை 
மனதில் சுமந்தபடியே 
இம்மண்ணில் ...

விதையானேன் விழியால் 
பயிரானேன் மொழியால் 
உயிரானேன் உன்னால் 

அறுவடை செய்யும் பிரிவே
வழியாக நீயிருந்தால்  
வரமாக நான் வருவேன் 
நம் வாழ் நாள் முழுவதும் ...!









காதால் அழிவின் ஓசை ...!




இமை மூடி 
இதயம் வருடி 
பேசும் ஆசை தான் 
கவிதை என்பார்கள் 

நானோ !
அழிவின் ஓசை என்பேன் 
ஏன் தெரியுமா ...?

இதயம் இரண்டாகும் 
இமைகள் நான்காகும் 
உயிர்கள் மற்றும் ஒன்றானால் 
வாழ்வேது கண்ணில் 
வளம் மேது சொல்லில் 

இதோ 
தவமிருந்த தாய் 
தலை வலியானாள் 
தந்தையோ வேலியானார் 
உடன் பிறந்தவர்கள் 
உதாசினப்படுத்த 

உயிரானவள் 
மயிராய் போனதால் 
காதல் தோல்வியானது 
காலம் வேள்வியானது 

கடைக்கண் பட்டாலே 
கால்கள் ஓடுகிறது 
மதுவைத் தேடி 
மனதோ வெறுக்கிறது   
மரணத்தை தேடி 

எல்லாம் ஒன்றானால் 
எதற்கு உயிர் என்று 
அழிந்துவிட்டேன் 
ஆகாயத்தில்....!





 


ஹைக்கூ - இயற்கை



பூமித்தாயின் 
கூந்தல் 
இயற்கை...!

( சுருக்கமாக கூறுகிறேன் : பூமியில் எப்படி இயற்கை இல்லாமல் இருந்தால் அழகாக இருக்காதோ அவ்வாறே பெண்களின் தலையில் கூந்தல் இல்லை என்றால் அழகு குறைந்துவிடும் என்ற கருத்தில் எழுதியது இந்த ஹைக்கூ.)



ஆணுலகம் 
பெண்ணியற்கை 
பாகப்பிரிவினை ...!




இயற்கையின் 
வரப்பிரசாதம் 
கலைப் பொருட்கள் ...!


தமிழ் மொழி பிறந்து சுமார் 20000 வருடம் ஆகுது




மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .  நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,

ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்கநாடு, ஏழுமதுரைநாடு, ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!!

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம இன்றைய மதுரையில் "கி .மு1850 இல் 449 புலவர்கல்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள்   இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..

இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்.........!!  தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !  இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம தோழர்களே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !  நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !  தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

நன்றி !

( இதை எனக்கு பகிர்ந்தவர் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷிணி அவர்கள் அதை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சிக் கொள்கிறேன் )

ஹிஷாலீ ஹைக்கூ




மின்னடுப்பில் பிணங்கள் 
வெட்டியான் வீட்டில் 
பசி பட்டினி ...!

ஹிஷாலீ ஹைக்கூ


அன்பை அடகுவைத்து 
விலை போனான் வெளிநாட்டில் 
கிணற்றுத் தவளை...! 

ஹிஷாலீ ஹைக்கூ




ஆயிரம் கொடுமைகள் 
அண்ணல் காந்தி 
கேப்பார் யாருமில்லை...! 




ஹிஷாலீ ஹைக்கூ



பச்சை நரம்புகள் 
பாரின் துரும்புகள் 
பசுமை புரட்சி ...!


ஹிஷாலீ ஹைக்கூ - ஓவியம்



ஓவியங்கள் 
விடுதலை 
விருதுகள் ....!


விழி புகைப்படம் 
விரலில் விருந்தானது 
ஓவியங்கள்...!

உயிர் பெற்றது 
ஓவியம்
ஊமை வண்ணங்கள் ...!  

சிறைபட்ட வண்ணங்கள் 
சுதந்திரம் 
ஓவியத்தில்...!




ஹிஷாலீ ஹைக்கூ



அந்தரத்தில் வானம் 
அளந்து காட்டியது மழை 
உயர்வு தாழ்வில்லை 


அருவி இதழில் எண் - 14


மலர்களுக்கு 
புண்ணிய தரிசனம் 
கடவுளின் காலடியில் 

கேட்டது கிடைக்கும் முன் 
கேள்விகள் 
ஆசைக்கு அளவில்லை 

ஆவிகளின் கண்ணீர் 
நீராக பிறக்கிறது 
மழைத்துளி 

கடந்த நாட்கள் 
இன்றும் 
கவிதை 

காயிச்சி வடித்தாலும் 
வெகு தூரத்திலில்லை 
மரணம் 

அதிகம் விரும்பாத 
ஆயுள் தண்டனை 
காதல் தோல்வி 

ஊரெங்கும் 
ஓராயிரம் ராகங்கள் 
பறவைகள் 

இலவசங்கள் 
பெற்றெடுக்கின்றன 
போலித்தரம் 

சென்ரியு - 5



டாப் கலண்டவனெல்லாம் 
டாப் டென் வரிசையில் 
டாஸ் மார்க் 



பேலன்சே முடியும் வரை ...!


தொலை தூரப் பயணத்தின் 

போது 

அலை பேசி சத்தங்கள் 

அவளாக சிலை வடிக்க 

உயிர் தீயில் 

காதல் இறங்கியதால்

நரம்புகள் திரியாகி  

நவரசமும் தூண்டுகையில் 

மெழுகானேன்

பேலன்சே முடியும் வரை ...! 


பதிலைத் தேடியபடி ...!



கணினிக்குள் எண்ணற்ற 

கவிதைகள் வந்து 

சுவைப்பவர்களுக்கு இறந்த காலம் 

ரசிப்பவர்களுக்கு எதிர்காலம் 

வடித்தவள் வாசல் மட்டும் 

நிகழ்காலமாய் நிற்கிறது 

பதிலைத் தேடியபடி ...!

இரண்டு உயிர்கள் ...!





நண்பனின் திருமணத்தில் 

என் நாயகி 

திருடிவிட்டேன் அவளை 

அலுவலக அடையாள 

அட்டை போல் ஞாபகமாய் 

மணி பர்சில் 

உறைந்து கிடக்கிறது 

இரண்டு உயிர்கள் ...!



என் ஆருயிரே ...!



முகம் தேடித் திரிகிறேன் 
முழுமதியாய் 
பெண்ணே நீயோ ...

அகம் தேடி வருகிறாய் 
அருகில் 
என்ன சொல்வேன் 

நில் என் ஆருயிரே
அனைத்தும்  நீயாவாயாக 
ஆணையிடுகிறேன் ...!

சென்ரியு - 4



வரப்புகள் எல்லாம் 
இறப்புகள் 
வீட்டு மணை ..!


காதல் காற்றில் ...!


இதயம் இரண்டானாலும் 
இளமை ஒன்று தானே 
இந்த உலகத்தைப் போல் 

இன்பம் துன்பம் 
ஆசை அழிவு 
கோபம் சாபம் 
செல்வம் வறுமை 
ஒய்வு வேலை 
தூக்கம் விழிப்பு 

இவைகளைத் தாண்டியும் 
இணைந்திருப்போம் 
இருவர் மீது ஒருவராய் 
பேசும் காதல் காற்றில் !



வலியின் யாசகம்...!

வலிகள் நிறைந்த உலகில் 
விழிகள் தந்த உயிரே... 

மொழிகள் கொண்டு பூஜிக்கிறேன் 
மௌன உளிகள் கொண்டு யாசிக்கிறேன் 
ஏன் தெரியுமா !

கலை இல்லா சிலை மேனியை 
காதல் பிழையில்லா சிற்பமாக்க 
வருவாய் என்று !

 

தீபாவளி ஒரு புதிய கோணத்தில் !



"விசேசம் "
விழாவானது உலகில் 
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!


"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும் 

அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன் 

இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து ! 

அதே போல் தான் நாமும்  இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம். 

அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே  கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது! 

நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .

நன்றி !





தீபாவளி செய்திகள் கவிதை வடிவில்





வெள்ளை புடவை 

விடிந்தால் தீபாவளி 
விபத்தில் கணவன் 
வாங்கியப் பட்டாசுகள் 
வழியனுப்பியது வாக்கரிசியோடு !
















ஆசையே அழிவு 

தலை தீபாவளி 
தாய் மாமன் சீர் 
குறைந்தது குண்டுமணி 
கொலை வெறியில் 
பிழையானாள் மகள் !














வேலைக்காரி 

ஆயிரம் கனவுகளோடு 
அவள் முகம் சிவந்தது 
ஆதரவு யாருமில்லை 
அடுத்தவேலை உணவுமில்லை 
அன்னமிட்டக் கையேடு 
அண்டை வீட்டை நோக்கினாள் 
ஆஹா பழமையில் புதிய தீபாவளி !











தீபாவளி - ஹைக்கூ




விசேசம் 
விழாவானது உலகில் 
சொர்க்கத்தில் நரகாசுரன் !











எது அழகு ...!




பூவே நீ மலரும் போது அழகு 
மலர்ந்து உதிர்ந்தபின் எது அழகு?

நிலவே நீ சாயிம்போது அழகு 
சாயிந்தபின் எது அழகு?

இரவே நீ விடியும் போது அழகு 
விடிந்தபின் எது அழகு?

உறவே நீ சேரும்போது அழகு 
சேர்ந்து பிரியும்போது எது அழகு?

மழையே நீ உதிரும்போது அழகு 
உதிர்ந்தபின் எது அழகு? 

காற்றே நீ வீசும்போது அழகு 
வீசிமுடிந்தபின் எது அழகு?

மொழியே நீ பாடும்போது அழகு 
பாடியபின் எது அழகு?

உயிரே நீ பிறக்கும்போது அழகு 
பிறந்து இறக்கும்போது எது அழகு?

உலகில் எத்தனை அழகுகள் 
இருந்தாலும் அத்தைனையும் 
உண்மையான அன்பிற்கு ஈடாகுமா...!


சுனாமி ...!



சு என்றதும் நாவை 
சுண்டி இழுத்தது அலைகள் 
அதனால் தான் என்னவோ 
சுனாமி என்ற பெயர் வந்ததோ !

எண்ணிடா அலைகள் சேர்ந்து 
என் தாய் மக்கள் 
தலை கொய்தாயே 
நீ என்ன பேயா ? இல்லை 
சீசனில் வந்து போகும் நோயா ?

மீன் விற்று உயிர் வளர்த்தோம் 
மீண்டும் பண்டமாற்று முறை போல் 
எண்கள் உயிர் தின்று 
கடன் தீர்த்தாயோ ?

வெள்ளலைகளை கண்டு 
உள்ளம் மகிழ்ந்தோம் உன் 
தொல்லலைகளால் 
எங்கள் பெண்கள் 
வெள்ளலைகளாய் வளம் வர 
கனவு கண்டாயோ ?

பலித்த கனவு பாதை மீறியதில் 
அள்ளியக் கூந்தால் ஆடுகிறது 
அருகில் குழந்தை தேடுகிறது பசியில் 
ஆவலில் உன் அலைப் பாலை குடித்து 
உயிர் பால் புதயலானதே மண்ணில் ! 

நீர் பால் கொண்ட பூமியில் 
நிலநடுக்கம் ஏன் ?
நிறைவுடன் வழியனுப்புகிறோம் இனி 
நீ கனவிலும் கரை தாண்டாதே 
எங்கள் கடலன்னையே !









ஜோக்ஸ்




மச்சான் எல்லாரும் ஏன் சட்டம் ஒரு இருட்டறைனு சொல்லுறாங்க?

மாப்பிள்ள அங்கே கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு இருக்காங்களே அதான் 

இல்லை இல்லை 

தண்டனையை நிறுத்துப் பார்க்க தராசில் படிக்கல் இல்லாததனால் 

ஹா ஹா ஹா ....


கேள்வி அறியா தேடல் ...!



கேள்விகள் தெரியாமலே 
விடையைத் தேடும் மனிதா !

உடையில் மாற்றம் கண்டாய் 
உணவில் மாற்றம் கண்டாய் 
பிறப்பில் மாற்றம் கண்டாய் 
இறப்பில் மாற்றம் கண்டாய் 

உழைப்பை மட்டும் நம்பாமல் 
ஊழலில் மாற்றம் கண்டதால் 
தேர்தல் களம் தேவைக் களமானது 
தேர்வுக் களம் போர்வைக் களமானது 

கெஞ்சல் கேலிகள் எல்லாம் 
கொஞ்சல் செய்தியானது 
கோடானக் கோடி
மக்கள் பார்வையில் - அது மட்டுமா ?

அஞ்சல் வழியில் ஆயிரம் கோடி 
அவரவர் வேளையில் லட்சம் கோடி  
இங்கே விடியலும் மாறுவதில்லை 
ஏழைக் குடிசையும் ஒய்வதில்லை 

வாழையடி வாழையாய்
வளர்கிறது வறுமை
இதை வாடா என்று அழைக்குது
நாளையக் கொடுமை

ஓடாய் தேய்ந்தாலும்
நாடாய் மாறாமல் 
நாமும் மாறமாட்டோம்
நல் வழி சேர மாட்டோம் !



தத்துவம்...!
















மு . மேத்தா அவர்கள் :

நம்பிக்கை நார் மட்டும் நம் கையிலிருந்தால் 
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக் கொள்ளும் !

ஹிஷாலீ :

கனவென்னும் திரைப்படம் மட்டும் நம் கண்ணிலிருந்தால் 
வெற்றிப் பாதை எளிதில் வந்து சிக்கி கொள்ளும் !

















வைரமுத்து அவர்கள் :

சுடும் வரை நெருப்பு! சுற்றும் வரை பூமி !
போராடும் வரை மனிதர் 

ஹிஷாலீ :

சிரிக்கும் வரை நட்பு!சீரும் வரை காதல் 
போராடும் வரை பணம் !



அறிவியல் காதல் ...!





இதயத்தின் 
ஆரிக்கிள் மற்றும் 
வென்ரிக்கிள்  பிரிக்கும் 
தடுப்பு சுவர் செப்டார் என்று 
அறிவியல் சொல்கிறது !

ஆனால் பெண்ணே 
நம் இதயத்தை மாற்றும் 
தடுப்பு சுவர் 
உன் செவ்விதழ் சிந்தும் 
காதல் மொழி தான் என்பேன் !




காதல் ஒரு சவக்குழி...!

சோகத்தைக் 
கற்றுக் கொண்டேன் 
உன் 
மௌனம் என்னை
சலனப்படுத்தியதால் அல்ல !
சவக்குழியை சற்று 
உணரவைத்ததால் ..!

காதல் விடுகதை...!

விடுகதை போல் 
உள்ளது நம் காதல் 
விடை தருமோ விதி 
இல்லை விலகிடுமோ 
நம் விழி 

இருந்தும் 
நிலைத் தடுமாறாமல் 
நினைத்திருக்கிறேன் 
நொடியில் மரணம் என்பதால் ...!

மதுவின் சாபங்கள் ...!
















காந்தி சிரிக்க 
கஜானாப் பெருக்க 
மதுவில் மயங்குகிறான் 
இன்றையக் குடி மகன் !

அரை நாள் 
அயராது உழைத்தவன் 
அரை நொடி மரணத்தை 
சேமிக்கிறான் மது (மாது) வில்! 

என்ன தான் விஞ்ஞானம் 
மெய்ஞ்ஞானம் வளர்ந்தாலும் 
வாழ்க்கை தள்ளாடுகிறது 
வறுமை தராசில் !

நூறுக்கும் நூற்றி எட்டுக்கும் 
ஒரே பாட்டில் தான் 
உள்ளே போனால் மரணம் 
வெளியே ஏற்றினால் ஜெனனம் !

நீ தள்ளாடினாள் 
உன் வீடு தடம் மாறுகிறது 
குடிகாரனக்கு குடித்தனம் 
இல்லை என்றார்கள் 
குமுறுகிறாள் மனைவி !

மூன்று வேலை உணவு 
முழு நிலவாக 
அரையாடை கோலத்தில் 
அண்டை வீட்டைத் தேடுகிறாள் 
அடிக்கு பயந்து !

கணவனே கண் கண்ட 
தெய்வம் என்பது மருகி 
கள்ளச் சாராயமே 
கண்டெடுத்த தெய்வமானது 
ஒவ்வொரு குடிகாரனுக்கும் !

எவனொருவன் காந்தியை 
மதுவில் கரைத்தானோ 
அவனே நாளையை 
மரணத்தின் மைந்தன்! 

குடித்து கடிந்து பேசும் போது  
குமரியான மகள் 
வெக்கத்தில் விரைக்கிறாள் 
வெளி முகம் காட்ட 
மரணத்தை தேடி !

சீதையைக் கூட 
வேசியாய் பேசும் 
மதுச்‌ சொல் 
விடிந்ததும் கண்ணீர் வடிக்கிறது 
வீதியில் வீற்றிருக்கும் 
மனைவி பிணத்தைக் கண்டு !

அய்யோ என்ற போதும் 
அகிம்சை ஜெயிக்க வில்லை 
அருகில் பிணம் 
விதவைக் கோலத்தில் தாய் 
ஜெயிலில் மகன் !

தந்தையின் கொடுமையில் 
காதலை நேசிக்கிறாள் 
காலம் மாற்றும் என்று 
கடைசியில் காதலனும் மதுக் 
கடையைத் தேடினான் 
கண்ணீரில் மாது !

இழிவானக் கூட்டத்தில் 
இவனும் ஓர் இயந்திரம் தான் 
அரசியல் சூதாட்டத்தில் 
அலறி எறிந்தான் 
அவசர புத்தியால் அல்ல 
ஆல்ஹஹால் போதையால் !















புதிய தலைமுறைகள்



ஐய் J .P தாத்த 

வாங்க வாங்க மித்ரா எப்படி இருக்கேங்க சப்டேங்களா? 

ம்ம் சாப்டேன் தாத்தா நீங்க?

இல்லையே கண்ணு இப்பதான் தாத்தா டியூட்டி முடிச்சி வரேன் போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வரட்டா தாத்தா 

ஓகே ஓகே 

தாத்த சிறுது நேரம் கழித்து வந்தார் 

வீட்டில் அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டார்கள் 

மித்ரா தாத்தாவிடம் சென்றாள் 

தாத்தா என்னம்மா இன்னைக்கு  ஜெயிலில்  நடந்த கதையை சொல்ல வேண்டுமா? என்றார் 

ம்ம்ம் என்றாள் மித்ரா 

உடனே தாத்தா கதையை ஆரம்பித்தார் 

இன்று ஒரு கொஞ்ச வயசு பொண்ணு ஒரு பையன பாக்க வந்தா இருவரும் பேசினார்கள் அந்த பையன் இந்த பொண்ண லவ் பண்ணிருக்கான் இடையில் வேறு ஒரு பையன் இவளோட சொத்துக்காக இவள விரட்டி விரட்டி லவ் பண்ணிருக்கான ஆத்திரத்துல அந்த பையன் இந்த பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சிருக்கான் உடனே இந்த பையன் அவன கொன்னுட்டான் போலீஸ்  பிடிச்சு     ஜெயிலில் போட்டாங்க பாவம் அந்த பொண்ணு இவனுக்காக காத்திருக்க 

ம்ம்ம் அப்புறம் ...

ஒரு அம்மா அவுங்க கணவன பாக்க வந்தாங்க அவரு எதோ ஒரு சீட்டுக் கம்பெனியில பணம் கட்டி ஏமாந்துட்டாராம் அதனால அவுங்க பொண்ணு க்கு கல்யாணம் நடக்கலையாம் உடனே மாப்பிளை கையில காலுல விழுந்து என் பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிடாத அழுதுருக்காரு அவுங்க கேட்கல உடனே பக்கத்துல இருந்த  தேங்காயக்  கொண்டு எறிஞ்சதுல மாப்பிளையோட அப்பா செத்துட்டாராம் அதுக்கு இவர்   ஜெயிலில்  தண்டனை அனுபவிக்கிறாரு. 

இன்னொன்னு லவ் பண்ணுற பொண்ணு ஏமாத்திட்டாலாம் நீ பணக்காரனு தான் லவ் பண்ணுனேன் ஒரு எழைய கட்டி என்னால சீரழிய  முடியாதுனு சொன்னதுக்கு அவுங்க வீட்டுல  போய் திருடிட்டான் உடனே போலிஸூக்கு போன் பண்ணிடாங்க இப்போம்  ஜெயிலில்  இருக்கான் அவனோட அம்மா அழுதுட்டு போறாங்க 

இன்னொரு அம்மா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணெனு பெத்தேன் சில தருதலைங்க கூட சேர்ந்து திருடனா மாறிட்டான் இப்போ  ஜெயிலில்  களி திங்கிறானு புலம்புவாங்க 

சோத்துக்கே வழி இல்லாதவன் அதிக வட்டி வாங்கி வாங்கி பெரிய பணக்காரண ரவுடியா ஆகிட்டான் ஊருக்குள்ள எங்க பாத்தாலும் அடி தடி குத்து கொலை இப்படி பெரிய தாதாவா வாழ்ந்து வந்தான் போதாத காலம் வட்டி கொடுக்காதவனை குடும்பத்தோடு கொழுத்திட்டான் அவரு பெரிய இடமா இருந்ததால இவன  ஜெயிலில்   போட்டுட்டாங்க ஆயுள் கைதியா இருக்கான் அவன் பொண்டாட்டி புள்ளைங்க வந்து அழுகுறாங்க என்ன பண்ணுறது அவனவன் பாவம் அவனவன் குடும்பத்தையே ஆட்டி வைக்கும் 

இதுவும் போக நாட்டுல கற்பழிப்பு கொலை கொள்ளை பொண்டாட்டி தகராறு , பள்ளி பிள்ளைகளை கடத்தி பணம் சம்பாதித்தவன் இப்படி பல ரகத்தில இருக்காங்க என்றார் மேலும் தினசரி பேப்பரில் வந்து கொண்டே தான் இருக்கு இது போன்ற செய்திகள் மக்கள் எப்போதான் திருந்துவாங்களோ தெரியாது 

ஏன் தாத்தா எல்லாருமே பணத்துக்காகத்தான் ஜெயிலுக்கு வந்திருக்காங்களோ ?

ஆமாமா பல பேர் இப்படி சில பேர் தான் ஞாயம் நீதி இதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்காங்க நல்லவனும் இருக்கான் கெட்டவன்னும் இருக்கான் உலகத்துல அவனவன் செய்த பாவத்துக்கு அப்பவே தண்டனை தந்திடுவாறு கடவுள் 

பொய் சொல்லாதிங்க தாத்தா கடவுல் இருந்துமா இப்படி கொடுமைகள் நடக்கு?


அதுவாமா இவன் போன ஜென்மத்துல அவனா இருந்திருப்பான் அவன் இவனா இருந்திருப்பான் அதான் இந்த ஜென்மத்துல அந்த பாவத்தை அனுபவிக்கிறான்.

கடவுள் என்பது நாமலே நமக்கு பிடிச்சவுங்க ல வணங்கியது. பல நூறு வருடங்களுக்கு முன் மகன் தாய் தந்தையை தெய்வமா  வணங்கினான் அப்புறம் அண்ணன் தம்பி தாத்தா பாட்டி இப்படி உண்மையான பாசம் உள்ளவுங்க பெயரையே தெய்வமா  வணங்கியதால்  நாளடைவில் கடவுள் என்ற பெயர் வந்துவிட்டது என்று நினைக்கிறன். இது உண்மையாக்கூட இருக்கலாம் மித்ரா 

சரி தாத்தா காந்தி நேரு அம்பேத்கார் இப்படி எத்தனையோ தலைவர்கள் நம் நாட்டுக்காக உயிர் விட்டார்கள் அவுங்கள ஏன் கடவுளா கும்பிட மாட்டேங்கிறோம் 

நல்ல கேள்வி மித்ரா அவர்கள் உலகத்துக்காக உயிர் விட்டவர்கள் எப்படி சாமியா கும்பிட முடியும், நாமதானே சுயநலவாதிகளா இருக்கோமே ஒன்னு வேணா இருக்கலாம் அவுங்க பேரன் பேத்தி பிள்ளைங்க அவுங்கள  சாமியா  கும்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். 

இப்போம் கும்பிடுற சாமி எல்லாம் அவுங்க அவுங்க வீட்டுக்காக உயிர் விட்டவர்களா இருந்திருப்பாங்க அதான் இப்போம் முருகன் பெருமாள் சிவன் என்று பெயருடன் கடவுளா வலம் வருகிறார்கள் 

ஒகே ஒகே தாத்தா மிகவும் சரியாக புரிந்தது இன்னும் எனக்கு ஒரு சந்தேகம் 

கேள் மித்ரா 

பணம் மட்டுமே உலகமா? இல்லை வாழ்க்கையா ?

உலகம் என்ற சட்டைக்குள் வாழ்க்கை என்ற உடல் புகுந்ததால் பணம் என்ற பிணம் உயிரை அழிக்கிறது பேத்தியே 

சரி தான் அப்படிப்பட்ட பணத்தை ஏன் அரசாங்கம் உதவக்கூடாது ?

அரசே பணத்திற்காக இயங்குகிறது பின் அவர்கள எப்படி கொடுக்க முடியும் ?சொல் 

ம்ம்ம் அதுவும் சரிதான் எனக்கு ஒரு ஆசை தாத்தா இந்தப் பணப் பிரச்னையை தீர்க்க என்னால் முடியாதா ?

முடியும் அதற்கு நிறைய படிக்க வேண்டும் அறிவு வேண்டும் திறமை வேண்டும் துணிவு வேண்டும் இதெல்லாவற்றையும் விட பணத்தில் ஆசை வரக்கூடாது ?

அப்படியா தாத்தா ஓகே ஓகே நானும் பிற்காலத்தில் சாதிப்பேன் இந்த நாட்டை திருத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கு என்றாள்

அப்படியே ஆகட்டும் பேத்தி உன் கனவு சிறக்க இந்த தாத்தா தெய்வமா போனாலும் உனக்கு துணையா இருப்பேன். அது என்னான்னு சொல்லிடு கண்ணு 

சொல்ல மாட்டேனே அது தான் சஸ்பென்ஸ் ஒகே J.P. எனக்கு துக்கம் வருது நான் தூங்குறேன் 

என்ன மித்ரா தாத்தாவ J .P னு கூப்பிடாதேனு எத்தன தடவ சொல்லிருக்கேன் என்றாள் அம்மா 

போங்கம்மா ஜெயிலர் போலிஸ் என்பதால தாத்தாவ செல்லமா கூப்பிடுறேன் உங்களுக்கு  பிடிக்கலையா ?

மறு நாள் காலை நல்லபடியாக போனது காலங்கள் செல்லச் செல்ல மித்ரா பெரிய படிப்புக்காக வெளி நாடு சென்றாள் ஐந்து வருடங்கள் கழித்து மித்ரா தாத்தா இறந்துவிட்டார் பாவம் மித்ரா இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை 

வருடங்கள் நகர்ந்தது கை நிறைய பணத்துடன் மித்ரா இந்தியா வந்தாள் தனது நண்பர்களை அழை பேசியில் அழைத்தாள் தனது புது திட்டத்தை அவர்களிடம் கலந்து பேச ஆரம்பித்தாள்

நம்ம நாட்டுல பணம் தான் பெரிய பிரச்சனைனு எல்லாருக்கும் தெரியும் அதனாலா நாம எல்லோரும் சேர்ந்து ஒரு வங்கி ஆரம்பச்சி அதுல வட்டிய அதிகப்படித்தினால் மக்கள் எல்லாரும் நம்ம வங்கியிலே வந்து பணத்தை போடுவாங்க அந்த பணத்த வச்சி ஒவ்வரு ஊரிலும் ஒரு தனியார் கம்பெனி ஆரம்பச்சி இதுல வருற பணத்த அதுல இன்வெஸ்ட் பண்ணி கிடைக்குற லாபத்தை மக்களுக்கு வட்டியா கொடுத்தா நமக்கும் நஷ்டம் இல்லை அவுங்களும் நம்பிக்கையா நம்ம வங்கியிலே  பணத்தை டேபோசிட் பண்ணுவாங்க இந்த திட்டம் ஓகேவா.

ம்ம்ம்ம் ஓகே ஓகே ஆனால் என்ன பெயர் வைக்க 

தீபா ஒரு ஐடியா வச்சிருக்க அதச் சொல்லுறேன் உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே 


ம்ம்ம் சொல்லு மித்ரா 

அதாவது நம்ம நாட்டுல எல்லோரும் எல்லாப் பெயரையும் வைக்கிறாங்க எ.காட்டு நேரு காந்தி நேதாஜி எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் சூர்யா தனுசு இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் அம்பேத்கார் என்று யாரவது பெயர் வைக்கிறார்களோ இல்லையே அவரும் நம் நாட்டுக்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் ஏன் அவர ஒதுக்கணும் சொல்லுங்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால?அவர மீண்டும் நினைவூட்டும் படி அம்பேத்கார் வங்கி என்று வைக்கலாமா ?

ஏன் அவரோட பெயரை யாரும் தரக்குறைவா அழைக்க கூடாது என்று மதிப்பு வைத்திருக்கலாமே. நாம ஏன் அத தப்ப நினைக்கணும் சொல்லு மித்ரா 

இருக்கலாம் ரவி இப்போம் அது விவாதம் இல்லை நாம என்ன பெயரில் வங்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே கருத்து ஓகே 

ம்ம் sorry மோகன் 

டேய் மச்சான் sorry எல்லா வேணாம் எனக்கு ஒரு யோசனை சொல்லட்டா 

ம்ம்ம் சொல்லுடா 

பி ஆர் அம்பேத்கார் அப்படினா BRAT Bank இப்படி வைக்கலாம் இல்லை என்றால் அவரோட இன்னொரு பெயர் "சிற்பி " வங்கி என்று வைக்கலாமா ?

வாவ் சூப்பர் மோகன் BRAT Bank (B.R.Ambedhar TamilNadu Bank) இது நல்லா இருக்கு எனக்கு ஒகே எல்லாருக்கும் ஓகே வா ?

ம்ம்ம் எங்களுக்கு ஒகே மித்ரா 

ஓகே ஒரு நல்ல நாள் பார்த்து இதுக்கான Formalities Documents எல்லாம் தயார் பண்ணிடு ஜீவா 

ம்ம் ஓகே மித்ரா அப்பா கிட்ட இதபத்தி ஏற்கனவே பேசிட்டேன் அவரும் அரசியலில் இருக்குறதால நமக்கு பாதகமாத்தான் முடியும் don't worry வெற்றி நமக்கே 

எல்லாம் நல்ல படியாக முடிந்தது அவர்கள் நினைத்தது போல் வங்கியை ஆரம்பித்தார்கள் முதலில் மக்கள் நம்பவில்லை பின் ஒவ்வொருவறாக சென்று மக்கள் நலனுக்காகவே இந்த ஏற்பாடு செய்கிறோம் நம் நாடு மறுபடியும் அடிமை பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி எங்களை நம்பி நீங்கள் தாரளமாக பணம் போடலாம் நாங்கள் ஏமாற்ற மாட்டோம் நீங்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி கைகொடுங்கள் நாங்கள் கை தூக்கி விடுவோம் என்று வாக்களித்தார்கள் 

நகை கடன் விவசாயக்கடன் கல்வி கடன் இவற்றுக்கு வட்டி மிகவும் குறைந்த வட்டி தான் பணம் Deposit செய்தால் அதற்கான வட்டி அதிகம் நீங்கள் கஷ்டபட்ட குடும்பம் என்றால் அதற்கான வட்டி விகிதம் வித்தியாசம் என்றார்கள் எல்லாரும் வந்து பணத்தை குவித்தார்கள் நாளடைவில் BRAT Bank கிளையானது , கிளை வட்டமானது வட்டம் மாவட்டமானது மாவட்டம் மாநிலமானது 

இவர்கள் முன்னேற்றத்தை கண்டு மற்ற வங்கிகளும் இவர்கள் வங்கி போல் செய்யல பட தொடங்கியது மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியோடும் வசதியோடும் வாழத்தொடங்கினர்.எங்குமே பண வீக்கம் இல்லாமல் இருந்தது. முதல்வர் இவர்களின் வெற்றியை பாராட்டி ஐந்து வருடத்தில் சாதித்த இளம் கலைஞர்கள் என்ற விருதை அனைவருக்கும் வழங்கினார்.

விருதை கொண்டு மித்ரா தனது தாத்தா கல்லறைக்கு சென்றாள் அங்கு தன் விருதை அவர் காலடியில் வைத்து வணங்கினாள் தாத்தா ஆசி வழங்கினார் பேத்தியே அன்று சஸ்பென்ஸ் என்று சொல்லும் போதே எனக்கு புரிந்தது அதற்காக இவ்வாறு சாதிப்பாய் என்று நானே நம்பவில்லை மித்ரா மிகவும் சந்தோசம் ஆனால் உன்னுயிர் உன் கண்ணில் தெரிய மறந்துவிட்டாயே என்ற குரல் கேட்டதும் கண்ணீர் வடித்தல் வடித்த கண்ணீரை இரு கரங்கள் வாங்கியது பார்த்தால் அருகில் சரண் வியந்து நின்றாள் நீ எப்படி இங்கே ?

அதுவா அமெரிக்காவில் படிக்கும் போது உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நீ என் காதலை ஏற்கவில்லை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த போது நீ யாரு பேச்சையும் கேட்கமாட்டாய் ஆனால் உன் தாத்தா பேச்சை எபோதும் தட்ட மாட்டாய் என்று தெரிந்தேன் உடனே நம் காதலை உன் தாத்தாவிற்கு எடுத்துரைத்தேன் அப்போது அவர் கூறினார் 

எனது பேத்தி பெருசா சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாள் உன் காதலால் அவள் சாதனைக்கு தடங்கல் வந்து விடக் கூடாது என்று நினைக்கிறாள் அதனால நீ உண்மையிலே அவள் மேல் உயிரையே வைச்சிருக்க என்றால் அவள் சாதிக்கும் வரை காத்திரு நிச்சையம் உன் காதலை நினைத்து பார்ப்பாள் அப்போது அவளை கை விட்டுவிடாதே என்றார் அதே போல் இன்று நீ தனித்து நின்று நம் காதலை எண்ணி கண்ணீர் விடுகையில் நான் வந்து நின்றேன் இப்போது சொல் என் காதலை ஏற்றுக் கொல்வாயா ?

மித்ரா ஓ வென்று அழுதுகொண்டே சரணின் தோளில் சாய்ந்தாள் உன்னை எவ்வளவு 

உதாசீனப்படுத்தினேன் அதையெல்லாம் மறந்து என் தாத்தாவின் வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி என்னை மன்னித்துவிடு சரண். 

மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை மித்ரா உன் மனதில் நான் தான் இருக்கிறேன் என்று எனக்கு அப்பவே தெரியும் அதனால் தான் தைரியமாக உனக்காக காத்திருந்தேன் என்றான் 

இருவரும் தாத்தா கல்லறைக்கு மாலை அணிவித்து நன்றி கூறி சென்றார்கள் தாத்தாவும் உங்கள் காதல் நிறைவேறியது மித்ரா கனவும் விடை பெற்றது இருவரும் இல் வாழ்க்கை தோட்டத்தில் கால் வைத்து நலமுடன் சிறக்க ஆசி வழங்கினார் .







mhishavideo - 145